என் மலர்
நீங்கள் தேடியது "கொலை மிரட்டல்"
- நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
- முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முகமது சமிக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக முகமது சமி உடனடியாக தனது சகோதரர் முகமது ஹசீப் அம்ரோஹா மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொலை மிரட்டல் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார்.
- நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம்.
- விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என கொலை மிரட்டல்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
- இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் காவல் நிலையத்தில் கம்பீர் அளித்துள்ளார்.
- கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.-யுமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் புகார் அளித்துள்ளார்.
'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது புகாரில், தனக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் "IKillU" என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த விளையாட்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
- அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மிரட்டல் விடுத்ததாக அடையாளம் காணப்பட்ட குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த மயங்க் பாண்டியா என்ற 26 வயது இளைஞரை வோர்லி போலீசார் இன்று கைது செய்தனர். ஆனால் அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார். இதனால் ஒரு நோட்டீசுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.
- கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
- பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.
குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
- பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார்.
- எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சட்டியை சுப்பிரமணியன் மீது மாரிச்சாமி தள்ளி விட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் புது மனை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருவேங்கடம் சாலை பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்டதற்கு சுப்பிரமணியன் மாரி சாமியிடம் பணம் கேட்டுள் ளார்.
ஆத்திரமடைந்த மாரிசாமி நான் யார் தெரியுமா என கேட்டு எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சிக்கன் சட்டியை சுப்பிரமணியன் மீது தள்ளி விட்டார். இதில் எண்ணை கொட்டி சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். மேலும் மாரிச்சாமி சுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்த சுப்பிர மணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரதாஸ் (வயது 46). இவரது மனைவி ராஜலக்ஷ்மி. இவர் 36- வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சங்கரதாஸ் அகற்றும் போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பக்கிரி உள்ளிட்ட சிலர் சங்கர் தாஸை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
இதில் சங்கரதாஸ், உஷா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சங்கர்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், பக்கிரி, குப்புராஜ், வினோ, ரவீந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீதும், உஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கரதாஸ், வெள்ளையன், கபிலன் உள்ளிட்ட 6 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- குடிநீர் வினியோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார்.
- போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளகுறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்க லம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (41). டேங்க் ஆபரேட்டரான இவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் (வயது 45) என்பவர் குடிநீர் வினி யோகம் செய்வது தொடர்பாக சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், டேங்க் ஆபரேட்டர் சரவணன் பொது மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதை கேட்ட என்னை ஆபாசமாக திட்டியதாக கூறியிருந்தார். அதன்அடிப்படையில் டேங்க் ஆபரேட்டர் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது தங்கை பிறந்தநாளுக்கு சூர்யா என்பவர் தனது நண்பர்களுடன் வாழ்த்து கூற வந்தார். அப்போது சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து எதற்காக வாழ்த்து கூற வந்தீர்கள்? என்று கூறி சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் உட்பட 3 பேரும், சபரி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (40) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார். இதைபார்த்த தயாளன் எதற்காக எனது நிலத்தில் டிராக்டரை ஓட்டிச் செல்கிறாய் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருள் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருள் மீது சங்கராபுரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்