search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Share Market"

    • இன்று காலை 2 மணி நேரத்திற்குள் சென்செக்ஸ் 1,100-க்கு அதிக புள்ளிகள் சரிவு.
    • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது சரிவுக்கு முக்கிய காரணம்.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வர்த்தகம் ஆனதால் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் 7.37 லட்சம் கோடி ரூபாயை காலை 2 மணி நேரத்திற்குள் இழந்துள்ளனர்.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதில் நேர் தலைகீழாக இறங்கிய வண்ணமாகவே இருந்தது.

    வெள்ளிக்கிழமை சிறப்பு வர்த்தகம் சென்செக்ஸ் 79724.12 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 79713.14 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இன்று காலை 11.26 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 78.400.46 புள்ளிகளுடடன் வர்த்தகம் ஆகியது. சுமார் 1323.66 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    இதனைத் தொடர்ந்து 7.37 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்கள் தங்களுடைய பங்குகளை தடையின்றி விற்பனை செய்ததும், மெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அடுத்த வாரம் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்க இருப்பது ஆகிய காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    சன் ஃபார்மா, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டைடன் மற்றும் டாடா ஸ்டீல் போன்றவை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

    அதேவேளையில் மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ் மற்றும் இந்தூஸ் இண்ட் பேங்க் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. வெளிநா்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 211.93 கோடி ரூபாய் அளவில் கடந்த வெள்ளிக்கிழமை பங்குகளை விற்றனர். அக்டோபர் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 94 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்றுள்ளனர்.

    • நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது.
    • இன்று காலை 252.85 புள்ளிகள் சரிந்து 82,244.25 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது.

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆகியவை கடும் சரிவை கண்டுள்ளன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1769 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 546 புள்ளிகள் சரிந்தன.

    நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது. இன்று காலை 252.85 புள்ளிகள் சரிந்து 82,244.25 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது. அதன்பின் ஏற்றம் கண்டது. பின்னர் ஏற்றம் இறக்கமாக இருந்தது. 9.40 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,339 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. இன்று காலை 82,051.86 புள்ளிகள் வரை குறைந்த வர்த்தகம் ஆனது. அதிகபட்சமாக 82,649.16 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி நேற்று 25250.10 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 68 புள்ளிகள் சரிந்து 25181.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தற்போது அதாவது 9.40 மணிக்கு 25191.15 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. இன்று காலை 25,094.85 புள்ளிகள் வரை குறைந்த வர்த்தம் ஆனது. அதிகபட்சமாக 25,287.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    • நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84266.29 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • "நிஃப்டி 50" நேற்று முன்தினம் 25,796.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் 85 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஆனது. அதன்பின் வர்த்தகம் சரிவை கண்டது.

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பங்குச்சந்தைகள் இயங்கவில்லை. நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84266.29 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 1264.2 புள்ளிகள் சரிந்து 83002.09 புள்ளிகளுடன வர்த்தகம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக ஏறிய வண்ணடம் இல்லை.

    9.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 83,605 புள்ளிகள் வர்த்தகமானது.

    இந்திய பங்குசந்தை நிஃப்டி 50, நேற்று முன்தினம் 25796.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 344.08 புள்ளிகள் குறைந்கு 25452.85 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கிறது.

    • மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 1272.07 புள்ளிகள் குறைந்து முடிவடைந்து.
    • நிஃப்டி 368.10 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் முடிவடைந்தது.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று கடுமையான சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் ஆயிரம் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் ஆனது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியிலும் சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. நேற்று வர்த்தகம் சென்செக்ஸ் 84,299.78 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 42.61 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆரம்பமானது. ஆரம்பமான அடுத்த வினாடியில் இருந்து சென்செக்ஸ் புள்ளிகள் உயரத் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி மும்பை சென்செக்ஸ் 84413.61 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி நேற்று காலை 26,061.30 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 25,810.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 25,821.35 புள்ளிகள் நிஃப்டி வர்த்தகம் தொடங்கியது. நேற்றைய வர்த்தகத்துடன் நிஃப்டி 68.95 புள்ளிகள் குறைந்து தொடங்கியது. 9.30 மணி நிலவரப்படி 39 புள்ளி உயர்ந்து 25848 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

    நேற்றைய பங்குச்சந்தையில் நிஃப்டி 368.10 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் 1272.07 புள்ளிகள குறைந்த வர்த்தகமானது.

    • அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்ந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்து காணப்பட்டது.
    • ஐ.டி. நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியது உயர்வுக்கு முக்கிய காரணம்.

    மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,330.96 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்த பங்குசந்தை இன்று உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 79,105.88 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது. இன்று காலை 79754.85 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 650 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இடையில் குறைந்தபட்சமாக 79,306.69 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 80,518.21 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 80,436.84 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஏறக்குறைய 1.68 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.

    டெக் மஹிந்த்ரா, மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா, டாட்டா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாட்டா ஸ்டீல் நிறுவன பங்குகள் உயர்வை கண்டன.

    இந்திய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 397.40 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றுமுன்தினம் 24143.75 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 24563.90 புள்ளிகளுடன் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 24204.50 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 24563.90 புள்ளிகளில் வர்த்தமானது. இறுதியாக 24541.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஆசிய சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் உயர்வுடன் முடிவடைந்தன. அதேபோல் ஐரோப்பிய சந்தைகளில் பெரும்பாலானவை க்ரீனில் முடிவடைந்தது, அமெரிக்க சந்தைகளும் (வியாழக்கிழமை) ஏறுமுகத்துடன் நிறைவடைந்தது.

    • மேற்கத்திய நாடுகளில் பங்கு சந்தையில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்
    • 2024 மார்ச் மாதம், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மாதாபி தெரிவித்தார்

    இந்தியர்களின் வாழ்க்கை முறையில், பொருளாதார சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் குடும்ப நன்மை (family interest) மற்றும் தங்களின் வருங்கால சந்ததியினரின் நன்மையை (dynastic approach) உள்ளடக்கியது. எனவே, அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, வங்கி வைப்பு தொகை, ஆயுள் காப்பீடு போன்றவற்றிலேயே தங்கள் சேமிப்புகளை முதலீடாக செய்து வருகிறார்கள்.

    இதற்கு நேர்மாறாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், கடந்த இரு தசாப்தங்களாக இந்தியர்களின் பங்கு சந்தை முதலீடு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் முழு ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது. அப்போது வருவாய் ஈட்டும் வழியாக பங்கு சந்தை வர்த்தகத்தில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்தனர்.

    தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இணையவழி பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவை இந்திய இளைஞர்களுக்கு பங்கு சந்தை ஆர்வத்தை மேலும் பெருக்கி வருகிறது.

    இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (Securities Exchange Bureau of India) முதலீட்டாளர்களுக்கு வழிமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பங்கு சந்தையில் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கை விற்கிறார்; வேறொருவர் அதை வாங்குகிறார். விற்பவருக்கு பணமும், வாங்குபவருக்கு பங்கும் அவரவர் கணக்குகளில் சேர்வதற்கான நாள் கணக்கு "செட்டில்மென்ட் காலம்" என அழைக்கப்படும்.

    வர்த்தகம் (Trading) நடைபெற்ற 2 நாட்கள் கழித்து செட்டில்மென்ட் நடப்பது T+2 என்றும் 1 நாளில் நடப்பது T+1 என்றும் அழைக்கப்படும்.

    முன்பு 2 நாட்கள் என இருந்த செட்டில்மென்ட் காலம், 1 நாள் என குறைக்கப்பட்ட பிறகு ரூ.700 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு பயன் கிடைத்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

    இந்நிலையில், செபி, செட்டில்மென்ட் நாட்களை மேலும் குறைக்க இருக்கிறது.

    இது குறித்து செபி தலைமை அதிகாரி மாதாபி புரி புக் (Madhabi Puri Buch) கூறியதாவது:

    முதலில் ஒரு-மணி நேர செட்டில்மென்ட், பிறகு சில நாட்களில் உடனடி செட்டில்மென்ட் என கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு சந்தை தரகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அதன்படி ஒரு முதலீட்டாளர் பங்கை விற்கும் அன்றே அவருக்கு பணம் கிடைக்கவும், வாங்குபவருக்கு பங்கு கிடைக்கவும் வழிவகை செய்யும் அதே நாள் செட்டில்மென்ட் (same-day settlement) முயற்சியை முதலில் கொண்டு வந்துள்ளோம். அடுத்த வருட மார்ச் மாதத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு இது செயல்பாட்டில் வரும்.

    இதனையடுத்து ஒரு-மணி நேர செட்டில்மென்ட் (one-hour settlement) அமல்படுத்தப்பட்டு, பிறகு படிப்படியாக உடனடி செட்டில்மென்ட் (instantaneous settlement) அமலுக்கு வரும். இதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பணப்புழக்கம் மேலும் அதிகமாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சிறு முதலீட்டாளர்களை காட்டிலும் பெரும் தொகை மற்றும் மிக பெரும் தொகை முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயன் அளிக்கும் திட்டம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • அடுத்த வாரம் பங்குகளின் மதிப்பு மீண்டும் உயரக்கூடும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.
    • அதானி பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாக செய்தி வெளிவந்தது.

    இந்தியாவில், பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் சிறு, குறு, மற்றும் மிகப் பெரிய முதலீட்டாளர்களை கடந்த சில ஆண்டுகளாக அதானி குழும பங்குகள் ஈர்த்து வந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை அதானி குழுமத்தின் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், முதலீட்டாளர்களுக்கு நல்ல வெகுமதி அளித்துள்ளன. அதன் தலைவர் கெளதம் அதானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர்.

    ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம், ஜனவரி 2023ல், அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பதாகவும், வரி ஏய்ப்பு புகலிடமாக இருக்கும் சில நாடுகளில் அக்குழுமம் வலை நிறுவனங்களை உருவாக்கி, பங்குகள் கையாளுதலில் குற்றங்கள் செய்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    இதனையடுத்து இதன் பங்குகள் சரிந்தன. இதன் பிறகு ஏற்றத்தையும், இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்து வந்த அந்நிறுவனத்தின் பங்குகள், இன்று 10% சரிவை சந்தித்துள்ளது. பட்டியலிடப்பட்ட 10 அதானி குழும நிறுவனங்கள் இன்று ரூ.52,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை இழந்துள்ளன.

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம், அதானி பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் சமீபத்திய மாதங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகவும், முதலீட்டாளர்களிடம் அதானி குழுமம் என்ன சொன்னது என்பதில் பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டதாகவும் செய்தி வெளிவந்தது. அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் இதே போன்றதொரு விசாரணையை தொடங்கி நடத்தி வருவதாக செய்திகள் வந்தன.

    இந்தியாவை தளமாகக் கொண்ட அதானி குழுமத்தின் செய்தித்தொடர்பாளர், தனது முதலீட்டாளர்களிடம் எந்தவிதமான விசாரணையும் தொடங்கப்பட்டதற்கான எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என கூறினார். மேலும் அவர், அக்குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி, இதன் மூலம் அதானி பங்கு வீழ்ச்சியடையும் என கணித்து, "ஷார்ட் ஸெல்லிங்" எனப்படும் பங்குகள் விலை குறையும் பொழுது லாபமீட்டும் முறையை கையாண்டு பல கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பதிலுக்கு குற்றம் சுமத்தியுள்ளது.

    இதன் விளைவாக பங்குகள் சரிந்திருந்தாலும், அடுத்த வாரம் அது மீண்டும் உயரக்கூடும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.

    ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளைத் தாண்டி, பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 11 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 322 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

    பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள், முதலீட்டார்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது.

    காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.



    அதன்பின்னர் மேலும் எழுச்சி பெற்று, சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது இதுவே முதல் முறையாகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 12000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் ஆனது. அதன்பின்னர் சற்று சரிவடைந்தது.

    யெஸ் பேங்க், இந்தஸ்இந்த் பேங்க், எல்அண்ட்டி, எஸ்பிஐ, ஐசிஐசிடி பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எச்டிஎப்சி ட்வின்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதம் அளவிற்கு உயர்ந்தன. வேதாந்தா, ஐடிசி, டிசிஎஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 14 காசுகள் உயர்ந்து, 69.51 ரூபாயாக இருந்தது. அதன்பின்னர் சற்று சரிவடைந்தது. 
    பாராளுமன்றத் தேர்தல் முடிவு குறித்த கருத்துக் கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று அபாரமாக உயர்ந்தன.
    மும்பை:

    பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 

    இந்த கருத்துக் கணிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உற்சாகமடைந்தன. காலை முதலே பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மதிய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1090 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 320 புள்ளிகள் உயர்ந்தது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. பங்குச்சந்தைகளில் ஒரே நிமிடத்தில் ரூ. 3. 2 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு குவிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பாஜகவுக்கு ஆதரவான கருத்துக் கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்தது. காலை வர்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து, ரூ.69.44 என்ற அளவில் இருந்தது.
    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.2.72 லட்சம் கோடியை இழந்துள்ளனர். #Sensex #ShareMarket #Rupee
    மும்பை:

    சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணையங்கள் சரிவினை சந்தித்து வருகின்றன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. 

    சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் சற்று தேக்க நிலை நீடித்து வந்தது.

    இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 37,290 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்து 11,278 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் டாலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்தது. 
    கடன் வாங்கி பங்குசந்தையில் முதலீடு செய்து ஏராளமான பணத்தை இழந்ததால் பிஎஸ்என்எல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் விமலன்(வயது 35). என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராம்நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.

    நேற்று வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது விமலன் அறைக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைகண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விமலனுக்கு இன்னும் திருமணமாக வில்லை. இவர் கடன் வாங்கி பங்குசந்தையில் முதலீடு செய்து ஏராளமான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறத. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றன். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×