search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103053"

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

    நேற்று பின்னிரவு இறுதியான தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி கனிமொழியிடம் அளித்தார்.



    இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி தனது கணவர் மற்றும் தாயாருடன் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

    ‘எடுத்த உறுதியை நிறைவேற்றி உள்ளோம்’ என்றும், ‘தி.மு.க.வின் மகத்தான வெற்றியை பார்க்க கருணாநிதி நம்முடன் இல்லையே...’ என்றும் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெறும் வெற்றி பெற்றதை அடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

    தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு மாலையில் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.



    பின்னர் அண்ணா அறிவாலய வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நாம் என்ன எதிர்பார்த்தோமோ அந்த வெற்றியை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய வாக்காளர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. அதேபோல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து பணியாற்றிய கூட்டணி கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நாம் களத்தில் இறங்குகின்ற நேரத்திலேயே ஒரு உறுதி எடுத்துக்கொண்டோம். கருணாநிதி இல்லாமல் நடைபெறுகின்ற தேர்தல் இந்த தேர்தல். எனவே, எப்படி இந்த தேர்தல் களத்தில் இறங்கப்போகின்றோம்?, எப்படி இந்த களத்தை சந்திக்கப்போகின்றோம்? என்ற தவிப்பு இருந்தது.

    கருணாநிதி நம்முடன் இருந்திருந்தால் என்னென்ன பயிற்சியை, என்னென்ன தேர்தல் பணி முறைகளை, என்னென்ன பாடங்களை நமக்கு கற்றுத்தந்திருப்பாரோ, அவற்றையெல்லாம் நாம் ஏற்கனவே அவரிடத்தில் இருந்து கற்றுக்கொண்ட காரணத்தினால், அவர் வழியில் நாம் பாடுபட்டு பணியாற்றி வெற்றி பெற்று இருக்கிறோம். அது மட்டுமல்ல இந்த வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று அவருக்கு நாம் வெற்றி மாலையை சமர்ப்பிப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தோம். அதை நிறைவேற்றி உள்ளோம்.

    அந்த உறுதியை நிறைவேற்றக்கூடிய ஒரு நிலையை மக்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் இன்னும் சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசத்தை பொறுத்தவரையில் இழுபறி நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்று கருதி, ஏதேனும் அதில் சூழ்ச்சி செய்யலாமா? சதி வலை பின்னலாமா? என்றெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

    எனவே அதை அறிந்து, புரிந்து அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் முறையிட்டு இருக்கிறோம். நிச்சயமாக அது நடக்காது என்று கருதுகிறோம்.

    எனவே, ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம். ஒரே ஒரு கவலை, கருணாநிதி இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற அந்த கவலை தான் என்னை ஆட்டி கொண்டிருக்கின்றது.

    இருந்தாலும் கருணாநிதி சிலைக்கு முன்பும், அவரை உருவாக்கிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு முன்பும் வெற்றி பெற்றிருக்கக்கூடிய நம்முடைய வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தி.மு.க. சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினருடன் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதி நினைவிடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை சுற்றி வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றனர். இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று இரவு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 
    தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என 2 முக்கிய தலைவர்கள் இல்லாததால் வெற்றி யாருக்கு? என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா தேர்தல் முடிவுகளை உற்சாகத்துடன் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது. கருத்து கணிப்புகளும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளன. தமிழகத்தில் கருத்து கணிப்புகள் மாறுபடும். தேசிய அளவில் கணித்து உள்ள இடங்களைவிட அதிகமாக பெறுவோம்.



    தமிழகத்தில் கள நிலவரத்தை யாரும் கணிக்க முடியாத சூழ்நிலையாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பெறும். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.

    எல்லா கருத்து கணிப்புகளும் சரி என்று சொல்ல முடியாது. ஆனால் கருத்து கணிப்புகளுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று எப்படி கூறமுடியும்?. தோல்வியை முன் எடுத்து செல்லும்போது, நியாயமாக, ஜனநாயக முறையில் நடந்த தேர்தலையும் கேள்விக்குறியாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

    தூத்துக்குடியில் மக்களிடம் தூய்மையான, கடின உழைப்பை கூறி வாக்கு சேகரித்தேன். 20 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் வேண்டும் என்று மக்களிடம் கேட்டு உள்ளேன். எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. நேர்மையான அரசியல்வாதியாக உள்ளேன். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.

    தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என 2 முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு? என கணிக்க முடியாத நிலை உள்ளது. நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான் ஆகிய 3 புதிய முகங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்? என்பது தெரியாது.

    டெல்லியில் நடந்த கூட்டத்தில் மக்களுக்கான பல திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. மோடி மீண்டும் வரவேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக கடலூரில் நடந்த தேர்தல் பொதுகூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    கடலூர்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடலூர் உழவர் சந்தையில் அம்மா மக்கள் முன்னேற்றகழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.

    பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றதோடு ஜெயலலிதா உயிரோடு இருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். என்று கூறியவர்கள் பா.ம.க. வினர். அவர்களுடன் தமிழகத்தை ஆளுவோர் கூட்டணி வைத்துள்ளனர்.

    ஜெயலலிதா இருக்கும் வரை ஜி.எஸ்.டி. வரியை தடுத்து வந்தார்.

    மதச்சார்பற்ற கூட்டணி எனக் கூறும் தி.மு.க. இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தி.மு.க.வை. கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோவிலுக்கு செல்வார்கள் என்று கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

    எந்த மதத்தினரும் யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால் தாங்கள்தான் இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல பாரதிய ஜனதா கட்சியினர் கூறிக்கொள்கின்றனர். இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகின்றனர்.

    தி.மு.க. இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு, குடிநீர், மீனவர் பிரச்சினை, என்.எல்சி. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை, விவசாயவிளை பொருள்களுக்கு விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    இதுகுறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டும். தற்போது தமிழகத்தை மட்டுமன்றி இந்தியாவையும் மீட்க வேண்டிய நிலைஉள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் ஒரு கோடிபேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்.

    மத்தியில் முந்தைய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வைப்பு தொகையை தி.மு.க. இழந்தது.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கிறார்கள்.

    ஆனால் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் 80 சதவீதம் இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தாய்மார்களும், பெரியோர்களும் இன்று புதிய மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்.

    எனவே பொதுமக்கள் ஜாதி, மதம், குறித்துப் பேசு வோரைப் புறக்கணித்து அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும். மாநில கட்சிகளால் மட்டுமே மாநில பிரச்சினைகளை தீர்க்க முடியும். தேசியக் கட்சிகளை மக்கள் நம்பக் கூடாது. பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    எடப்பாடிக்கு கருணாநிதி மீது திடீர் பாசம் ஏன்? என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். #LokSabhaElections2019 #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் பகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    மத்தியில் உள்ள ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும். மத்திய அரசு பாசிச வெறியாட்டம் ஆடிவருகிறது.

    மகாத்மா காந்தியின் உருவபொம்மையை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் துப்பாக்கியால் சுடுகிறது. கோட்சேக்கு நாடு முழுவதும் சிலை வைக்கப்போவதாகவும் அந்த கும்பல் கூறுகிறது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வேடிக்கைதான் பார்த்தது.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறியவரே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தான் அவரிடம் விசாரணை நடத்த இந்த அரசு தயாரா? இன்று கலைஞர் மீது எடப்பாடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. அவரை பற்றியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். ஏதோ விசாரணை நடத்தப் போகிறாராம். கலைஞரை ஸ்டாலின் பெற்ற பிள்ளையைபோல் பார்த்து கொண்டார். ஏன்.. பிரதமர் மோடி உள்பட அனைவரும் அவரை பார்த்து சென்றவர்கள்தானே?

    கலைஞர் மறைந்த பிறகு ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் மெரினாவில் இடம் கேட்டு வந்தார்களே... முடியாது என்று சொன்னவர்கள்தானே... நீங்கள்? இப்போது மட்டும் கலைஞர் மீது பாசம் வந்துவிட்டதா?

    தி.மு.க. வக்கீல்கள் போராடி வாதாடி மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தார்கள். தமிழகத்தில் 18 சட்டசபை இடைத்தேர்தலோடு மேலும் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் மத்தியில் மட்டுமல்ல... மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

    இவ்வாறு வைகோ பேசினார்.  #LokSabhaElections2019 #Vaiko



    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் ரூபாயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். #dmk #mkstalin

    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 4 கோடி ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம். கடந்த பிப்ரவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் ரூபாயை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

    நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.  #dmk #mkstalin

    எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
    போரூர்:

    சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    கே.கே.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் வடக்கு பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் விழாவில் முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மா.சுப்பிர மணியன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    முடிவில் 131-வது (அ) வட்ட செயலாளர் ராஜ், செழியன், நந்தகோபால், கே.வி.எஸ்.சுரேஷ், கண்ணன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.
    கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP
    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்த பிறகும் அவர்களுடைய கூட்டணி கட்சி தலைவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது.



    இந்த பாராளுமன்ற தேர்தலில் “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முத்திரை வாசகத்தை பயன்படுத்தி எங்கள் பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நாங்கள் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP

    கமல்ஹாசனுக்கு நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #MinisterKadamburRaju #KamalHaasan
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.50.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவாலயம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நினைவு நாள் வருவதற்குள் இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு நினைவாலயமாக உருவாக்கப்படும். அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.20 கோடி செலவில் நினைவு இல்லமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    கோவில்பட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட உடன், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.

    ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. எதை சொன்னாலும் பொத்தாம் பொதுவாக படத்தில் வேண்டுமென்றால் வசனம் பேசலாம். எந்த மாண்பு குறைந்து விட்டது, யாருடைய மாண்பு குறைந்து விட்டது என்று அவர் சொன்னால் பதில் அளிக்கலாம். ஆனால், அவருக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை. அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

    மாண்பு போய் விட்டது என்று சொன்னால், ஒரே இடத்தில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு சந்திக்க தயார். அவர் தயாரா?. அவரது மாண்பு, மரியாதை, மானம் வேண்டுமானால் போகலாம். இன்று அரசியலுக்கு வந்த பின்னர் அதனை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு தெரியவில்லை. இதுவரை பேசிய எதையும் நிரூபிக்க தவறிய கமல்ஹாசன் மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொதுவாழ்வில் இருந்தும் அவர் காணாமல் போவார்.



    எங்கள் கூட்டணியை பற்றி தி.மு.க.வுக்கு என்ன கவலை. கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கிய நேரத்தில், பழத்தை சாப்பிட்டவர் ஒருவர், அதனை பார்த்துக் கொண்டிருந்தவர் மீது வழக்கா என அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ்காரர்களுக்கு அதில் தொடர்பு உண்டு என மறைமுகமாக சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்களெல்லாம் வழக்கில் சேர்க்கப்படாமல் கனிமொழி, ராசாவை மட்டும் சேர்த்ததற்காக கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் தெரிவித்தார்.

    எங்கள் கூட்டணியை பார்த்து நாங்கள் கூறவில்லை. 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு வந்த உடனே நாங்கள் தெரியாமல் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் அனுபவிக்கிறோம் என காங்கிரசை சொன்னார். அந்த காங்கிரசுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். யார் முரண்பாடான கூட்டணி வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

    இது கொச்சைப்படுத்துகின்ற வார்த்தை. தேர்தல் வரும் நேரத்தில் கொள்கைகள் வேறாக இருக்கலாம். தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி வைப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் எதிர்மறை கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால், தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். இங்கே திராவிட பாரம்பரியம் வர வேண்டும் என்று அண்ணா கூட்டணி அமைத்தார்.

    கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது அவர்களது விருப்பம். நாங்கள் அதனை விமர்சனம் செய்யவில்லை. அதே போல் இது எங்களுடைய விருப்பம். கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராகவும், மகளிரணி செயலாளராகவும் உள்ளார். ஆனால் தரமில்லாமல் விமர்சிக்கிறார். இது மக்களிடையே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #KamalHaasan
    காஞ்சிபுரத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். #MKStalin

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக காஞ்சிபுரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் சிறுவேடல் செல்வம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர பிரமாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து 95 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றுகிறார். இதேபோல் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே கல்வெட்டினை திறந்து கட்சி கொடியை ஏற்றுகிறார்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. மேற்பார்வையில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் தி.மு.க. கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முக. ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் வண்ண விளக்குகளால் கண்ணை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சி.வி.எம். அ.சேகரன், எழிலரசன் எம்.எல்.ஏ., தசரதன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். #MKStalin

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #JayalalithaDeath
    ஈரோடு :

    தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வெண்கல உருவச்சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்ன தகவல் சொன்னார்கள். ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டார் என்றார்கள். ஜூஸ் குடித்தார் என்றார்கள். ஆனால் என்ன நடந்தது?. அந்த அம்மையாரால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றும் அவரால் பதவியை பெற்று இருக்கும் எடப்பாடியும், பதவி போனதும் ஆவியுடன் பேசுகிறேன், உண்மையை கொண்டு வர விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்று கூறி துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் அமைதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் இப்போது ஏன் பேசவில்லை. மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டமோ, புகழ் அஞ்சலி கூட்டமோ நடத்தி இருப்பார்களா?. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதையும் அவர்கள்தான் கூறினார்கள்.



    தமிழக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம் இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார். ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறந்தது முதல்-அமைச்சர். அவரது மரணம் மர்மமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும். ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். இது உறுதி. சத்தியம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 5 கொலை வழக்குகள் உள்ளன. கோடநாடு காவலாளி கொலை. அந்த கொலையை மறைக்க 4 கொலைகள் என 5 கொலைகள் நடந்து உள்ளன. இதுவரை ஊழல் வழக்குகள் முதல்-அமைச்சர்கள் மீது கூறப்பட்டு உள்ளன. அதற்கு ஜெயலலிதாவே முன்உதாரணம். பல மாநில முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களும் ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் கொலை புகார் ஒரு முதல்-அமைச்சர் மீது கூறப்படுகிறது. அவர் தமிழக முதல்-அமைச்சர். அவருக்கு அதுபற்றி அவமானம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக்கு மிக அவமானமாகும்.

    எனவே இந்த தமிழக அரசுக்கும், இதற்கு முட்டுக்கொடுக்கும் பாசிச பா.ஜனதா அரசுக்கும் முடிவுகட்டி பாடம் கற்பிக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #JayalalithaDeath
    ஈரோட்டில் இன்று மாலை நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். #DMK #Karunanidhi #MKStalin
    ஈரோடு:

    தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    முன்னதாக ஈரோடு வரும் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகையையொட்டி ஈரோடு மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களான திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சிலை திறப்பு விழாவில் கட்சி முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். #DMK #Karunanidhi #MKStalin
    ×