search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110052"

    • பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்படும்.
    • சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கல்யாணசுந்தரம் எம்.பி., அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

    இதை ஏற்று மேற்கண்ட பஸ்சை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடந்தது. இதில் சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ராமலிங்கம் எம்.பி., தமிழக அரசின் தலைமை கொறடா செழியன், சண்முகம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜவாஹிருல்லா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், பொது மேலாளர் ஜெயராஜ் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்யாணசுந்தரம் எம்.பி. பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் அய்யாராசு, அரசு வக்கீல் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் நன்றி கூறினார்.

    இந்த பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னையை சென்றடையும். இதேபோல், சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    • சென்னை வானிலை மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது.
    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து நகரில் வெப்பம் தணிந்துள்ளது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை செண்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல், முகப்பேர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    • மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.
    • கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட பொருட்களை அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தவும் கண்காட்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2023-24-ம் ஆண்டு மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.

    இந்த மேளாவில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த கைவினை பொருட்கள், எம்பிராய்டரி துணி வகைகள், ரெடிமேடு ஆடைகள், பரிசு பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பூவகைகள், தரமான ஊதுபத்தி, தேன், மூலிகை பொருட்கள், அலங்கார சங்கு பொருட்கள், கைப்பைகள், உணவு பொருட்கள், சணல் பொருட்கள் மற்றும் பல பொருட்களை இந்த கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்–படும்.

    மண்டல அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் அறை எண்.305-ல் வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளரை 97901 64775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 16106 ,16105 ஆகிய ரெயில்கள் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அசுபதி சந்திரன் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ஒரு முக்கியமான கோவில் நகரம். இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் அதன் அருகில் உள்ள ஊர்களான உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் குலசேகரன்பட்டி னமும் ஒரு புண்ணிய நகரமாகும். அவ்வூரிலும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குரிய வேலைகளும் இந்திய அரசாங்கத்தால் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த வேலைகளுக்காக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரை வந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர்.

    மேலும் நெல்லை- திருச்செந்தூருக்கு இடைப்பட்ட நாசரேத் ஊர் ஒரு கல்வி நகரமாகும். இவ்வூரில் பல பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

    பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதற்கு வசதியாக வண்டி எண் 16106 ,16105 ஆகிய ரெயில்கள் திருச்செந்தூர்-சென்னை, சென்னை-திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது. இதில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கிட வேண்டும்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கி தந்தால் இந்த பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

    மேலும் இந்த பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் கிடைக்கும். மேலும் இங்குள்ள மக்கள் நலன் கருதி வண்டி எண் 16845 ஈரோட்டில் இருந்து நெல்லை, வண்டிஎண் 16846 நெல்லையில் இருந்து ஈரோடு வரை ரெயில் களை மேற்சொன்ன காரணங்களுக்காக திருச்செந்தூர் வரை நீட்டித்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனைவி போலீசில் புகார்
    • திருவட்டார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மத்திய உளவுத்துறை அதிகாரி ஜெயசிங்கை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சென்னை கே.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள மத்திய பொதுப்பணித்து றைக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயசிங் (வயது 46) இவரது மனைவி நிஷாகுமாரி (39).

    ஜெயசிங் அந்தமானில் உள்ள மத்திய உளவுதுறை யில் ஜூனியர் இன்டலி ஜென்ட்ஸ் அலுவலராக (ஜே.ஜ.ஓ) பணிபுரிந்து வருகிறார் கடந்த மாதம் 25-ந்தேதி விடுமுறையில் சென்னைக்கு வந்தவர்

    கடந்த 11-ந்தேதி காட்டாத்துறை யில் உள்ள தனது தாயார் குமரி தங்கத்தை பார்க்க வந்தார். மறுநாள் சென்னைக்கு செல்வதாக தன் தாயிடம் கூறிவிட்டு சென்றார். போகும்போது தன் செல்போனை மறந்து வைத்துவிட்டு சென்றார். மறுநாள் சென்னக்கு சென்று சேரவேண்டிய ஜெயசிங் வீட்டுக்கு போகவில்லை.

    உடனே இவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் ஜெயசிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் தன் கணவரை காணவில்லை என்று திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மத்திய உளவுத்துறை அதிகாரி ஜெயசிங்கை தேடி வருகிறார்கள்.

    • மெர்க்கன்டைல் வங்கியின் 510-வது கிளை சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சென்னை கோயம்பேட்டில் மெர்க்கன்டைல் வங்கியின் 511-வது கிளை திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தையில், தனது பங்கை பட்டியலிட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி 509 கிளைகளுடன் செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் புதிதாக 2 வங்கி கிளைகள் நேற்று திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி 510-வது கிளையானது சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிளை அலுவலகத்தை தேவூர் பேரூராட்சி தலைவர் என்.தங்கவேல் திறந்து வைத்தார். 511-வது கிளை சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை கோயம்பேடு மொத்த காய்கனி, பூ மற்றும் உணவு தானியங்கள் சந்தைகள் தலைவர் டி.ராஜசேகரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் வங்கி உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறும் போது, 'பங்குசந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக தமிழகத்தில் 510, 511-வது புதிய வங்கி கிளைகளை திறந்து உள்ளோம். இன்னும் அதிக கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த கிளைகள் தொடக்க விழாவின் மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வட தமிழகம், புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • கடத்திச் சென்ற ரவுடி போக்சோ சட்டத்தில் கைது
    • குமரி போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த அவரது தோழியான மற்றொரு மாணவியும் திடீ ரென ஒரே நாளில் மாயமானார்கள்.

    இது தொடர்பாக மார்த்தாண்டம் மற்றும் திருவட்டார் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 மாணவிகளையும் தேடி வந்தனர்.

    அப்போது மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தபோது இருவரும் ஒரே எண்ணுக்கு தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது.அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்திய போது, அது திருவட்டார் குட்டக்குழி காலனி பகுதியைச் சேர்ந்த வினு (வயது 22) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான வினுவை தேடிச் சென்ற போது, அவரும் வீட்டில் இல்லை. எனவே அவர் தான் 2 மாணவிகளை கடத்திச் சென்றிருக்கலாம் என ேபாலீசார் கருதினர்.

    இதையடுத்து பினுவின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்த னர். இதில் அந்த எண் சென்னை திருவான்மியூரில் இருப்பது கண்டு பிடிக்க ப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 2 மாணவி களுடன் வினு இருப்பது தெரிய வந்தது. மாணவி களை மீட்ட போலீசார், அவர்களையும் வினுவையும் குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். பின்னர் 2 மாணவிகளும் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2 மாணவி களையும் தனித்தனியாக சந்தித்து பேசி வினு தனது வலையில் வீழ்த்தியதும், பின்னர் 2 பேரையும் ஓன்றாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

    மேலும் ரவுடி வினு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதனை மாணவிகளிடம் கூறாமல் அவர்களுடன் பழகி வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து ரவுடி வினுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாய்ப்பு உள்ள தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 மாணவி களும் இன்று மருத்துவ பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
    • சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் இன்று காலை முதல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மாலையில் நிகழ்ததப்பட்ட வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. சில இடங்களில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

    நள்ளிரவு வரை சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டது போல் காணப்பட்டது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரது பேருந்து போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவிற்கு அதிகரித்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் காற்றில் நுண் துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    • மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும்.

    மழை வருது...

    மழை வருது...

    என்றால் இது ஒரு மேட்டரா...?

    மாதம் மும்மாரி மழை பெய்து செழித்த பூமிதானே நம்ம பூமி என்று கிராமத்து விவசாயி சிரிப்பான்.

    அட உங்களுக்கு என்னப்பா ஊரு பக்கம் எவ்வளவு மழை பெய்தாலும் கவலை இல்லை. சென்னையில் அப்படியா? ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிச்சுன்னா தண்ணீரில் மிதந்து தான் போகணும். இதுதான் இதுவரை நடந்த மழைக்கால அனுபவங்கள். இந்த ஆண்டாவது விடிவு காலம் பிறக்குமா என்பதுதான் சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பு.

    அதற்கு முக்கிய காரணம் சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மாத கணக்கில் நடக்கிறது. சின்ன சின்ன தெருக்களை கூட விட்டு வைக்க வில்லை. மழைநீர் கால்வாய் பணிகள் என்று தோண்டி போட்டுள்ளார்கள்.

    எனவே இந்த பணிகள் முற்று பெற்று விட்டால் மழைநீர் தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பருவமழை தொடங்கட்டும் பார்ப்போம் என்கிறார்கள்.

    பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மேயர் பிரியா கூறியதாவது:-

    மழைநீர் வடிகால்வாய் பணிகள் வருகிற 15-ந்தேதிக்குள் முடிந்துவிடும். சிங்கார சென்னை முதல் பகுதி திட்டத்தில் 1354 கிலோ மீட்டர் நீளத்துக்கான கால்வாய் சீரமைப்பு பணிகளில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. 1030 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடைப்புகள் நீக்கப்பட்டு தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும். எங்கும் தண்ணீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எங்காவது தண்ணீர் தேங்கினால் 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டை போல பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறும்போது, 'பணிகள் முடிந்த இடங்களில் உடனடியாக குழிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குழிகள் உள்ள இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

    கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 400 மோட்டார்கள் 100 குதிரை திறன் சக்தி கொண்டது. இந்த மோட்டார்கள் ஒவ்வொன்றும் நிமிடத்துக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டவை.

    கால்வாய்கள் இணைக்காத இடங்களில் ஏற்படும் தண்ணீர் தேக்கத்தை சமாளிக்க இந்த மோட்டார்கள் பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

    34 இடங்களில் வெள்ளம் சூழ்வது தவிர்க்க முடியாது என்று கூறி உள்ளார்கள். அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மழைவெள்ள பாதுகாப்பு தொடர்பான தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சேகர் ராகவன் கூறும்போது, 'நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவு பொருட்களால் நிரம்பியும் கிடக்கின்றன. இந்த நிலையில் தண்ணீர் எப்படி போகும்?

    மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும் எங்கே போகும். மீண்டும் பழைய நிலைதான் ஏற்படும்' என்றார்.

    சிவில் என்ஜினீயரான தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது:-

    இணைக்கப்படாத கால்வாய்களை இணைப்பதில் இவ்வளவு காலதாமதம் ஏன்? 5 செ.மீ. மழை தண்ணீரை தங்கும் அளவுள்ள கால்வாய்களில் 10 செ.மீ. மழை வந்தால் எப்படி சமாளிப்பது? அதிலும் இப்போது மேக வெடிப்பு மூலம் மழை கொட்டுவதும் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படும்.
    • 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.

    திருப்பூர் :

    ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் மதியம் 1:45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.இந்த ெரயில், காசர்கோடு, பையனூர், கண்ணுர், கோழிக்கோடு, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நின்று 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தாம்பரம் சென்றடையும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    கடையம்:

    பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கே.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் வருகிற 14-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டரை ஊராட்சியே முடிவு செய்ய அதிகாரம் வழங்க வேண்டும், ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளோம்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரெயில் மூலமாகவும், ஆம்னி பஸ்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×