search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri"

    • சிவகிரியில் 21 முதல் 44 வரை உள்ள 24 வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் வாக்கு சாவடி கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, சிவகிரியில் 21 முதல் 44 வரை உள்ள 24 வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் வாக்கு சாவடி கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிவகிரி பேரூர் தி.மு.க. தேர்தல் பணி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சீனிவாசன் கலந்து கொண்டு விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடுகளை வழங்கினார்.

    இதில் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முத்துலட்சுமி, கிருஷ்ணலீலா, சேவுகபாண்டியன், கார்த்திக் குமார், வீரமணி மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு பாக முகவர்களுக்கான குறிப்பேடு, படிவங்களை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி காந்தி ரோட்டில் உள்ள சண்முக விலாஸ் திருமண மண்டபத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனுமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் முருகன் சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சிவகிரி விக்னேஷ் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ், அயலக அணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தேர்தல் பணி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரமகுரு சிறப்பு உரையாற்றி பாக முகவர்களுக்கான குறிப்பேடு மற்றும் படிவங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் முனியராஜ், பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், அருணா தேவி பாலசுப்பிரமணியன், தேவிபட்டணம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மாடசாமி, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விரிவான செயல் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக அமல்படுத்திட கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலகங்களில் கூட்டம் நடத்த வேண்டும்.

    தங்களது உள்ளாட்சி அமைப்பின் எல்கைக்குட்பட்ட கடைகள். உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை முறையாக அமல்படுத்திட கேட்டும், கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர உரிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற 30-ந் தேதிக்குள் ஒப்படைப்பு செய்யக்கேட்டு கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யாணையை அனைத்து பொதுமக்கள், கடை மற்றும் உணவக உரிமையாளர்களிடம் விளக்க வேண்டும், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வருகிற 31-ந் தேதிக்குள் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மேற்படி செயல்திட்டங்களை தங்களது உள்ளாட்சி அமைப்பின் பகுதிக்குள் முறை யாக செயல்படுத்திடவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், சீதாராமன், குருசாமி, ரவிந்திரநாத் பாரதி, குமார், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர்பாக விரிவாக எடுத்துரை க்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் தங்கராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில் சிமெண்ட் ரோடு, வாருகால் ஆகிய திட்டப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.39.99 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் ரோடு, வாருகால், ஊரணி புணரமைப்பு, மயானக்கூடம் ஆகிய திட்டப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி ஏசுதாஸ், முனியராஜ், துரைச்சாமியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, கிளை செயலாளர்கள் வேல்பாண்டியன், கண்ணன், உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முகாமின் போது மாணவர்கள் ரத்ததான விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல் ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
    • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து சிவகிரி மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உழவாரப்பணி, விஸ்வநாதபேரி பகுதிகளில் ரத்ததான விழிப்புணர்வு முகாம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம், வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாம், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல், கோம்பை ஆறு படுகையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கேன்களை அப்புறப்படுத்துவது ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளியின் வளாகத்தில் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

    சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், கல்விக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காசிராஜன், வீரகுமார், மோகன், அருணாசலம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி இதுபோன்று தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.

    இதில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் பாண்டி, கல்வி பணிக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு 60 மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது
    • தனுஷ் குமார் எம்.பி. , வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கினர்.

    சிவகிரி:

    தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறை யில் தரையில் அமர்ந்து படிப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு 60 மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது. தனுஷ் குமார் எம்.பி. தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் மாணவர்களுக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கட்டபொம்மன், தகவல் தொழில்நுட்ப அணி சுந்தர், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் ஸ்டாலின், உள்ளார் விக்கி, தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி தாலுகா கூடலூர் சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா கூடலூர் சமுதாய நலக் கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி னார். முகாமில் 86 பயனா ளிகளுக்கு ரூ.10.98 லட்சம் மதிப்பிலான நலத்தி ட்ட உதவிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போ ம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட ங்களை சிறப்பாக செய ல்படுத்தி பொது மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக சிவகிரி வட்டம் கூடலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து தங்களது கிராம த்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வில் முன்னேற தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவி களை கேட்டறிந்து பயன் பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்கா ட்சியினையும், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் அமை க்கப்பட்டிருந்த கண்காட்சி யினையும் மாவட்ட கலெக்டர் மற்றும் ஏராள மான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலெட்சுமி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திர லீலா, சங்குபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அருணா, கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராம சுப்பிரமணியன், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் இணையதள குற்றங்கள் பற்றி பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின் பேரிலும் சட்டக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகனச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமை பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இணையதள குற்றங்கள் பற்றி ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர். முன்னதாக தலைமை ஆசிரியர் வரவேற்றார். முடிவில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவிப் பேராசிரியா ஆரிபா நன்றி கூறினார்.

    • புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள் எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

    சிவகிரி:

    புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள், எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர். பெண்கள் பிரிவில் வட்டார அளவில் 29 புள்ளிகள் எடுத்து, 2-வது இடத்தையும் பெற்று கோப்பை வென்றது. மாவட்ட அளவில் 6 மாணவிகளும் தேர்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை மாணவ - மாணவிகளுக்கு வழங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர அறிவுரைகள் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்வி குழு உறுப்பினர்கள், அறப்பணி குழு உறுப்பினர்கள், வீரகுமார், காசிராஜன், மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

    • மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது
    • நிகழ்ச்சியின்போது மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டும், சிவகிரி பேரூராட்சி சார்பில் 76 மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் வெங்கடகோபு வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக சிவகிரி தாசில்தார் ஆனந்த், புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சிவகிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராம சுகாசினி, சித்த மருத்துவர் ஜெயந்தி, சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா, வனவர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    விழாவில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு உறுப்பினர்கள் செந்தில்வேல், ரத்தினராஜ், முத்துலட்சுமி, ராஜலட்சுமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், வேட்டை தடுப்பு காவலர் மாரியப்பன், தலைமை எழுத்தர் தங்கராஜ், வரிவசூலர் முத்துப்பாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சித்தா மருந்தாளுநர் தனகேஸ்வரி நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    • சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    • அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தர விடப்பட்டது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 50 கிலோ பைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி வரி தண்ட லர்கள் முத்துப் பாண்டி, நாராயணன், துப்புரவு மேற்பார் வையாளர், இசக்கிராஜ் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உடன் இருந்தனர்.

    ×