search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvaganapathy M.P."

    • செல்வகணபதி எம்.பி.பேச்சு
    • அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி ஊர்வலத்தில் பட்டியல் அணி சார்பில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சி பட்டியல் அணியின் சார்பில் அம்பேத்கரின் நினைவு தினத்தை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மோகன்குமார் விளக்க உரையாற்றினார். முன்னதாக புதுவை மாநிலத்தில் உள்ள 23 தொகுதிகளை சேர்ந்த பட்டியல் அணியின் நிர்வா கிகள் அறிமுகப்ப டுத்தப்பட்டனர்.

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி கலந்து கொண்டு அம்பேத்க ரின் நினைவு தினத்தை சிறப்பாக நடத்துவது குறித்து பேசி னார். அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா தலைமை அழைத்த உடனேயே மழை யும் பொருட்படுத்தாமல் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருப்பது கட்சியின் மீது பட்டியல் அணியினர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

    புதுவை பட்டியல் இன மக்களும் பா.ஜனதா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவையில் பட்டியல் அணி எந்த அளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடைபெற உள்ள அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி ஊர்வலத்தில் பட்டியல் அணி சார்பில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க வேண்டும்.

    பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கு பிரதமர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் புதுவை மாநிலத்தைச் சார்ந்த பட்டியல் இன மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா பட்டியல் அணி நிர்வாகிகள் பிரதமரின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். எதிர்வரும் வரும் காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுக்களை நிர்ண யிக்கக்கூடிய அளவிலே பட்டியல் அணி நிர்வாகிக ளின் வளர்ச்சி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டியல் அணி துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி கஜேந்திரன், சுப்பிரமணியன், ராஜேஸ்வரி பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் காமாட்சி, தட்சிணாமூர்த்தி, ராஜாராம், மாவட்ட தலைவர்கள் வெற்றிவேல், ராஜகுரு அம்பேத்கர், விண்ணரசன் மற்றும் ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனக்கு விரைந்து வந்தனர்.
    • அனைவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தனியார் மருந்து மாத்திரை மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பாய்லர் வெடிவிபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

     இவர்களில் 11 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் செல்வகணபதி எம்.பி. , காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், பா.ஜனதா மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு 15 படுக்கைகளை தயார் செய்து படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருந்தனர்.

    மேலும் நள்ளிரவு வரை அங்கு இருந்த செல்வகணபதி எம்.பி. பல்வேறு பகுதியில் இருந்து 11 ஆம்புலன்ஸ்களை போன் செய்து வரவழைத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ்கள் அங்கு வந்தன.

    இதையடுத்து அனைவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    • கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
    • கடந்த 8 ஆண்டுகளாக என்னுடன் கட்சிப் பணி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் பொறுப்பு ஏற்கும் விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

    புதுவை மாநிலம் பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் செல்வ–கணபதி எம்.பி. பா.ஜனதா மாநில தலைவராக பொறுப்பேற்கும் விழா நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    முன்னதாக லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இருந்து திறந்த வாகனத்தில் செல்வ கணபதி எம்.பி.யை கட்சி யினர் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இந்த ஊர்வலம் சிவாஜி சிலை சின்னமணி கூண்டு, அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், அண்ணா சிலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் எல்லைப் பிள்ளை சாவடி வழியாகச் சென்று பா.ஜனதா தலைமை அலுவலகம் வந்தடைந்தது.

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த சாமிநாதன், பா.ஜனதா மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் புதிய தலைவருக்கு பா.ஜனதா கட்சியின் கொடியை வழங்கி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற கோஷத்துடன் வாழ்த்துக் களை தெரிவித்தனர்.

    பின்னர் செல்வகணபதி எம்.பி.யை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைவரின் இருக்கையில் அமரவைத்தனர்.

    நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ராம–லிங்கம், ரிச்சர்ட்ஜான்குமார், வெங்கடேசன், சிவசங்கர், அசோக்பாபு, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் முன்னிலை–யில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    முன்னாள் தலைவர் சுவாமிநாதன் புதிய தலைவர் செல்வகணபதி எம்.பி.யை வாழ்த்தி பேசினார். அதில், கடந்த 8 ஆண்டுகளாக என்னுடன் கட்சிப் பணி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், புதிதாக தலைவ ராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி.க்கு நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து கட்சி பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி பேசுகையில், புதிய மாநில தலைவர் பொறுப் பேற்கும் விழாவில் வருகை தந்து வாழ்த்தியமைக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி பணியை அனைவரும் சிறப்பாக தொடர்ந்து செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் புதுவை மாநில, மாவட்ட, தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய பா.ஜனதா தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
    • பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா தலை வராக நியமனம் செய்யப்பட்ட செல்வ கணபதி எம்.பி.க்கு சபா நாயகர்- எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுவை பா.ஜனதா மாநிலத் தலைவராக செல்வ கணபதி எம்.பி. அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    அவருக்கு மாலை, சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜனதாவிற்க்கு புதிய தலைவராக நியமிக்கப் பட்ட செல்வகணபதி

    எம்.பி.க்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கர், அங்காளன், பா.ஜனதா மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பிரமுகர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணி வித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
    • மனநல மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீபன் அலமேலு சிறப்பு அறையையும் திறந்து வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங் குப்பத்தை அடுத்த மணவெளி திலகர் வீதியில் அரிச்சுவடி மனநல மையம் இயங்கி வருகிறது.

    இந்த மனநல மையத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம், அரிச்சுவடி மனநல மையத்தில் மேலாண்மை இயக்குனரின் அறையை திறந்து வைத்தார்.

    முன்னாள் எம்.பி. பேராசி ரியர் ராமதாஸ் மருத்துவர் அறையையும், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் அலமேலு பெண்கள் சிறப்பு கவுன்சிலிங் அறையை திறந்து வைத்தார்.

    மேலும் புதுவை பொது சுகாதார இணை இயக்குனர் முரளி, சமூக நல அறையையும், மனநல மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீபன் அலமேலு சிறப்பு அறையையும் திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மனநல மருத்துவர் அன்புதுரை, மருந்தியல் நிபுணர் அசோகன், பொதுநல மருத்துவர் அரவிந்தன் ஆகியோர் மையத்தின் சிறப்பு அறைகளை திறந்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, மருத்துவர் நவசக்தி, கட்டிட வடிவமைப்பளார் குபேந்திரன், என்ஜினீயர் இளங்கோ, தணிகாசலம், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சி சிட்டி தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சரவணன் மற்றும் சாதிக், தேவராஜ், ரவிச்சந்திரன், செந்தில், உதயகுமார், ராம்பிரகாஷ், ஜஸ்டின், ஏழுமலை வாசன், ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்தும், பழக்கூடை, நினைவு பரிசு மற்றும் துளசி செடி வழங்கினார்.

    முன்னதாக ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் அனைவரையும் வரவேற்றார். அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரிச்சுவடி மற்றும் ஆத்திசூடி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • யூனியன் பிரதேசமான புதுவையில் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை போல அரசு பணியாளர் தேர்வாணையம் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொண்டு வருகிறேன்.
    • வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மொழி மிகப்பெரிய தடையாக உள்ளது.

    புதுச்சேரி:

    டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தில் புதுவை எம்.பி. செல்வகணபதி பேசியதாவது:-

    யூனியன் பிரதேசமான புதுவையில் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை போல அரசு பணியாளர் தேர்வாணையம் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொண்டு வருகிறேன்.

    அரசு பணிகளில் குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' பிரிவுகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு பயனிக்கும் இதை அண்டை மாநிலங்களில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணயம் உறுதி செய்கிறது. ஆனால் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர் குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் பணியிடங்களை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    இதற்கு காரணம் புதுவைக்கு தனி அரசு பணியாளர் தேர்வாணயம் இல்லாததே ஆகும். புதிதாக சுகாதாரத்துறை மருத்துவர்கள், வல்லுனர்கள், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் போது யு.பி.எஸ்.சி.யிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அவர்கள் அகில இந்திய அடிப்படையில் தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். பரிசீலிக்க வேண்டும் தே சிய அளவில் தேர்வுகள் நடத்தப்படுவதால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த ஊரில் அரசு வேலைக்காக அகில இந்திய அளவில் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மொழி மிகப்பெரிய தடையாக உள்ளது.

    பள்ளி முதல்வர்களாக வருபவர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாததால் மாணவர்கள், பெற்றோர்களிடம் எவ்வாறு பேசுவார்கள். இது வெற்றிடத்தை உருவாக்குகிறது.

    எனவே புதுவை யூனியன் பிரதேசத்தில் அரசு பணியா ளர் தேர்வாணையம் அமைக்க மத்திய உள்துறை அமை ச்சகம் பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு செல்வகணபதி எம்.பி. பேசினார்.

    • புதுவை லாஸ்பேட்டை யில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • இக்கண்காட்சியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண் வியந்து மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை யில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியினை பள்ளியின் தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி தொடங்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா குத்துவிளக்கேற்றி வைத்தார். இணை முதல்வர் கீதா சிறப்புரையாற்றினார்.

    பள்ளி முதல்வர் மீனாட்சி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் சுற்று சூழல் பாதுகாப்பு அரங்கம், எதிர்கால இந்தியா அரங்கம், விண்வெளியில் புரட்சி அரங்கம், மாயாஜாலம் நிறைந்த விளையாட்டு அரங்கம், கணிதம் மற்றும் இலக்கிய அரங்கம், கண்ணை கவரும் ஓவிய அரங்கம் என பல அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

    இக்கண்காட்சியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண் வியந்து மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நினைவாக, மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை திறந்துள்ளது.
    • பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இந்தியாவில் உள்ள 75 கிளையும் திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நினைவாக, மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை திறந்துள்ளது.

    புதுவை யூனியன் பிரதேசத்திற்கு 2 கிளைகளை அரசு ஒதுக்கியுள்ளது. அதில் ஒன்று புதுவையிலும் மற்றொன்று காரைக்கால் மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ஒரு கிளையும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு மற்றொரு கிளையும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இந்தியாவில் உள்ள 75 கிளையும் திறந்து வைத்தார்.

    புதுவை புஸ்சி வீதியில் அமைந்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகிளையின் தொடக்க விழாவில் செல்வகணபதி எம்.பி. பங்கேற்று டிஜிட்டல் வங்கி கிளையை திறந்து வைத்தார்.

    அவர் பேசும் போது, புதுவையின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் வங்கி கிளை திறப்பு ஒரு உண்மையான வரப்பிரசாதம்.

    இதன் மூலம் சேமிப்புக் கணக்குகளைத் திறப்பது, இருப்புச் சரிபார்ப்பு, வங்கிக் கணக்குகளை அச்சிடுதல், நிதி பரிமாற்றம், நிலையான வைப்புத்தொகையில் முதலீடு, கடன் விண்ணப்பங்கள், வழங்கப்பட்ட காசோலைகளுக்கான பணபரிமாற்றம் நிறுத்தம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள், வரி மற்றும் பில் செலுத்துதல் போன்றவற்றை இந்த டிஜிட்டல் வங்கி கிளை எளிதாக்கும்.

    பரிந்துரை வசதிகள் போன்றவை டிஜிட்டல் வடிவில் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டில் செய்த பணிகளை செல்வகணபதி எம்.பி. பட்டியலிட்டுள்ளார்.
    • கடந்த ஓராண்டில் புற்று நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பெற்று தரப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டில் செய்த பணிகளை செல்வகணபதி எம்.பி. பட்டியலிட்டுள்ளார்.

    புதுவை எம்.பி. செல்வகணபதி கடந்த ஓராண்டில் ஆற்றிய பணிகளை விளக்கி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவாது:-

    நாடாளுமன்ற கூட்டத்தில் 58 நாட்கள் (93 சதவீதம்) பங்கேற்று 99 வினாக்களை எழுப்பியுள்ளார். அப்போது மாநிலத்துக்கு கூடுதல் நிதி தேவை, பல்கலைக்கழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு, மத்திய அரசு நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை, புதுவைக்கு 3-வது கேந்திரிய வித்தியாலயா பள்ளி, விமானதள விரிவாக்கம், காரைக்காலில் விமான தளம், சரக்கு கப்பல் போக்கு வரத்தை தொடங்குவது, காட்டுநாயக்கன், எருக்குலா, மலைக்குறவன், குறும்பன் ஆகிய 4 பழங்குடி சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தொடர் முயற்சி எடுக்கப்பட்டது.

    கடந்த ஓராண்டில் புற்று நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பெற்று தரப்பட்டது. பிள்ளைச்சாவடியில் மாற்றுதிறனாளிகள் செயல் கருவி தொழிற்சாலையை ரூ.30 கோடியில் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. 2017 வரை மருத்துவம் சார்ந்த பட்டயம் படித்த இளநிலை மருத்துவர்கள் மருத்துவ கல்லூரிகளில் பணியில் தொடர மருத்துவ பட்ட மேற்படிப்பு வாரிய தலைவருக்கு விளக்கி சாதகமான தீர்வு காணப்பட்டது.

    ரோடியர் மில் தொழிலாளர்களின் வைப்பு நிதி ரூ.3 கோடியே 13 லட்சத்தை விடு வித்து அவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையான 10 மடங்கு உயர்த்தப்பட்ட இட அனுமதி தொகையை குறைக்க வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    புதுவை ரெயில் நிலைய வசதிகளை உலக தரத்துக்கு மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டிவனம்-புதுவை-கடலூர் ரெயில் பாதை அமைப்புக்கு புத்துயிர்கொடுத்தல், வில்லியனூர் ரெயில் நிலைய பராமரிப்பை மேம்படுத்துதல், சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை புதுவை வரை நீட்டித்தல், காரைக்கால்-பேரளம் ரெயில்பாதை வேலையை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

    புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூவிடம் வலியுறுத்தி ஒப்புதல் பெறப்பட்டு ள்ளது. காமராஜர் வேளாண் விஞ்ஞான மைய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை களை அமல்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

    மாற்று திறனாளிகள் 100 பேருக்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 3 சக்கர வாகனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 175 பேருக்கு காதுகேட்கும் கருவி வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சுதந்திர அமுத பெருவிழாவையொட்டி 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் ரூ.17 லட்சம் மதிப்பில் சொந்த செலவில் நடத்தப்பட்டது. முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட 150 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற பரிந்துரைக்கப்பட்டது. மேலும் ஜிப்மர் நிர்வாகத்திடம் பேசி நோயாளிகளுக்கு அனைத்து மருந்துகளும் தடங்கல் இல்லாமல் வழங்க தொடர் முயற்சி எடுத்து வருகிறார்.

    இதுவரை சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம், மின் சிக்கன விளக்குகளுக்கான ரூ.25 லட்சத்து 80 ஆயிரம், மின்பிடிதுறைமுக முகத்து வாரம் ஆழப்படுத்த ரூ.10 லட்சம், சட்டக்கல்லூரிக்கு பஸ் வாங்க ரூ.24 லட்சத்து 63 ஆயிரம், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் வாங்க ரூ.42 லட்சத்து 44 ஆயிரம், கதிர்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூ.61 லட்சம் வழங்கியுள்ளார்.

    விலங்குகளுக்காக ஆம்புலன்சு வாங்க ரூ.5 லட்சத்து 93 ஆயிரம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஜே.சி.பி. வாங்கிட ரூ.35 லட்சத்து 50 ஆயிரம், காரைக்கால் நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்த ரூ.53 லட்சத்து 80 ஆயிரம், 175 பேருக்கு காதுகேட்கும் கருவி வாங்க ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.4 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரம் தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×