என் மலர்
நீங்கள் தேடியது "கார் மோதல்"
- இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதோ தனியார் பாலி டெக்னிக் என்ற இடத்தில் இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் அவர் மீது மோதி தலைக்கு ப்பராக கவிழ்ந்தது மோதிய விபத்தில் பெயர் ஊர் தெரியாத இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல்அறிந்த திரு நாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக கல்லூரி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாகன விபத்தில் சிக்கியவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.
- அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
- இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிகளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் விருத்தாச்சலம் -திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் இறையூர் கிராமத்திலிருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.அப்போது அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (28), பழனிவேல் மனைவி அன்புச்செல்வி (40) ,இறையூர் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் கலைமதி (20), ஆகியோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி அளித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.
- இரணியல் போலீசில் புகார்
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள நெய்யூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சியாம் தம்புஜி (வயது 87). இவர் புத்தாண்டு அன்று நள்ளிரவில் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெய்யூர் தெற்கு தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சியாம் தம்புஜியை உரசி தள்ளி விட்டு அருகில் உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது. கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த விபத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. மேலும் சியாம் தம்புஜி பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து நெய்யூர் சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜேக்கப் ஜெயக்குமார் (73) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- லோகநாதன் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
- கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமாம்பட்டு அருகே சென்றபோது தனக்கு பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை.
- மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை. அவரது மகன் கார்த்திகேயன் (வயது 23). இவர் நேற்று இரவு தென்னமாதேவியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.தென்னமாதேவி டோல்கேட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குபதிந்து லாரி டிரைவரை கைது செய்தனர்.
- ராமநாதபுரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
- காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே மேலவலசை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47). இவர்களுக்கு திவாகர் (20) என்ற மகன் உள்ளார்.
சம்பவத்தன்று திவாகருடன் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பினர். ரெகுநாதபுரம் விலக்கு ரோடு அருகிலுள்ள குவார்ட்டர்ஸ் அருகில் வாகனத்தை நிறுத்தி தமிழ்செல்வியும், திவாகரும் ஆறுமுகத்தின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் திவாகர் ஆகியோர் மீது மோதியது. இதில் திவாகருக்கு தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். தமிழ்ச்செல்விக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் திவாகரை மீட்டு ராமநா தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அருள்பிரகாஷ் ரம்யா மற்றும் குழந்தையுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
- மருத்துவர்கள் கவிஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 53) இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈய்யனூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்து அங்கிருந்த தனது வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது 2-வது குழந்தை சஷ்மிதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவி ரம்யா மற்றும் குழந்தையுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
அப்போது மூத்த மகள் கவிஷ்மிதா (2) என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவிஷ்மிதாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவிஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அருள்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணன் மகன் மூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன்.
- சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்து காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன் (வயது 43) .சம்பவத்தன்று இவர் தனது காரில் சேவூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவினாசி சேவூர் ரோடு சூளைப்பகுதியைச் சேர்ந்த பாலமுருளி என்பவர் சென்ற கார் மற்றும் கோவையைச் சேர்ந்த சஞ்சய் பாலு ஆகியோரது கார் மீதும் சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சிலர் இரு சக்கர வாகனத்தில் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் சேதுராமன் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
- வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர்.
- விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மகன் வினித்குமார் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை தினம் என்பதால் வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர். அப்ேபாது பண்ருட்டியில் இருந்து வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி, மகன் வினித்குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் மோதி வாலிபர் பலியானார்.
- செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (19). இவர் விருதுநகர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மகேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறி மகேந்திரன் கீழே விழுந்தார்.
எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சொகுசு கார் ஒன்று, சாலை ஓரம் தூங்கிய சூர்யா மீது மோதியது.
- காரில் வந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக சூர்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22) பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பெசன்ட் நகர் கலாசேத்ரா காலனி, வரதராஜ் சாலை நடைபாதை அருகே தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, சாலை ஓரம் தூங்கிய சூர்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் சூர்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பெண்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி ஓடினர்.
மேலும் காரில் வந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக சூர்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஸ் தலைமையிலான போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்களை வைத்து விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநில எம்பி பீடா மஸ்தானின் மகள் பீடா மாதூரி என்பது தெரியவந்தது. இவர் புதுச்சேரியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் போலீசார் நேற்று மாலை பீடா மாதூரியை கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் பீடா மாதூரி போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நடைபாதையில் தூங்கிய பெயிண்டர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுவன் காலி மைதானத்தில் உட்கார்ந்தபடி தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
- ஈவு, இரக்கமின்றி காரை நிறுத்தாமல் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு நைபாடா பகுதியை சேர்ந்த சிறுவன் ராகவ்குமார் சர்மா (வயது 6). இவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் உட்கார்ந்தபடி தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அவன் பின்னால் சற்று தூரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த டிரைவர் திடீரென காரை எடுத்து முன்னோக்கி இயக்கினார். முன்புறம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் மீது கார் ஏறியது. இதில் இரு சக்கரங்களுக்கும் இடையில் சிக்கி கொண்ட சிறுவனை கார் சிறிது தூரம் இழுத்து சென்றது. பின்னர் பின்சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இந்த பயங்கர விபத்தை அடுத்து கார் நிற்காமல் சென்று விட்டது.
காரில் அடிப்பட்ட சிறுவன் உருண்டு புரண்டு எழுந்தான். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் நின்ற சிறுவர்கள், அதிர்ச்சியுடன் உதவிக்காக ஓடி வந்தனர். இருப்பினும் எழுந்த சிறுவன் 'குடுகுடு' வென வீட்டுக்கு ஓடிச் சென்றான். அவனது நண்பர்கள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார் ஏறிச் சென்றதில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும் அவனுக்கு அதிகளவில் உள்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தலை, நெஞ்சு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈவு, இரக்கமின்றி காரை நிறுத்தாமல் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
இதற்கிடைய சிறுவன் மீது கார் மோதி ஏறி, இறங்கிய சம்பவமும், உடனடியாக சிறுவன் எழுந்து வீட்டுக்கு ஓடி சென்ற காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.