search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    • மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசு வழங்கியது போல நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, திருமங்கலம் தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    • 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, ராஜாமடம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு மீன்பிடி தொழிலே பிரதான தொழிலாகும்.

    இந்த கிராமத்தில் 210-க்கும் மேற்பட்ட பைபர், நாட்டு படகுகள் உள்ளது.

    கடற்கரையில் இருந்து கீழத்தோட்டம் கிராமத்திற்குள் படகுகள் வந்து செல்வதற்கான ஒரே வழி இந்த முக துவாரத்தில் உள்ள வாய்க்கால்கள் மட்டும் தான்.இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முக துவாரங்களை அடைத்து கிடக்கும் மணல்களை தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன.

    இந்த பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், அந்த முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊர் பஞ்சாயத்தா ர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த பிரச்சினைக்கு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடை பெறும் என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அரசு அனுமதியின்றி பழமையான கட்டங்களை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமை வகித்தார்.

    ஒன்றிய பொருளாளர் விடுதலை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்து, அம்பை முருகேஷ், ராஜவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்செல்வன், ஒன்றிய செயலாளர் துரை.ஈழராஜா, நகரச் செயலாளர் குணா.கண்ணதாசன் ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆட்சியின்போது மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம், உறிஞ்சிக் குழாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும், பழமையான அரசு கட்டிடங்களை அனுமதி இன்றி இடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னை மதியழகன், குணா பரமேஸ்வரி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர். சிவசங்கரமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், பாண்டித்துரை, ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சிவாஜி சமூக பேரவைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் கக்கரை சுகுமாறன், ஒரத்தநாடு நகரத்தலைவர் சுப்பு தங்கராஜூ, கண்ணுக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் வைத்தியநாதன், மனோகரன், சிவாஜி, சம்பத் வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் ஜெயசூரியன், ஜீவா, விநாயகம், ராமலிங்கம், அப்பாத்துரை, ஆடிட்டர் விஸ்வநாதன், மீனாட்சி சுந்தரம், பெருமகளுர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கேபிஎஸ்எம்.கணிவண்ணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் லட்சுமணன், வட்டாரத் தலைவர் ஞானசம்பந்தம், பாலகுரு, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் சரவணன்,முன்னாள் மாநில இளைஞரணி காங்கிரஸ் செயலாளர் கமல் மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட பொருளாளர் சிவராமன், மாவட்ட பொது செயலாளர் தியாக கார்த்திகேயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நேற்று பேட்டியின் போது கூறினார். அவர் கூறும் போது போக்குவரத்து அதிகமாக உள்ளதால் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் அவசியம் தேவை. இதற்காக சேலம்-சென்னை 8 வழி சாலை வந்தே தீரும் என்று கூறினார்.

    இதை தொடர்ந்து முதலமைச்சரின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் கூறுகையில், எங்கள் உயிர் போனாலும் விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு ஒரு சொல்லும், தேர்தலுக்கு பின்பு ஒரு சொல்லும் மாறி, மாறி பேசுகின்றனர். எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொன்பரப்பியில் நடந்த தாக்குதல் கட்சிகளுக்கிடையில் நடந்த வழக்கமான தேர்தல் வன்முறையல்ல. சாதியின் பெயரால் தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட பாசிச ஒடுக்குமுறையாகும்.

    தலித்துகளின் வாக்குரிமையைப் பறிப்பது, வன்முறை வெறியாட்டம் நடத்துவது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள வாக்குகள் போடுவது போன்ற சட்டவிரோத, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அனைத்துத் தரப்பு எளியோரையும் அச்சுறுத்தும் அடக்குமுறை போக்காகும்.

    இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக சாதியின் பெயரால் எளிய மக்களின் வாக்குரிமையைத் தடுப்பது, அம்மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்துவது போன்ற வெட்கக்கேடான கொடூர ஒடுக்குமுறைகள் தொடர்வது ஜனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழிவாகும். இந்திய தேசத்துக்கே நேர்ந்த பெரும் தலைக்குனிவாகும்.

    இந்நிலையில், இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வலியுறுத்தவும், சாதிய மதவாத சக்திகளுக்கு உரிய தண்டனையளிக்க வற்புறுத்தவும் கோரி, விடுதலைச்சிறுத்தைகளின் ஒருங்கிணைப்பில் தி.மு.க. தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், நாளை (24-ந்தேதி) சென்னையிலும் 25-ந்தேதி அரியலூரிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #congress #ponparappiissue

    சென்னை:

    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கு.செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பொன்பரப்பி கிராமத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.

    இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும்.

    இந்த சம்பவத்தை கண்டித்து நாளை மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் ரத்தினம் தலைமை தாங்குகிறார். நானும், காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #congress #ponparappiissue

    அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யகோரி தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் முன்பு தி.க.வினர் திரண்டனர். அவர்கள் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யகோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான தி.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தி.க. நகர தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் இளையபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மேலும் இதில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. #pollachiissue

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    கரூர்:

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜீவானந்தம், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றிய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசாரித்து அவர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார பின்னணியில் உள்ளவர்களை காவல்துறை தப்பிக்க விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதில் ராஜாமுகம்மது, காதர்பாட்ஷா, நிர்மல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachiissue

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. இந்த கிணறு கடலூர் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட உள்ளதாக கூறி, அரங்கூர் பொதுமக்கள் நேற்று காலை ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். 

    இது குறித்து தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இந்நிலையில் பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், ஏற்கனவே அதே பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறு உள்ளதாகவும், மீண்டும் 3-வது முறையாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    ×