search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "running bus"

    • ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    திருமங்கலம்

    மதுரை தேனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. மதுரை ஆயுதப்படை யில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து கடந்தாண்டு உயிரிழந்தார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே தனலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட் டியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேனூருக்கு கிளம் பினார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தேனூர் வழியாக செல்லும் ஊமச்சிகுளம் டவுன் பஸ் சில் ஏறி தனலட்சுமி அமர்ந் திருந்தார்.

    அப்போது அந்த பஸ்சில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி பஸ் சில் இருந்த மர்ம நபர் ஒருவர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்த பிறகே இதனை உணர்ந்த தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ஓடும் பஸ்களில் பர்தா அணிந்து நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஓடும் பேருந்துகளில் பலரிடம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). இவர் பேருந்தில் பயணம் செய்தார். அப் போது அவருக்கு அருகில் பர்தா அணிந்து வந்தி ருந்த 2 பெண்கள் பயணம் செய்த–னர்.

    மேலும் அந்த 2 பேரும், சரோஜாவுக்கு உதவி செய் வது போல் தங்களை காட் டிக்கொண்டனர். அதனை நம்பிய சரோஜாவும் அதனை ஏற்றுக்கொண்டார். இதையடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் கீேழ இறங்கி சென்றனர்.

    பின்னர் சரோஜா பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மாய மாகி இருந்தது. அப்போது தான் அருகில் நின்ற பெண் கள் திருடிது தெரிந்தது. இதுகுறித்து சரோஜா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதேபோல், அருப்புக் கோட்டை தனியார கல்லூரி–யில் படித்த வருமை் மாணவி நந்தினி என்பவர் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அரு கில் உரசியபடி நின்ற வாறு பர்தா அணிந்து கொண்டு பயணம் செய்த 2 பெண்கள் பாலவநத்தம் பஸ் நிறுத்தத் தில் இறங்கி சென்றனர்.

    அதன்பின்னரே நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் செயின் திருடப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் விருதுந கர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசபெரு மாள் உத்தரவின்பேரில் விருதுந கர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா தலைமை யில் தனிப்படை அமைத்து தீவிரமாக காண்காணித்து வந்தனர். அப்போது விருது நகர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பர்தா அணிந்து நின்ற 2 ெபண்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மதுரை வண்டியூரை சேர்ந்த ரேகா (38), அமலா (37) என்பதும், ஓடும் பேருந்துகளில் பலரி டம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிட் இருந்து திருடிய நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • ஓடும் பஸ்சில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    • கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார்(வயது46). இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் ராஜ பாளையம் பி.டி.ஆர்.நகரில் வசிக்கும் இவரது உறவினர் கணேசனை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் ராஜ பாளையம் வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி சென்றனர். ஆனால் கணேசன் இறங்கவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் பாக்யராஜ், அவரது அருகில் சென்று பார்்த்தபோது பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் அட்டை, போன் அழைப்பு களை வைத்து அவரது உறவினரான கணேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த கணேசன், ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ண குமாரை கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    பஸ்சில் பயணம் செய்துவந்தபோதே கிருஷ்ணகுமார் இறந்தி ருக்கிறார். இதுகுறித்து கணேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருடப்பட்டது.
    • இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சமுத்திரவள்ளி(வயது48). இவர் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் தனது நகையை அடகு வைத்திருந்தார்.

    நேற்று அந்த நகையை மீட்டுக்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். பின்னர் சத்திரப்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி வீடு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்தபோது நகை வைத்திருந்த மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. அதில் ரூ.7ஆயிரம் ரொக்கமும் இருந்தது. பஸ்சில் யாரோ மர்ம நபர் கட்டைப்பையில் வைத்திருந்த மணிபர்சை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சமுத்திரவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
    • மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
    • அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.மலையனூரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி கோகிலா. சம்பவத்தன்று இவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். விருத்தாசலம் வந்து பஸ்சில் இருந்து இறங்கியபின்னர் தனது கைப்பையை கோகிலா சோதனை செய்தார். அதில் இருந்த நெக்லஸ், செயின, மோதிரங்கள் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ேபாலீசில் புகார் செய்தார். அப்போது அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல் போன நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடும் பஸ்சில் முதியவர் இறந்து போனார்.
    • இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    புதுச்சேரி:

    ஓடும் பஸ்சில் முதியவர் இறந்து போனார்.

    நாமக்கல் மாவட்டம் வேட்டுவாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது52). இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்தார்.

    இதையடுத்து அவரை உறவினர் மணி(வயது67) என்பவர் நேற்று பஸ்சில் புதுவைக்கு அழைத்து வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும் நடராஜனை இருக்கையில் இருந்து எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று காணப்பட்டார். இதைத்தொடர்ந்து நடராஜனை ஒரு ஆட்டோவில் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் . அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நடராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஓடும் பஸ்சிலேயே நடராஜன் இறந்து போனதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது உறவினர் மணி கொடுத்த புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார்.
    • அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    புதுவை மாநிலம் உழவர்கரை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் பலராமன். அவரது மனைவி கவிதா (வயது 45). இவர் மயிலாடுதுறையில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிதம்பரம் பஸ் நிலையம் வந்து இறங்கி னார். அப்போது தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார். அந்த டிராவல் பேக்கில் 10பவுன் நகை, பட்டுபுடவை ஆகியவை இருந்தது. திடீரென அந்த பெண் டிராவல் பேக்குடன் மாய மானார். அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

    மதுரை அருகே பெண் பயணியிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

    மதுரை:

    ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பாவடித் தெருவைச் சேர்ந்தவர் வெஸ்லின். இவரது மனைவி சாந்திமணி. இவர், சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அவர் கைப்பையில் 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்தார்.

    மதுரை அருகே பஸ் வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சாந்திமணியின் கைப் பையை திருடிக்கொண்டு நைசாக தப்பினார்.

    மதுரை வந்திறங்கிய சாந்திமணி, கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஓடும் பஸ்சில் இருந்து தவறி வெளியே விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியை சேர்ந்த நல்லமுத்து என்பவரது மனைவி ‌ஷர்மிளா (வயது 37). இவர் பெருந்துறைையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு தனுஷ்ராம் (9), மோகபிரசாத் (10) என்ற இரு மகன்கள் உள்ளனர். ‌ஷர்மிளாவின் தாயாரான சேலம் மாவட்டம், ஓமலூர், வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தாண்டாக் கவுண்டர் என்பவரது மனைவி செல்வம் (55) பெருந்துறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.

    பள்ளியில் தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் தனது பேரன்கள் இருவரையும் தனது ஊருக்கு கூட்டி கொண்டு திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஏறினார்.

    இந்த பஸ் பெருந்துறை அடுத்த வெங்கமேடு பகுதியில் சென்ற போது, பஸ்சின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் திடீரென நிலை தடுமாறி பஸ்சில் இருந்து வெளியே தவறி விழுந்தார்.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    உடன் வந்தவர்கள் அவரது வீட்டிற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ‌ஷர்மிளா தனது தாயாரின் உடலைக் கண்டு கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

    தாராபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தாராபுரம்:

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆலம். இவரது மனைவி ரூபினா (வயது 22). ஆலம் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி பூலாம்பட்டியில் உள்ள மரிச்செலம்பு என்ற கிராமத்தில் கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    ரூபினா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வார். இன்று காலை ரூபினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இன்று காலை தொப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் ஏறினார். பஸ் ஏறிய சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு பிரசவ வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம்போட்டு துடித்தார்.

    இதனை அறிந்த சக பயணிகள் இது குறித்து கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தெரியப்படுத்தினர். உஷாரான அவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால் போதிய அவகாசம் இல்லை. இதனால் பஸ்சை மற்ற நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் வழியில் உள்ள தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வேகமாக ஓட்டிச்சென்றனர். இது குறித்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே கர்ப்பிணிக்கு மேலும் வலி அதிகமானது. சக பெண் பயணிகள் ரூபினாவை சூழ்ந்து கொண்டனர். ஆண் பயணிகள் ஒதுங்கி வழிவிட்டனர். குழந்தையின் தலை வெளியே தெரிய ஆரம்பித்தது.

    மின்னல் வேகத்தில் பஸ் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு தயாராக இருந்த டாக்டர் குழுவினர் கர்ப்பிணியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    திருச்சியில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.20 லட்சத்தை வாலிபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருச்சி:

    திருச்சி ஆனந்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் சென்றார். அப்போது அவர் பையில்  ரூ.1.20 லட்சத்தை வைத்திருந்தார். அதனை பஸ்சில் பயணித்த வாலிபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். 

    இந்த நிலையில் பாலக்கரை ரவுண்டானா அருகே செல்லும் போது திடீரென அந்த வாலிபர், வடிவேல் வைத்திருந்த பையை  பறித்துக்கொண்டு, பஸ்சில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். பணத்தை பறிகொடுத்த வடிவேல் இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்தை பறித்து சென்றது  பாலக்கரை கீழப்புதூர் ரோடு பகுதியை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.1.20 லட்சத்தை  பறிமுதல் செய்தனர். 
    ×