என் மலர்
நீங்கள் தேடியது "sales"
- இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
- சராசரி விலை ரூ.84.65.ஏலத்தில் மொத்தம் 105 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 6.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வார ஏலத்துக்கு 10,371 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 4,430 கிலோ. விலை கிலோ ரூ.20.80 முதல் ரூ.30.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.29.65.74 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,282 கிலோ. விலை கிலோ ரூ.66.15 முதல் ரூ.88.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.84.65.ஏலத்தில் மொத்தம் 105 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.3.11 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- இல்லம் தேடிச்சென்று பண்னை காய்கறிகள் விற்பனை செய்திடும் வகையில் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி முதல் -அமைச்சரால் கடந்த 7-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
- முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதிக்கு 10 வார்டுகளுக்கு 1 நடமாடும் காய்கனி வாகனம் என 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மேயர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம்:
தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நுகர்வோர்களுக்கு இல்லம் தேடிச்சென்று பண்னை காய்கறிகள் விற்பனை செய்திடும் வகையில் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி முதல் -அமைச்சரால் கடந்த 7-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதிக்கு 10 வார்டுகளுக்கு 1 நடமாடும் காய்கனி வாகனம் என 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மேயர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் காய்கறிகளின் தரம் மற்றும் விற்பனை விலை குறித்தும் கேட்டறிந்தார்.
இல்லம் தேடி வரும் நடமாடும் காய்கனி அங்காடியில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட கடலை எண்ணை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை போன்ற வீட்டு உபயோகத்திற்கான பொருட்களும் விற்பனை செய்யப்படும். நடமாடும் காய்கனி வாகனத்தில் நுகர்வோருக்கு உழவர் சந்தை விலையிலேயே காய்கறிகள் கிடைக்கும். எனவே பொதுமக்கள் தரமான காய்கறிகளை மலிவான விலையில் பெற்று பயன்பெறுமாறு மேயர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி, இணை இயக்குநர் வேளாண்மை சிங்காரம், துணை இயக்குநர் ( வேளாண் வணிகம் ) பாலசுப்பிரமணியன், விற்பனை குழு முதுநிலை செயலாளர் கண்ணன், தாதகாப்பட்டி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மகேந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவகுமார், தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
- விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.
இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 5,689 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 2,506 கிலோ. விலை கிலோ ரூ.18.25 முதல் ரூ.27.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.26.80.13 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 286 கிலோ. விலை கிலோ ரூ.60.90 முதல் ரூ.83.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.81.15.
ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 22.45 குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து 103 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.00-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு,
அதேபோல் 107.32 குவிண்டால் எடை கொண்ட 224 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.69-க்கும், சராசரி விலையாக ரூ.88.36-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.99-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 495-க்கு விற்பனையானது.
அதேபோல் 21.36 குவின்டால் எடை கொண்ட 29 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.136.19-க்கும், குறைந்த விலையாக ரூ.110.69 -க்கும், சராசரி விலையாக ரூ.132.39-க்கும் என ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்து 590-க்கு விற்பனையானது.
12.69 1/2 குவிண்டால் எடை கொண்ட 39 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்று இருக்கு ரூ.75.60-க்கும், குறைந்த விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என ரூ. 94 ஆயிரத்து 708-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.
- சேலம் குகை, மாரியம்மன் கோவில் மெயின் ரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 25- ற்கும் மேற்பட்ட கலர் கோலப்பொடிகள் விற்கும் கடைகள் உள்ளன. அதுபோல் செவ்வாய்ப்பேட்டை, கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் கோல பொடிகள் விற்கப்படுகிறது.
- பொங்கல் பண்டிகை யையொட்டி வீடுகளுக்கு வெள்ளை அடிக்கும் பணியிலும் மக்கள் ஈடுபட தொடங்கி உள்ளனர். இதனால் சுண்ணாம்பு, பெயிண்டு உள்ளிட்ட வற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
அன்னதானப்பட்டி:
மார்கழி மாதம் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, தொடங்கி பொங்கல் பண்டிகை வரை பெண்கள் தங்கள் எண்ணங்களை பெரிய பெரிய வண்ண கோலங்களாக , இட்டு வீடு வாசலை அலங்கரிப்பது வழக்கம்.
சேலம் நெத்திமேடு, அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 20- க்கும் மேற்பட்ட கோலப் பொடிகள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. கடைக்காரர்கள் அங்கிருந்து கலர் கோலமாவுகளை வாங்கி வந்து தங்களது இடங்களில் விற்பனை செய்வர்.
அந்த வகையில் சேலம் குகை, மாரியம்மன் கோவில் மெயின் ரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 25- ற்கும் மேற்பட்ட கலர் கோலப்பொடிகள் விற்கும் கடைகள் உள்ளன. அதுபோல் செவ்வாய்ப்பேட்டை, கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் கோல பொடிகள் விற்கப்படுகிறது.
இது குறித்து கோலப்பொடி கடையினர் கூறுகையில், கலர் கோலப்பொடிகள் அளவைப் பொறுத்து ஒரு பாக்கெட் ரூ.3, ரூ.5, ரூ.7, ரூ.10 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. வெள்ளை கோலமாவு ஒரு பாக்கெட் ரூ.100- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் சமயம் என்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கோலப்பொடிகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் கோலப்பொடிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை விற்பனை விறுவிறுப்பாக இருக்கும்". இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொங்கல் பண்டிகை யையொட்டி வீடுகளுக்கு வெள்ளை அடிக்கும் பணியிலும் மக்கள் ஈடுபட
தொடங்கி உள்ளனர். இதனால் சுண்ணாம்பு, பெயிண்டு உள்ளிட்ட வற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
- வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.
ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று முதல் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது. காலை முதலே வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபடத் தொடங்கினர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனை நடைபெறுவதை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏராளமான பொதுமக்கள் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்தனர்.
- ஒரு ஜோடி மஞ்சள் கொத்து அதிகபட்சமாக ரூ.40-க்கு விற்பனை ஆனது.
- மஞ்சள் கொத்து விற்பனையும், விலையும் நல்ல நிலையில் இருக்கும்.
பூதலூர்:
பொங்கல் பண்டிகை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும்.
இந்நாளில் புதிய மண் பானையில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி மண் அடுப்பில் புத்தரிசி, வெல்லம் போட்டு பொங்கலிடுவர்.
பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியன முக்கியமானவை ஆகும். அதன்படி, திருக்காட்டுப்பள்ளி அடுத்த வளப்பகுடியில் மஞ்சள் கொத்து பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
மஞ்சள் கொத்து பசுமையாக கட்ட வேண்டும் என்பதற்காக பொங்கலுக்கு முதல் நாளில் இருந்து விற்பனைக்கு வரும்.
கடந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் கொத்து அதிகபட்சமாக ரூ.40-க்கு விற்பனை ஆனது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் மஞ்சள் கொத்து விற்பனையும், விலையும் நல்ல நிலையில் இருக்கும் என்பதால் பயிரிட்ட விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
- மண்பானைகளில் அழகுக்கேற்ப ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புகட்டிகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
பொங்கல் பானைகள்
பொங்கலையொட்டி பாளை, டவுன் மார்க்கெட்டுகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பொங்கல் வைப்பதற்காக மண் அடுப்புகள், மண் பானைகள் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை, திருச்செந்தூர் சாலை, சட்டக்கல்லூரி பகுதியில் புதுவரவாக பஞ்சவர்ண பானைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த பானைகளை கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்.
மண்பானைகளில் அழகுக்கேற்ப ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புகட்டிகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகள் குவிந்தன
பொங்கலையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கிழங்கு வகைகள் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும், மூடை மூடைகளாக வாகனங்களில் டவுன் மார்க்கெட், பாளை மார்க்கெட்டுகளுக்கு வந்து குவிந்துள்ளது. அவற்றை சிறுவியாபாரிகள் வாங்கி கடைகளுக்கு வாங்கி சென்றனர்.
இதேபோல பொங்கல்படி கொடுப்பதற்காகவும், காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வரத்து அதிகமாக இருந்த போதிலும், கூட்டம் அலைமோதியதால் காய்கறிகள் விலை நேற்றைவிட சற்று அதிகரித்து காணப்பட்டது.
கரும்பு கட்டுகள்
ெபாங்கலையொட்டி தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்ேவறு இடங்களில் இருந்து நெல்லை சந்திப்பு, டவுன், பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் பகுதிகளுக்கு கரும்புகள் கட்டு கட்டுகளாக லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
10 எண்ணிக்கைகள் கொண்ட கரும்புகள் ரூ.400க்கு விற்கப்படுகிறது. ஒரு கரும்பின் விலை ரூ.40 க்கு விற்கப்படுகிறது.
மஞ்சள் குலைகள்
பாளையங்கோட்டை, அம்பை, சேரன்மகாதேவி பகுதியில் இருந்து விற்பனைக்காக மஞ்சள் குலைகள் மார்க்கெட்டு களுக்கு வந்துள்ளது. ஒரு ஜோடி மஞ்சள் குலைகள் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
இதேபோல் பாளை ராஜகோபாலசுவாமி கோவில் மற்று டவுன் உள்பட மாநகரின் பல்ேவறு இடங்களில் பனை ஓலைகள் விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பனங்கிழங்கு
இதற்காக சீவலப்பேரி மற்றும் பனை ஓலைகள் கொண்டு வரப்பட்டது. ஒரு பனை ஓலை ரூ.40 வரை விற்க்கப்படுகிறது. இதேபோல் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்குகள் ரூ.60-க்கும், 50 கிழங்குகள் கொண்ட கட்டுகள் ரூ.110-க்கும் விற்கப்படுகிறது.
அம்பை, கல்லிடைக்கு றிச்சி, சேரன்மகா தேவி, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
சீர்வரிசை பொருட்கள்
புதுமன தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுப்ப தற்காக சீர்வரிசை பொருட்கள், நகைகள், ஜவுளிகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக இன்று கடைகளிலும் பொதுமக்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.
இதனால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் திருவிழா போல் கூட்டம் இருந்தது.
- 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும்.
- ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
சேலம்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து
கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து
வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள
வலசையூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, அடி மலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்கயிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் செங்கரும்பு மற்றும் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
- திருக்காட்டுப்பள்ளி பகுதியை சுற்றியுள்ள வாழை விவசாயிகள் விளைவித்த பூவன், பச்சைநாடன், ரஸ்தாலி ஆகிய ரகங்களை விற்பனை செய்தனர்.
பூதலூர்:
பொங்கல் பண்டி கையை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி பாசன பகுதிகளில் ஏராளமான பரப்பில் செங்கரும்பு மற்றும் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக அரசு கொள்முதல் செய்தது போக எஞ்சியுள்ள கரும்புகளை விவசாயிகள் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல திருக்காட்டுப்பள்ளி பகுதியை சுற்றியுள்ள வாழை விவசாயிகள் தங்கள் விளைவித்த பூவன், பச்சைநாடன், ரஸ்தாலி ஆகிய ரகங்களை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள வாழ ஏலமையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று திருக்காட்டுப்பள்ளி வாழை ஏலமையத்திற்கு ஏராளமான பூவன், ரஸ்தாலி தார்கள் வந்திருந்தன.
பச்சைநாடன் சற்று குறைவாகவே வந்திருந்தது.
விற்பனைக்கு வந்து இருந்த தார்கள்விவசாயிகளுக்கு கட்டுப்படியான அளவிலேயே ஏலம் போனதாக தெரிவித்தார்.
அதேபோல மஞ்சள் கொத்து விற்பனையும் செங்கரும்பு விற்பனையும் மெதுவாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் மஞ்சள் கொத்து, செங்கரும்பு, மற்றும் வாழை விற்பனை முழு வீட்டில் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
- சேலத்தில் உப்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
- பொங்கல் தினத்தன்று உப்பு வாங்கி சாமிக்கு வைத்து பூஜை செய்து வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் உப்பு விற்பனை ஜோராக நடைபெற்றது.
அன்னதானப்பட்டி,
தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையையொட்டி சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை மளிகைக் கடையில் வாங்கி வந்து, அவற்றை கோவில்களில் சாமிக்கு வைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.
தொடர்ந்து அவற்றை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வங்கள், பணம் பெருகும் என்பது மரபு வழி ஐதீகம் ஆகும். இதனால் நேற்று முன்தினம் சூரியப் பொங்கல் , நேற்று மாட்டுப்பொங்கல், இன்று கரி நாள் ஆகிய தினங்களில் சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள மளிகைக் கடைகளில் உப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் சாலையோரங்களிலும் தற்காலிக உப்பு கடைகள் அதிகளவில் முளைத்து இருந்தன. சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகளில் உப்பு வாங்க பெண்கள் கூட்டம், கூட்டமாக அதிகளவில் குவித்தனர்.
- அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா்.
- சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.
அவினாசி:
சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சேவூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.
இதைத்தொடா்ந்து கடை உரிமையாளரான மோ்வின் (வயது 40) என்பவரை கைது செய்தனா். இதே போல சேவூா் கைகாட்டி பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.