என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணம்"
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ்-2 வரை ஈரோடு பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிக்க சென்றார்.
அங்கு படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கும் பிரித்வி செல்லமுத்துவுக்கும் காதல் ஏற்பட்டது. ஏஞ்செலா கிளைபர் டாக்டருக்கு படித்து முடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதன் படி பிரித்வி செல்லமுத்து - ஏஞ்செலா கிளைபர் திருமணம் வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. மணமகள் பட்டு சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் பிரித்வி செல்லமுத்து தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
பின்னர் அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். #Marriage
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் பிள்ளையார் குப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 28). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு லாஸ்பேட்டையில் தற்காப்பு கலை பயிற்சி, நடன வகுப்பு நடத்தி வருகிறார்.
இவர் முத்தியால் பேட்டையில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் இவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில் பெண் வீட்டில் சில வருடம் கழித்து திருமணம் செய்யலாம் என கூறி அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தினர். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த ராமதாஸ் சில நாட்கள் வீட்டுக்கு செல்லாமல் பயிற்சி மையத்திலேயே தங்கினார்.
நேற்று வீட்டுக்கு வந்த ராமதாஸ் உடனே கிளம்பினார். அவரது சித்தப்பா புகழேந்தி (52) ஏன் உடனே செல்கிறாய்? என கேட்டார்.
அதற்கு பதில் சொல்லாமல் பயிற்சி மையத்துக்கு சென்று சித்தப்பாவுக்கு போன் செய்தார். எதுவும் பேசாமல் வைத்து விட்டார்.
அவரது சித்தப்பா மீண்டும் போன் செய்து பார்த்தார். மறுமுனையில் போனை எடுக்கவில்லை. எனவே, சந்தேகத்தில் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கு ராமதாஸ் மின் விசிறி கொக்கியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது ராமதாஸ் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எனது சாவுக்கு நான் தான் காரணம். எனக்கு வாழ பிடிக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட் நகரில், நகராட்சி கூட்டம் நடந்தது. பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே நடந்து விட்டது.
இந்த நகராட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த கவுன்சிலர் வைபவ் பஜாஜ், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கவுன்சிலர் டிம்பிள் ஆஜ்மெராவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
அதை ஆஜ்மெராவும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து நகராட்சி கூட்டத்திலேயே சபையின் மையப்பகுதிக்கு வைபவ் பஜாஜ் வந்து முழங்காலில் நின்றவாறு ஆஜ்மெராவுக்கு மோதிரம் கொடுத்து திருமணம் செய்தார். திருமணம் முடித்த சூட்டோடு சூடாக அந்த தம்பதியர் அன்பு முத்தம் பரிமாறிக்கொண்டனர். சக கவுன்சிலர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபற்றி டிம்பிள் ஆஜ்மெரா டுவிட்டரில் வேடிக்கையுடன், “சக கவுன்சிலர்களே, இந்த தீர்மானத்தில் யாருக்கேனும் ஆட்சேபம் இருக்கிறதா? ஏனென்றால் இரு தரப்பு ஒப்பந்தத்தில்தான் வைபவ் பஜாஜ் நம்பிக்கை வைத்து உள்ளார். முக்கியமான விஷயம், குடும்பம் சார்ந்த, அன்பான, கருணை உள்ள ஒரு வாழ்க்கைத்துணைவர் எனக்கு கிடைத்ததற்காக நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார். #CharlotteCouncil #MarriageProposal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்