என் மலர்
நீங்கள் தேடியது "விசாரணை"
- பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும்.
- குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அறிவுரை கூறினார்.
பாபநாசம்:
பாபநாசம் கிளை சிறையில் சிறைச்சாலை நீதிமன்றம் நடைபெற்றது பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.
முன்னதாக சிறைச்சாலை பற்றியும், சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் விசாரணை கைதிகளுக்கு விளக்கமாக கூறினார். மேலும் விசாரணை கைதிகள் ஒவ்வொரு இடமும் குற்றத்தின் தன்மைகள் பற்றி கேட்டறிந்தார்.
வழக்கறிஞர் வைத்து பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது போன்ற குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்கவும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழவும் அறிவுரை கூறினார் இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப்பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.
- தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார்.
- ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சி கிருஷ்ணாபுரம் வ.உ. சி. தெருவை சேர்ந்த வர் சையத் ஜின்னா. அவரது மகன் சையத் இத்ரிஸ் (வயது 35). இவர் மேல்மலையனூ ரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் செஞ்சி மேய்கலவாய்_ சந்தை தோப்பு சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளியின் அருகே அடையாளம் தெரியாத 3 பேர் வழிமடக்கி மிரட்டல் விடுத்து அவர் வைத்தி ருந்த ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சையத் இத்ரிஸ் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். எப்போதும் போக்குவரத்து இருக்கும் பகுதியில் வாலி பரை வழிமடக்கி பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செஞ்சி அருகே கடைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் திடீர் மாயமானார்.
- கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்பவில்லை.
விழுப்புரம்:
செஞ்சி அருகே அனந்தபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். அவரது மகன் சூர்யா (வயது 15).அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவன் மாலையில் கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்ப வில்லை.அதிர்ச்சி அடைந்த மோகன் தனது மகனை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மோகன் கிடைக்கவில்லை. இது குறித்து மோகன் அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சூர்யா என்ன ஆனார், எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை.
- பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரணியல், அக்.27-
வில்லுக்குறி மேலப்பள்ளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரது மகள் ஆதித்யா (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் மஞ்சு (44) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- பிரேக் பிடிக்காததால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
நீடாமங்கலம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சாகிர் உசேன்.
இவரது மகன் அப்துல் ரஜும் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உத்தாணி அருகே சென்ற போது சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. லாரி நிற்பதை கண்டு அப்துல் ரஜும் பிரேக் அடிக்க முயற்சி செய்துள்ளார்.
பிரேக் பிடிக்காததால் லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கரூரை சேர்ந்த மணிவண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
- கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பாக்கம் பகுதியில் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கல்லூரிக்கு அய்ய ந்தோப்பு பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவரும், அம்மணம்பாக்கம் ஏழுமலை என்பவரும் காவலாளியாக இருந்து ள்ளனர்.
இந்நிலையில் கணினி அறிவியல் துறை துணைத்தலைவர் பிரசன்னா, விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கணினி அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த கணினி பொருட்கள் மற்றும் இரண்டு சிஸ்டம் பேட்டரி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரோசணை காவல்து றையினர் அரசு கல்லூரி அறையின் பூட்டை உடைத்து கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவாளால் முகத்திலேயே சரமாரியாக வெட்டினர்.
- விசாரணையில் சுவாமிநாதனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்லம்:
தஞ்சாவூர் அருகே வடக்கு வாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 36).
பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
வெளியூரில் தங்கி இருந்த சாமிநாதன் தீபாவளி பண்டிகைகாக தஞ்சைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து சுவாமிநாதன் தஞ்சை அருகே உள்ள பிருந்தாவனம் ஆர்ச் அருகே வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவா ளால் முகத்திலேயே சரமாரி யாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் இறந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுவாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார்வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், சுவாமிநா தனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்ப ட்டுள்ளார். இதற்கு பழிக்குப்பழி வாங்கு வதற்காக சுவாமிநாதன் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.
தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
- தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து வடசேரி புத்தேரி இறச்ச குளம் வழியாக காட்டுப்புதூ ருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு அண்ணா பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் ஒன்று காட்டுப்பு தூருக்கு சென்றது. பஸ்ஸில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுமன் (வயது 23) என்பவர் பயணம் செய்தார். அவர் பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும் சுமனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் சுமன் காட்டுப்புதூர் பகுதியில் பஸ்சை விட்டு இறங்கி அவரது சகோதரி வீட்டிற்கு சென்றார். வழக்கமாக பஸ் காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது வழக்கம்.அதேபோல் டிரைவர் கண்டக்டர்கள் இரவு பஸ்ஸை காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைத்தி ருந்தனர்.
இதேபோல் காட்டுப்புதூ ருக்கு இயக்கப்படும் மற்றொரு அரசு பஸ்சும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ்ஸில் 2 டிரைவர்களும் கண்டக்டர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
இதையடுத்து டிரைவர் கண்டக்டர்கள் கண்விழித்து பார்த்த போது பஸ்ஸின் கண்ணாடியை சுமன் கல்வீசி உடைத்து கொண்டு இருந்தார். இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்தன. உடனே டிரைவர், கண்டக் டர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பஸ் கல்வீசி உடைக்கப் பட்டது குறித்து பூதப் பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சுமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஊருக்குள் பதுங்கி இருந்த சுமனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 7 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் மாடாத்தி அம்மாள். இவரது மகள் பிரியலட்சுமி (வயது 19). சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனுடன் மாயம்
சாத்தூர் வெங்கடாசல புரத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு தர்ஜித் (5) என்ற மகன் உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா அணிந்திருந்த 5 ½ பவுன் நகை மாயமானது. இதுகுறித்து வீரகுமார் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரியா தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தேக்கங்குளத்தைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன் நித்தின் (16). இவர் காரியாபட்டியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று நித்தின் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி
சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் பத்திரகாளி. இவரது மகள் ராஜரா ஜேஸ்வரி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி ரிசர்வ்லைனைச் சேர்ந்தவர் கதிரேஷ். எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீமா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மனைவி செல்போனில் பேசுவதை கதிரேஷ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த லீமா மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் முத்தண்டியா புரத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஈஸ்வரபாண்டி (17). தீபாவளி மறுநாள் வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.
- உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
- அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார்.
குழித்துறை, அக்.27-
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பழைய கடை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ஜாண் (வயது 53), இவருக்கு பெல்ஸ் மேரி (43) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். மைக்கேல் ஜாண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் வந்ததும் வயிறு வலிப்பதாக துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார்
- அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது
- அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில், அக்.27-
ஈத்தாமொழி வண்டா விளை பகுதியைச் சேர்ந்தவர் ஆதி சிவசாமி. இவரது மனைவி தங்கம் (வயது 61). இவர் சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார். பெருஞ்செல்வ விளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது . இதன் மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தங்கம் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
- இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார்.
குழித்துறை, அக்.27-
மார்த்தாண்டம் அருகே நல்லூர் புளியங்விளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 67). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் துணிக்கடை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென எரிவதை பார்த்ததும் மார்க்கெட்டில் இருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் கடையின் முன் பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெட்ஷீட் மற்றும் துண்டுகள் எரிந்து நாசமானது. இதையடுத்து ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜியை தேடி வருகின்றனர்.