என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sanitation worker"
- சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார்.
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சினிமா தியேட்டர் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினர். அப்போது உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை.
எனவே அங்கு வரும் குப்பையில் உள்ளதா? என்று பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்துவிட்டதாக தகவல் தரப்பட்டது.
இதையடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க காப்பை பெற்றுச் மகிழ்ச்சியுடன் சென்றனர். தியேட்டரில் தவறவிட்ட தங்க காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
- லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
- விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவான்மியூர் ஆர்.டி.ஒ. அலுவலம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சிக்னல் சந்திப்பில் சிவகாமி என்ற தூய்மை பணியாளர் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த கார் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டார். அவர் மீது சரக்கு லாரி ஒன்று ஏறி இறங்கியது. மேலும் லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்தார். இதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்காக கடந்த 1996-ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்த 366 குடியிருப்புகள் பழுதடைந்து விட்டது.
அடிக்கல் நாட்டு விழா
இந்த காரணத்தினால் அவை சமீபத்தில் முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடத்தில் புதிதாக மீண்டும் 408 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு அழைப்பா ளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ரூ.53.19 கோடி நிதி
இந்த குடியிருப்புக்கு ரூ.53.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மானியமாக ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியமாக ரூ.7 லட்சமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வசித்த 365 பயனாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் பயனாளி பங்களிப்பு தொகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருக்கும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீர் மாநக ராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை வசதியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., பாளை தொகுதி எம்.எல்.ஏ அப்துல் வகாப், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், இந்திராணி, நிர்வாக பொறியாளர் சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் மாடசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொரு ளாளர் சித்திக், ஒன்றிய செய லாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், மாவட்ட கவுன்சி லர் கனகராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவுவிடம், சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் தகுதியை மீறி பேசி உள்ளதாக கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்தில் விதிப்படி யும், சட்டப்படியும் மட்டுமே அவை நடவடிக்கைகள் நடந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாகவோ, பேரவை விதிகளுக்கு புறம்பாகவோ எந்த நடவடிக்கையும் சட்டமன்றத்தில் நடை பெறவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்திற்கு வராத காரணத்தினால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.
- ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பேரூராட்சி பஸ் நிறுத்தம் கால்நடை மருத்துவமனை அருகில் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பேரூராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூ ராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், நகர செயலாளர் முத்துவீரப் பெருமாள், மாவட்ட பிரதிநிதி செங்கோட்டை யன், ஒன்றிய பிரதிநிதி சமுத்திரராஜ், அவைத்தலைவர் சுப்பையா, துணை தலைவர் அமிர்தவள்ளி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், சீதாலட்சுமி, மாரி யம்மாள், வார்டு செயலாளர்கள் ஆர்த்திகுமார், கண்ணன், ராகவன், சுடலையாண்டி, சீனிவாசன், ஞானப்பிரகாசம், பொன்ராஜ், முருகன், அன்பு துரை, ரவிக்குமார், ராஜேந்தி ரன், மேகநாதன், முத்துமாலை, செல்வராஜ், செல்லையா, சுவிசேஷ முத்து, தங்கராஜ், முத்துகிருஷ்ணன், சுப்பிர மணியன், சுப்பையா, ஜெயகோபால், மனுவேல், மோசஸ் மற்றும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
- அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.
ஈரோடு:
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). நகராட்சி தூய்மைப்பணியாளர். இவரது மனைவி மல்லிகா (49). இருவரும் கடந்த 25-ந் தேதி சொந்த ஊரானா ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுவண்டிபாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.
பின்னர் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மல்லிகா தன் கணவரை தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் பாதுகாப்பு காலணிகளை வழங்கினார்
- துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடு வீடாக குப்பைகளைச் சேரிக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காலணிகள், கையுறை, தலைக்கவசம், முக கவசம், ஒளி பிரதிபலிக்கும் சட்டை உள்ளிட்ட 6 வகையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் கட்டமாக துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் பாதுகாப்பு காலணிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நகரச் செயலாளர் அப்பாஸ் மற்றும் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலகம் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் அனைத்து அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர். துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்