என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "security forces"
- இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
- இந்த வன்முறையில் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72), மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைப் பொருட்படுத்தாத இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4,000 பேரை போலீசார் கைதுசெய்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்டனர்
- அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மத்திய அரசு மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் உள்ளதாக தலைமை பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். மாநில தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங்,
மணிப்பூரில் ஏற்கனவே உள்ள படைகளுடன் 10,800 வீரர்களைக் கொண்ட மேலும் 90 கம்பெனி மத்தியப் படைகள் சேர்க்கப்பட உள்ளது என்றும் அந்த வகையில் மணிப்பூரில் உள்ள கம்பெனி படைகளின் எண்ணிக்கை மொத்தம் 288 ஆக உயரும் என்று தெரிவித்தார்.
இந்த 90 படைகளில் ஏற்கனவே கணிசமாக பகுதியினர் இம்பால் வந்தடைந்துள்ளனர். மக்களின் உயிரையும் உடைமைகளைப் பாதுகாக்க, அதிக பதற்றம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட படைகளை அனுப்புகிறோம் என்று குல்தீப் சிங் கூறியுள்ளார். அனைத்து பகுதிகளையும் ஒரு சில நாளில் முற்றிலுமாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), ராணுவம், அசாம் ரைபிள்ஸ், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் சஷாஸ்த்ரா சீமா பால் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.
நவம்பர் 7 அன்று ஜிரிபாமின் ஜைரான் கிராமத்தில் ஹ்மார் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மெய்தேய் போராளிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக 20க்கும் மேற்பட்ட குக்கி போராளிகள் நவம்பர் 11 அன்று ஜிரிபாமின் போரோபெக்ராவைத் தாக்கினர்.
சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீதி இருந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு தப்பினர். அதற்கு முன்னதாக அந்த கிராமத்தில் 2 மெய்தேய் முதியவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே ஒரு கைக்குழந்தை உட்பட ஆறு பிணைக் கைதிகளின் உடல்கள் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. இதனால் மக்கள் வீதியில் இறங்கி அரசியல்வாதிகள் வீட்டை சூறையாடுவது, முதல்வர் வீட்டை முற்றுகை இடுவது என கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 2023 முதல் மணிப்பூர் வன்முறையில் 258 பேர் இறந்துள்ளனர். போலீசிடம் இருந்து திருடப்பட்ட 3000 ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
- 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டது
- பாதுகாப்பு படைக்கு அனைத்து அதிகாரமும் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இனக்கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் ஒரு வருடம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. குக்கி மற்றும் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள கிராமங்களை எரித்தும் மக்களை கொலை செய்தும் கடத்திச் செல்வதுமாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் முதல் தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிர்பாமில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
மேலும் மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது ஆசிரியை ஒருவரை சித்ரவதை செய்து உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த திங்களன்று ஜிர்பாம் பகுதியில் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போயினர். உயிருடன் எரிக்கப்பட்ட இரண்டு மெய்த்தேய் முதியவர்களின் சடலமும் அன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டு 5 நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அசாம் சில்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சில்கார் மருத்துவமனைக்கு 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக என்டிடிவி களத் தகவல் தெரிவிக்கிறது. அழுகிய நிலையில் உள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட 6 பேரில் லாய்ஷராம் ஹெரோஜித் என்ற மாநில அரசு கீழ்நிலை ஊழியரின் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோர் அடங்குவர். எனவே உடல்களை அடையாளம் காண அவர் விரைத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதலாக 2000 மத்திய ஆயுதக்காவல் படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் மணிப்பூரில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்படுத்த முடுக்கி விடப்பட்டுள்ளனர் என்றும் அமைதியை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மணிப்பூரில் 6 மாவட்டங்களில் எந்த தடையும் இன்றி பாதுகாப்பு படை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது
- சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
- தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.
மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 153 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
- எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
- ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
- ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் சுரால்கோட் சித்தார்க் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.
மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதி ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்