என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை"

    • நாளை காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம்.
    • வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (2-ந்தேதி) கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் சித்திரை விசுக்கனி தரிசனம் நாளை (14-ந்தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

    நாளை காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குகின்றனர். காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம். இதற்காக பக்தர்கள் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.
    • பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் மாதம்தோறும் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    தற்போது பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்தபடி உள்ளனர்.

    இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற மே மாதத்தின் மத்தியில் மாதாந்திர பூஜை நடைபெறும் போது சபரிமலைக்கு வர திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.

    சபரிமலை செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி, பின்பு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நிலக்கல்லுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்லும் அவர், பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள், திருவிதாங்கூர் தேவசம்போர்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    மேலும் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர்.

    • இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.

    இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

    சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவிலில் விளக்கேற்றினார்.

    ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் கொடிக்கம்பம் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி 18-வது படியில் ஏறிய பக்தர்கள், கொடிக் கம்பம் மற்றும் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக கோவிலின் முன்புறம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்மூலம் பக்தர்கள் 30 முதல் 50 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் இந்த முறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவியது. 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது.

    • நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.
    • நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    முன்னதாக, "பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்" என தெரிவித்தார்.

    சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
    • மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பம்பையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சீசனை முன்னிட்டு நிலக்கல்- பம்பை இடையே தினசரி 200 பஸ்கள் இயக்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பிறமாநிலங்களில் இருந்து குழுவாக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனி பஸ்வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால் குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும். வயதான ஐயப்ப பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.
    • தரிசனத்திற்கு வரும் அனைத்து ஐய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும்.

    நாகர்கோவில்:

    திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந்தேதி மாலை தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை நடை திறக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். மகரவிளக்கு ஜனவரி 14-ந்தேதி நடக்கிறது.

    சபரிமலை ஐய்யப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் கேரள மாநில அரசு, தேவசம் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணைந்து ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 13 மையங்களில் உடனடி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லத்தில் கொட்டாரக்கரா மகாகணபதி கோவில், பத்தனம்திட்டாவில் நிலக்கல் அடிப்படை முகாம், பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழாவில் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயத்தில் எருமேலி கோவில், எட்டூமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளத்தில் பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கியில் குமுளி, மூழிக்கல், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதற்கு பதிவு செய்யலாம்.

    சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் அனைத்து ஐய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும். ஐய்யப்ப பக்தர்களுக்கு எந்தவிதமான கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை.

    சபரிமலை செல்லும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயோடாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதானத்தில் ஐய்யப்ப பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம்.

    அப்பம், அரவணை, அபிஷேகம், நெய் போன்ற பிரசாதங்கள் வழங்க சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டல மகரவிளக்கு விழாவையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் சிறப்பு தேவசம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பம்பை நதி மற்றும் சபரிமலை செல்லும் வனப்பாதையில் உள்ள நீராடல் படிகளில் தேவையான மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றின் ஆழம் குறித்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த மண்டல மகரவிளக்கு யாத்திரையில் கொரோனா சூழலுக்கு பிறகு முதன்முறையாக வனப்பாதை புல்மேடு மற்றும் எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காக திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வழியில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்யும். இந்த காட்டு வழி பகுதிகளில் ஷெட் மற்றும் இளைப்பாறும் வசதியையும் தேவசம் போர்டு ஏற்பாடு செய்யும். பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரெயில்வே மூலம் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.

    நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவை இயங்கும். இதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் 300 பஸ்களை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படுகிறது. உடல் ஊனமுற்ற பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள ஐய்யப்ப பக்தர்கள் குழுவிற்கு விருப்பமுள்ளவர்களுக்கு சிறப்பு சேவையை கேரளா அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. முன்பதிவு முறையை பக்தர்கள் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா சான்றிதழ் தேவையில்லை
    • திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தகவல்

    நாகர்கோவில்:

    திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் நாகர்கோவி லில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந்தேதி மாலை தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27 -ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை நடை திறக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். மகரவிளக்கு ஜனவரி 14-ந்தேதி நடக்கிறது.

    சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் கேரள மாநில அரசு, தேவசம் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணைந்து ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 13 மையங்களில் உடனடி முன் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லத்தில் கொட்டாரக்கரா மகாகணபதி கோவில், பத்தனம்திட்டாவில் நிலக்கல் அடிப்படை முகாம், பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழாவில் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயத்தில் எருமேலி கோவில், எட்டூமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளத்தில் பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கியில் குமுளி, மூழிக்கல், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதற்கு பதிவு செய்யலாம்.

    சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் அனைத்து அய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கு எந்தவிதமான கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை.

    சபரிமலை செல்லும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம்.

    அப்பம், அரவணை, அபிஷேகம், நெய் போன்ற பிரசாதங்கள் வழங்க சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டல மகரவிளக்கு விழாவையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் சிறப்பு தேவசம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பம்பை நதி மற்றும் சபரிமலை செல்லும் வனப்பாதையில் உள்ள நீராடல் படிகளில் தேவையான மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றின் ஆழம் குறித்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த மண்டல மகரவிளக்கு யாத்திரையில் கொரோனா சூழலுக்கு பிறகு முதன்முறையாக வனப்பாதை புல்மேடு மற்றும் எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காக திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வழியில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்யும். இந்த காட்டு வழி பகுதிகளில் ஷெட் மற்றும் இளைப்பாறும் வசதியையும் தேவசம் போர்டு ஏற்பாடு செய்யும். பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரெயில்வே மூலம் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.

    நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவை இயங்கும். இதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் 300 பஸ்களை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படுகிறது.உடல் ஊனமுற்ற பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள அய்யப்ப பக்தர்கள் குழுவிற்கு விருப்பமுள்ளவர்களுக்கு சிறப்பு சேவையை கேரளா அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. முன்பதிவு முறையை பக்தர்கள் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படும்.
    • மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும்.

    சபரிமலை :

    திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படும். அன்று மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த பூஜைக்காக டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். ஜனவரி 20-ந் தேதி வரை நடை திறந்திருக்கும்.

    சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அவசியம். ஆன்லைன் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்காக உடனடி முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல் மையத்தில் மட்டும் 10 உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை மகா கணபதி கோவில், பத்தனம் திட்டா மாவட்டம் பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயம் மாவட்டம் எருமேலி கோவில், எட்டமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர், கீழ்இல்லம், இடுக்கி மாவட்டத்தில் குமுளி, மூழிக்கல், வண்டிபெரியார் என 12 இடங்களில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆன்லைன் முன்பதிவு செய்ய ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கையில் வைத்திருந்தால் போதும்.

    கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பெருவழி பாதையான எருமேலியில் இருந்து கரிமலை வழியாக செல்லும் கானக பாதையும், புல்மேடு வழி ஆகியவையும் திறக்கப்பட உள்ளது.

    அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பஸ் வசதிக்கான ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில் ரெயில் பாதைக்காகவும், எருமேலியில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபரிமலைக்கு நடைபயணமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்படும்.
    • பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரள வனத்துறை மந்திரி ஏ.கே. சசீந்திரன் பம்பை வந்தார். அங்கு அவரது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மந்திரி ஏ.கே. சசீந்திரன் கூறியதாவது:-

    எருமேலி - பம்பை மற்றும் வண்டிப்பெரியார்- சபரிமலை பாரம்பரிய பெருவழிப்பாதை வழியாக சபரிமலைக்கு நடைபயணமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்படும். இதன் பயன்பாடு இந்த சீசன் முதல் அமல்படுத்தப்படும்.

    பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கம். வனப்பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் பெருவழிப்பாதைகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கெங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பதையும் இந்த செல்போன் செயலி மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு வனப்பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
    • ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.

    இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம்திட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த டின்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேரளாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பான தொழிற்சாலை தொடங்குவது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக 15 லட்சம் டின் அரவணை தயார் நிலையில் இருப்பு வைக்கப்படும். அதேபோல் அப்பம் தயாரிக்கும் பணி வருகிற 11-ந் தேதி தொடங்க இருக்கிறது.

    இதற்காக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. சன்னிதானத்தில் 3 லட்சம் கிலோ சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிலக்கல் உள்பட 13 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் தொடங்கப்படும். இதுதவிர பாலக்காடு, கண்ணூரிலும் முன்பதிவு மையங்கள் சீசனுக்கு முன்னதாக தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    • இம்முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

    இம்முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் .

    இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இம்முறை கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதோடு டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கிடையே சபரிமலை வரும் பக்தர்களுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக இப்போதே ஒவ்வொரு உணவு பொருளின் விலையையும் அவர்கள் அறிவித்து உள்ளனர். அதன்படி முக்கிய உணவு பண்டங்களின் விலை விபரம் வருமாறு:-

    டீ-ரூ.13,

    காப்பி-ரூ.13,

    பருப்பு வடை-ரூ.15,

    உளுந்த வடை-ரூ.15,

    போண்டா-ரூ.15,

    தோசை- ரூ.13,

    இட்லி-ரூ.13,

    சப்பாத்தி-ரூ.14,

    புரோட்டா-ரூ.15,

    இடியாப்பம்-ரூ.14.

    சாதம்-ரூ.75,

    வெஜிடபிள் பிரியாணி-ரூ.75.

    ×