search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "short film"

    • போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது.

    போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக சினிமா துறையை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.

    குறிப்பாக டிக்கெட் விலை உயர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் முன்னணி நடிகர்கள் 2 குறும் படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும்.

    இந்த 2 குறும்படங்களும் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சினிமா டிக்கெட் விலை உயர்த்த நடிகர்கள் விழிப்புணர்வு படங்களில் நடிக்க வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

    • லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.
    • குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இளம் இயக்குனர் பட்டியலில் மறுக்க முடியாத இடத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து அவர் இயக்கிய "லியோ" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    ஹோலிவுட் படத்தில் வரும் மார்வல் யூனிவர்ஸ், டி.சி. காமிக்கலில் வரும் யூனிவர்ஸ் கான்சப்ட்டுகளைப் போல, தனக்கென்று ஒரு தனி ஸ்டைலாக லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸ் ( LCU) என்று ஒன்றை உருவாக்கினார்.

    அதில் விக்ரம், லியோ, கைதி போன்ற படங்கள் உள்ளடக்கம். லியோ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார். 

    அதை தொடர்ந்து கைதி- 2 எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வந்த அண்மை தகவல்கள்படி லோகேஷ் கனகராஜ் LCU வை மையமாக வைத்து 15- 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார்.

    அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார்.

    குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் கைதி - 2 படத்திற்கு முன்னே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • “படிக்க வந்தோம் “ என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொருளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார்.
    • இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது.

    சேலம்:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் "படிக்க வந்தோம் " என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொரு ளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது சாக்லேட்டுகள் கொடுத்து மகிழ்ந்த காலம் மாறி தற்போது மது விருந்து அளிக்கும் கலாச்சாரம் மாணவ சமுதாயத்திடம் அதிகரித்துள்ளது.

    இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர் சமுதா யம் படிப்பில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற்று பிற்கால வாழ்வை பொற்கா லம் ஆக்கிக் கொள்ள வேண்டும். சேலம் மாவட் டத்தில் இதுவரை 2 ஆயிரம் கள்ள சாராய வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இரவு ரோந்து பணியில், டாஸ்மாக் பார் மற்றும் தாபா ஹோட்டல்களை தீவிரமாக கண்கா ணிக்கவும், வாகன தணிக் கையை முழு மையாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் போதைப்பொ ருள் விழிப்புணர்வு குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 32 கல்லூரிகள் மற்றும் 67 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குறும்பட போட்டியில் மதுரை மாநகர போலீசுக்கு முதல் பரிசு கிடைத்தது.
    • முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    மதுரை

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கூடுதல் இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 45 குறும்பட வீடியோக்கள் பங்கேற்றன.

    அவற்றை காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்தது. இதில் முதல் பரிசாக ரூ. 35 ஆயிரத்தை மதுரை மாநகர காவல் துறையினர் பெற்றனர். 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்தை கோவை போத்தனுர் ெரயில்வே காவல்துறையினரும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் மாவட்ட காவல் துறையினரும் பெற்றனர்.

    பரிசு தொகையையும், சான்றிதழையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் வழங்கினார். முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    • நாளை நமதே என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
    • விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தையும், இடைநிற்றலைத் தவிர்த்து தடைகளை கடந்து விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் "நாளை நமதே" என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.

    இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னசுகந்தி, உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ஒன்றிய பிரதிநிதி எழிழரசன், எழில்நிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் சிறார்கள் பாலியல் தொந்தரவு தடுக்கும் போக்சோ சட்டம், குழந்தைத் திருமணங்கள் மற்றும் இணைய குற்றங்கள் தடுப்பு குறித்து, பள்ளிகள் தோறும் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் வரவேற்றார்.

    இதில் வாழப்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா, தலைமை காவலர் வைரமணி ஆகியோர் போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இக்கருத்தரங்கில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தற்காப்பு மற்றும் விழிப்புணர்வோடு செயல்படுவதாக உறுதியேற்றனர்.

    • குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது.
    • படுகர் இன மொழியில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    ஊட்டி அசெம்பிளி தியேட்டரில் குறும்பட விழா தொடங்கியது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் போதை பழக்கத்தில் இருந்து மாணவர் விடுபடும் கதை கொண்ட குறும்படத்தை அமைச்சரும், கலெக்டரும் பார்த்தனர். குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது. தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு குறும்படம் ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக ஊட்டியில் குறும்பட தயாரிப்பாளர்கள் மூலம் படுகர் இன மொழியில் குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. விழாவில் அசெம்பிளி ரூம்ஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனிநபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கும் போட்டிகள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
    • 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்களுக்கு மிகாமல் ஒளிபரப்பு ஆகும் வகையில் இசையுடன் கூடிய பாடல் அடங்கிய குறும்படம் தயாரித்து வழங்கப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகராட்சியில் பொதுமக்களின் பங்களிப்பு டன் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் வகையில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனிநபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கும் போட்டிகள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. தூய்மைக்கான மக்கள் இயக்கம் பற்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் நடக்கிறது.

    எனது குப்பை எனது பொறுப்பு அல்லது எனது நகரம்- எனது பெருமை ஆகிய ஏதாவது ஒரு தலைப்பில் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்களுக்கு மிகாமல் ஒளிபரப்பு ஆகும் வகையில் இசையுடன் கூடிய பாடல் அடங்கிய குறும்படம் தயாரித்து வழங்கப்பட வேண்டும். குறும்படம் தயாரித்து வழங்கப்பட்டதில் சிறப்பாக தயாரித்து அனுப்பி உள்ள குறும்படங்கள் தேர்வு குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

    எனவே, குறும்படங்களை தயாரித்து வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் மாநகராட்சி மைய அலுவலக தரை தளத்தில் உள்ள மாநகர நல அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.   #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    ×