என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Saturn"
- சரணாகதி அடைந்தவர்களை துன்பம் நெருங்க விடுவாரா மகாவிஷ்ணு?
- சனியின் ஆதிக்கத்தைக் குறைக்க பெருமாளை விரதம் இருந்து வழிபட வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். ஏன் அப்படி? அதற்கும் ஆதாரமாக ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பல காலத்திற்கு முன் பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் வறிய நிலையில் இருந்தாலும், நீதியும் நாணயமும் தவறாதவர். பெருமாளிடத்தில் மிகுந்த பக்திகொண்டவர். அவருக்கு ஜாதகப்படி ஏழரைச்சனி பிடிக்கும் காலம் நெருங்கியது. அதனால் அவர் பல துன்பங்களுக்கு ஆளாவார் என்பது அந்த பக்தவத்சலனுக்குத்தெரிந்து போனது.
தன்னையே நம்பி சரணாகதி அடைந்தவர்களை துன்பம் நெருங்க விடுவாரா மகாவிஷ்ணு? நேராக சனி பகவானிடம் சென்றார். 'நீ என் பக்தனை பிடிக்கக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சனி பகவானோ, அது என் கடமை அல்லவா? அதைச் செய்யாமல் இருக்க என்னால் முடியாதே? அதை விதித்ததும் தாங்கள் தானே?' என்று கேட்டார். சனி பகவானின் சொற்களில் இருந்த நியாயத்தை மகா விஷ்ணு உணர்ந்தார்.
திருமால் அதற்கு வேறு ஒரு மார்க்கத்தை யோசித்தார். 'சனி பகவானே... நீ என் பரம பக்தனை ஏழரை ஆண்டுக்காலம் பிடித்துக்கொள்ளாதே... ஏழரை நாழிகை மட்டுமே பிடித்துக்கொண்டு பிறகு விட்டுவிடு' என்றார். சனி பகவானும் அப்படியே செய்தார்.
இறுதியில் விட்டுச் செல்லும் போது திருமகள் அருளால் பெரும் செல்வத்தைப் பெற்றார் அந்த அந்தணர். சனி பகவானது கோபத்தையும் ஆதிக்கத்தையும் குறைக்க பெருமாள் ஒருவரால்தான் முடியும். அதனால் தான் புதனின் ராசியான கன்னி ராசியில் சூரியன் இருக்கும் சமயம் புதனின் நட்பு கிரகமான சனியின் ஆதிக்கத்தைக் குறைக்க பெருமாளை விரதம் இருந்து வழிபடுகிறோம்.
- தொண்டி, திருவாடானை பகுதிகளில் சனிப்பிரதோச விழா வழிபாடு நடந்தது.
- விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது 13-ம் நூற் றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவில்.
சனிப்பிரதோசத்தை முன்னிட்டு இந்த கோவிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், அரிசி மாவு, விபூதி, பஞ்சா–மிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.
மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தெட்சிணாமுர்த்தி, லிங் கோத்பவர்,விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் உற்சவமூர்த்தி சுவாமி வீதி உலா நடை–பெற்றது. விரதமிருந்த பெண்கள் பலர் ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர்.
பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், நெய் வேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் பிரசாத–மாக வழங்கப்பட்டது இதே போல் தொண்டி சிதம்ப–ரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சர்வ–தீர்த்தேஸ்வரர், ஒரியூர் சேயு–மானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் ஆகிய சிவா–லயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடை–பெற்றது.
- சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுகவனேஸ் வரருக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
- பிரதோஷங்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சேலம்:
சேலத்தில் உள்ள பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுகவனேஸ் வரருக்கும் நந்திகேஸ்வர ருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பிரதோஷங்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பிரதோஷத்தில் முக்கிய நிகழ்வாக சிவன்-பார்வதி சமேதமாக கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த ஆனி மாதத்தில் கடந்த 1-ந் தேதியும் நேற்றும் சனி பிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
- நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச’ யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.
குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:
1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.
2) குருச்சந்திரயோகம் : சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.
3) குரு மங்களயோகம் : குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.
4) ஹம்சயோகம் : சந்தினுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.
5) சகடயோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.
சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:
"வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!''
"நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!
என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்".
- மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சனி பிரதோ ஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் , பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
அதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டு கள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில்450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோவி லில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பா ளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் எழுந்தரு ளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்தி பெருமா னுக்கும் மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடை பெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்