என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search"

    • அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது.
    • நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது. இந்த அைணக்கட்டில நேற்று மாலை நண்பர்கள் 5 பேர் குளித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ேதடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு மூழ்கியவர் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என தெரியவந்தது. அவர் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. 

    • அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் தென்பெண்ணை யாறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் நேற்று மாலை விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவரும் சக மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது விழுப்புரம் தோகைபாடி கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலு வலர் சுந்தரராஜன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகா ரிகள் வேல்முருகன், பாஸ்கரன் போட் மூல மாகவும் வீரர்கள் மாண வனின் உடலை 2-வது நாளாக தொடர்ச்சியாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் மற்றும் அதிகாரிகள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாளை பெருமாள்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது தெரியவந்தது.
    • நிவாரணமாக ரூ.6 லட்சத்தை அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் பேச்சி ராஜா(வயது 26). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது 3 பேர் கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், கடந்த 2020-ம் ஆண்டு கரையிருப்பை சேர்ந்த மாசானமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் திட்டம் தீட்டி பேச்சிராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக மானூர் அருகே வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜவேலு(வயது 30), சுதர்சிங்(30), தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்த ஹரி நாராயணன்(20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாசான மூர்த்தியின் தந்தை சுடலைமுத்து(65) கொலையாளிகள் 3 பேருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாளை பெருமாள்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

    அவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் கொலையாளிகள் 3 பேருக்கும் மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய பாளை மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே பேச்சி ராஜாவின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நிவாரணமாக ரூ.6 லட்சத்தை அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார்.

    • உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழிப் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்தி, ஜவகர், சற்குணம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் பேரூராட்சி பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது உணவகங்கள் காய்கறி மற்றும் பழக்கடைகள் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடலூரில் கோடை விழாவில் 2 சிறுமிகள் திடீர் மாயமானார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் சாலக்கரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் சவுந்தர்யா (வயது 9). அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் இவரது மகள் தாமரைச்செல்வி (9). இவர்கள் 2 பேரும் தனது உறவினரான ரேணுகா என்பவருடன் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று இரவு ரேணுகா என்பவர் தூங்கி எழுந்து பார்த்தபோது மேற்கண்ட சவுந்தர்யா மற்றும் தாமரைச்செல்வி ஆகிய 2 பேரும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவனாம் பட்டினம் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 சிறுமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் பகுதியில் இயங்கிவந்த சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் விளைவாக அந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

    இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதன்படி, பீகார் மாநில முதல்மந்திரியின் கோரிக்கைப் படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.



    இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து தங்களது விசாரணையை துவக்கினர். காப்பகத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு முழுமையான சோதனை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்த சி.பி.ஐ விசாரணையை பாட்னா உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்தும், தீவைப்பு- கல்வீச்சு வீடியோ காட்சிகளை வைத்தும், போராட்டக்காரர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது.

    போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் ஏராளமான போலீசாரும் காயம் அடைந்தனர். பொதுமக்கள் தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். அதில் லேசான காயம்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசார் 5,000 பேர் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள். இதனால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடி வெளித்தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தூத்துக்குடி போராட்டத்தில் கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்தும், தீவைப்பு- கல்வீச்சு வீடியோ காட்சிகளை வைத்தும், போராட்டக்காரர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள். அதை வைத்து வீடு வீடாக போலீசார் சென்று தேடி வருகிறார்கள்.

    இதில் சிக்கியவர்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை வரை 67 பேர் பிடிபட்டனர். அவர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் ஆஸ்பத்திரிகளிலும் போலீசார் சோதனையிட்டு வருகிறார்கள். இதில் கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் பற்றியும் அவர்களின் உறவினர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சிலரை போலீசார் பிடித்து சென்றுள்ளனர். அவர்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று காலையிலும் சோதனை வேட்டை தொடர்ந்தது. இதுவரை 200 பேர் சிக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணைக்குப் பின்னர் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும், இப்போதைக்கு 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் கைது வேட்டையில் ஈடுபட்டு வருவதால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். #Thoothukudifiring
    ×