search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சனீஸ்வரரின் கோபத்தை குறைத்த பெருமாள்
    X

    சனீஸ்வரரின் கோபத்தை குறைத்த பெருமாள்

    • சரணாகதி அடைந்தவர்களை துன்பம் நெருங்க விடுவாரா மகாவிஷ்ணு?
    • சனியின் ஆதிக்கத்தைக் குறைக்க பெருமாளை விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். ஏன் அப்படி? அதற்கும் ஆதாரமாக ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பல காலத்திற்கு முன் பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் வறிய நிலையில் இருந்தாலும், நீதியும் நாணயமும் தவறாதவர். பெருமாளிடத்தில் மிகுந்த பக்திகொண்டவர். அவருக்கு ஜாதகப்படி ஏழரைச்சனி பிடிக்கும் காலம் நெருங்கியது. அதனால் அவர் பல துன்பங்களுக்கு ஆளாவார் என்பது அந்த பக்தவத்சலனுக்குத்தெரிந்து போனது.

    தன்னையே நம்பி சரணாகதி அடைந்தவர்களை துன்பம் நெருங்க விடுவாரா மகாவிஷ்ணு? நேராக சனி பகவானிடம் சென்றார். 'நீ என் பக்தனை பிடிக்கக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சனி பகவானோ, அது என் கடமை அல்லவா? அதைச் செய்யாமல் இருக்க என்னால் முடியாதே? அதை விதித்ததும் தாங்கள் தானே?' என்று கேட்டார். சனி பகவானின் சொற்களில் இருந்த நியாயத்தை மகா விஷ்ணு உணர்ந்தார்.

    திருமால் அதற்கு வேறு ஒரு மார்க்கத்தை யோசித்தார். 'சனி பகவானே... நீ என் பரம பக்தனை ஏழரை ஆண்டுக்காலம் பிடித்துக்கொள்ளாதே... ஏழரை நாழிகை மட்டுமே பிடித்துக்கொண்டு பிறகு விட்டுவிடு' என்றார். சனி பகவானும் அப்படியே செய்தார்.

    இறுதியில் விட்டுச் செல்லும் போது திருமகள் அருளால் பெரும் செல்வத்தைப் பெற்றார் அந்த அந்தணர். சனி பகவானது கோபத்தையும் ஆதிக்கத்தையும் குறைக்க பெருமாள் ஒருவரால்தான் முடியும். அதனால் தான் புதனின் ராசியான கன்னி ராசியில் சூரியன் இருக்கும் சமயம் புதனின் நட்பு கிரகமான சனியின் ஆதிக்கத்தைக் குறைக்க பெருமாளை விரதம் இருந்து வழிபடுகிறோம்.

    Next Story
    ×