என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Roof house"
- வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
- தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் கூனக்கா பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது வீடு கூரை வீடு ஆகும். இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள். பின்னர் அதிகாலை நேரம் வீட்டில் புகை வருவதை கண்ட அனைவரும் எழுந்து வீட்டின் வெளியே வந்தனர்.
அப்போது வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைக்க முயற்சி த்தனர். இருப்பிடம் மள மள என கூரை வீடு என்பதால் பற்றி கொண்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் தீயில் கருகி சேதமானது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஆதார் கார்டு, பள்ளி, வீட்டு பத்திரங்கள், சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது.
முதற்கட்ட விசாரணை யில் மின் கசிவின் காரண மாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய அலுவ லர்கள் தெரிவித்தனர்.
- காமராஜ் குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
- 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 38). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமராஜ் தனது குடும்பத்துடன் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது, கூரை வீடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. காமராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.
இதில் காமராஜுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளியின் கூரை வீடு எரிந்து நாசமானது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
மயிலாடுதுறை:
சீர்காழி அருகே எடமணல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆமபள்ளம் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது38).
கூலித் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு முகேஷ்குமார் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
இதில் வீட்டில் இருந்த பீரோ, நகை, பணம், உடைகள், உணவுப் பொருள்கள், கட்டில், மெத்தை, சைக்கிள், டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது.
- அசோக்குமார் எம்.எல்.ஏ. காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.
பேராவூரணி:
சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி ஒத்தக்கடையில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. தகவலறிந்த அசோக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ. 5,000-ம் நிவாரணம் வழங்கினார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீது, தனபால், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா ராஜேந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
- சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்
- வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மன்னிப்பள்ளம் தெற்குத் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர்.
இவருடைய மனைவி சுபா (வயது 34).
பாஸ்கர் கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்.
அன்று இரவு பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் சுபாவின் வீடு எரிந்துகொண்டு இருப்பதாக செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சுபா தனது சகோதரருடன் மன்னிப்பள்ளம் சென்று பார்த்தபோது தனது வீடு முற்றிலும் எரிந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ எவ்வாறு பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.
- நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம். ஜாம்புவா னோடை ஊராட்சி மேல க்காடு பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.
வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.
தகவல் அறிந்த ஜாம்புவா னோடை கிராம நிர்வாக அலுவலர் புர்ஷோத்தமன், ஊராட்சி மன்ற தலைவர் லதாபாலமுருகன், துணை தலைவர் ராமஜெயம், , ஒன்றிய கவுன்சிலர் கல்யாணம் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேதமான வீட்டை பார்வையிட்டனர்.
- திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
- சந்திரசேகரன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது சகோதரர் செல்லப்பாண்டியன். இருவரும் இசை கலைஞர்கள். அருகருகே கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இது குறித்து தஞ்சை மற்றும் திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 2 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து விட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.
இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக வீடு தீப்பற்றி எரிந்தது என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்