என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sandal"
- தாய் தந்தையை பொதுவெளியில் தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை.
- கடந்த 1 வருடமாக வீட்டிற்குள் விடாமல் கொடுமைப்படுத்தியதாக மகன் மீது தாய் குற்றச்சாட்டு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பொதுவெளியில் தனது தாய் தந்தையை மகன் ஒருவர் செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பெற்றோரை பொதுவெளியில் தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தாய் தாஜா பேகம் அளித்த புகாரின் பேரில் அவரது மகன் முகமது அஷ்ரப் வானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த புகாரில், கடந்த 1 வருடமாக தனது வீட்டிற்குள் விடாமல் வெளியே துரத்தி கொடுமைப்படுத்தியதாக அவரது மகன் மீது தாஜா பேகம் குற்றம் சாட்டியுள்ளார்.
The incident in Srinagar, captured in this viral video, is a tragic reflection of how far we have fallen. A son mercilessly beating his parents serves as a stark reminder that Qayamat may not be far. Our faith teaches us that a father is the gateway to Jannah, and 1/2 pic.twitter.com/S7nImyg5kM
— Pirzada Shakir (@pzshakir6) September 7, 2024
- மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை.
தான் போட்டியிட்டு வென்ற தொகுதியான வாரணாசி தொகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றிருந்தார். அப்போது மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், மோடியின் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தவறுதான். ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்கள், தங்கள் பிரதிநிதி மீது எவ்வளவு அதிருப்தி அடைந்திருப்பர் என புரிந்துகொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
- குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
- எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
- அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள்.
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உரையாடிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் எங்களை 'கெட்ட சகுணம்' என கூறுவார்கள். செருப்பு இல்லாமல் ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்?' என கேட்பார்கள் என ஒரு பெண் கூறுகிறார்.
அதற்கு, உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர்? என்று ராகுல்காந்தி கேட்கிறார். மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன என அப்பெண் பதில் அளிக்கிறார்.
மேலும், தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு சென்றால் கூட மணிக்கணக்கில் காத்திருக்க சொல்வார்கள். தூரமா சென்று உட்கார் என துரத்துவார்கள் எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
அதற்கு, யார் உங்களை இப்படி செய்கிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி கேட்க, உயர்சாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாகூர், அகிர் சமூகத்தினர் தான் எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.
அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள். இல்லையென்றால் கால்வாய் அருகே அமர சொல்வார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது சார். எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது
இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கி கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. இது சுதந்திர நாடு என சொல்கிறார்கள். ஆனால் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.
நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன்... இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன் என அப்பெண் சொல்ல, செருப்பை அணிந்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்கு ராகுல்காந்தி செருப்பு அணிவிக்கிறார்.
இறுதியில் எங்கள் பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அப்பெண் ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைக்கிறார்.
வட மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்களின் மோசமான நிலையை இந்த வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது.
- பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.
- விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.
திருமலை:
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அங்கு பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.
எனவே, அந்த மையங்களில் செருப்புகள் மற்றும் ஷூக்களை பக்தர்கள் பத்திரப்படுத்திவிட்டு, கோவிலுக்கு சென்று ஏழுமலை யானை தரிசித்துவிட்டு வந்து எடுத்துச் செல்வது வழக்கம்.
இதற்கிடையில், தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சரியான கண்காணிப்பு இல்லாததால், பக்தர்கள் விட்டுச் செல்லும் விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில், திருமலையில் நான்கு மாட வீதிகள் அருகே அமைந்துள்ள காலணி காப்பகத்தில், செருப்புகளை சில பக்தர்கள் வைத்து, அவற்றுக்கு பூட்டுப் போட்டு சென்றனர்.
இதை பார்த்த சிலர், 'இவ்வளவு பெரிய கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தான நிர்வாகத்தால் செருப்புக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா?' என கேள்வி எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்