search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகத்தடை"

    முதுகுளத்தூர் அருகே தேவையில்லாமல் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பஸ் மீது, டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
    முதுகுளத்தூர்:

    அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி, முதுகுளத்தூர் வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பஸ் வந்தது.

    அப்போது அங்குள்ள வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி, பஸ் சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பொதுவாக பள்ளி, பொதுமக்கள் அதிகம் கூடும் சாலைகளில் விபத்தை தடுப்பதற்காக வேகத்தடை அமைக்கப்படும். ஆனால் முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடை தேவையற்றது. எனவே வேகத்தடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை 4 வழிச்சாலை பணியின் போது விபத்துகளை தவிர்க்க எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை பணிகள் 936 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட 9 இடங்களில் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. மதுரையில் இருந்து பரமக்குடி வரை சாலையின் பல இடங்களில் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் குறுக்கிடுகின்றன. இதுதவிர நகருக்குள் செல்ல சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு 45 மீட்டர் அகலத்தில் போக வர தலா இரு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அனைத்தும் அதிகபட்ச வேகத்தில் செல்கின்றன.

    உள்ளூர் வாகனங்கள் சாலைகள் குறுக்கிடும் இடங்களில் வேகத்தை குறைத்து செல்கின்றன. ஆனால் வெளியூர் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் அதிக வேகத்தில் செல்கின்றன. விபத்து பகுதி, சாலை குறுக்கிடும் பகுதி என தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. மானாமதுரை அண்ணாசிலை பைபாஸ் ரோட்டில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு இருவழிகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாலம் முடிவடையும் இடத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ளது. உள்ளுர் வாகனங்களுக்கு இந்த பஸ் நிலையம் இருப்பது தெரிந்து வேகத்தை குறைத்து செல்கின்றனர். ஆனால் வெளியூர் வாகனங்கள் பஸ்நிலையம் இருப்பது தெரியாமல் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் பஸ்நிலையத்திற்கு திரும்பும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள் குறித்து தெரியாமல், வெளியூர் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன.

    நேற்று முன்தினம் பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். சாலை குறுக்கிடும் இடம் தெரியாமலேயே இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க சாலை குறுக்கிடும் இடங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    பெண்ணாடம் அருகே எந்தவித அறிவிப்பு பலகையும் இல்லாமல் வேகத்தடை அமைத்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள சின்ன கொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் விபத்துக்களை தடுக்க நேற்று மாலை புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது.

    இந்த வேகத்தடையின் அருகில் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. அதன் அருகே மின்வளக்கு வசதியும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாததால் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.

    இந்தநிலையில் பெண்ணாடத்தை அடுத்த முருகன் குடியை சேர்ந்த சலீம் என்பவர் நேற்று இரவு பெண்ணாடம் ரெயில் நிலையத்துக்கு சென்று அவரது உறவினர் சாயிரா பானு என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு முருகன்குடி நோக்கி வந்தார். கொசப்பள்ளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை இருப்பது தெரியாமல் சலீம் வந்து கொண்டிருந்தார்.

    புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை மோட்டார் சைக்கிள் கடந்த போது சலீமின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடு மாறிய சலீமும், அவரது உறவினர் சகீரா பானுவும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பேரும் வேகத்தடை அமைக்கப்பட்ட கொசப்பள்ளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். வேகத்தடை உள்ள பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்துநின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வேகத்தடையின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக் கடி விபத்து ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வாரணவாசி கிராமம் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த கொடி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பயந்து அலறியடித்து ஓடினர்.



    இதையடுத்து அந்த பகுதி கிராம மக்கள் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இங்கு விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரம்பலூர்-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்துவந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதே இடத்தில், கடந்த ஆண்டு மணல் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, வீடு மற்றும் கடையினுள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. லாரி மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மேலும், கடந்த 28-ந் தேதி பஸ்சுக்காக நிழற்குடையில் காத்திருந்த பயணிகள் மீது வேகமாக வந்த கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×