என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் விழா"

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • கோவில் வளாகத்தில் கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகளும் பலியிட்டனர்.

    சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 19-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 26-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டூர், அம்மாபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மேலும் திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற கோவில் வளாகத்தில் உள்ள கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகளும் பலியிட்டனர்.

    இதையொட்டி சென்னிமலை அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கம்பம் பிடுங்கப்பட்டு கோவில் கிணற்றில் விடப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் பொங்கல் வைத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும்.
    • 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பொங்கல் வழிபாடு சிறப்பானதாகும். இந்த ஆண்டின் பொங்கல் வழிபாடு குறித்து கோவிலில் முக்கிய பூசாரி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி கூறியதாவது:-

    நடப்பாண்டின் பொங்கல் வழிபாட்டு திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு ஆரம்பமாகும். அதை தொடர்ந்து நிவேத்தியம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச தீபாராதனை, மற்றும் அபிஷேகம், 6.30 மணிக்கு திருக்கார்த்திகை விளக்கு மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும்.

    டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும். அன்று முதல் 27-ந் தேதி வரை 12 நோன்பு திருவிழா நடைபெறும் இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். டிசம்பர் 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறும். 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோட்டில் சென்னிமலை நகரின் எல்லையில் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை மாகாளிஅம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
    • நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோட்டில் சென்னிமலை நகரின் எல்லையில் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை மாகாளிஅம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்து வந்தது. 27-ந் தேதி இரவு கும்பம்பாலித்தல் நடந்தது.

    இதனையடுத்து நேற்று இரவு மாவிளக்கு பூஜைகள் நடந்தது. இன்று காலை முதல் பொங்கல் விழா நடந்தது. இதில் பொங்கல் வைத்து நகரை காப்பாற்றும் எல்லை மாகாளி அம்மனுக்கு ஆடு, கோழி பலிகொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அம்மாபாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.

    • கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
    • .விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., -எம்.பி.,க்கள், மேயர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ,நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் திருப்பூர் பொங்கல் விழா - தமிழர் திருநாள் 2023 நடக்கிறது. வருகிற 15ந் தேதி துவங்கி 17-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.

    பொங்கல் விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடந்தது. நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு ஆலோசனை வழங்கி விழா ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.

    வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்கு சமத்துவ பொங்கல், வள்ளி கும்மியாட்டம், ஈசன் பெருஞ்சலங்கை ஆட்டம், பெண்கள் தப்பாட்டம், களரி -சிலம்பாட்டம், திருவண்ணாமலை பெரியமேளம், பண்ணிசை கலைஞர்களின் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மறுநாள் (16ந் தேதி) மாலை 5 மணி முதல் கரகம், காவடி, கட்டைக்கால் ஆட்டம், தேவராட்டம், டொல்லு குனிதா கலை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 3-வது நாள் ஜீவநதி நொய்யல் அமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., -எம்.பி.,க்கள், மேயர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    • பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு, தலையில் தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி சென்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி அவினாசி அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு, தலையில் தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி சென்றார். இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 5 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா நடக்கிறது.
    • மாலை 3மணிக்கு அவிநாசி கோவிலில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசிகவுண்டம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 3மணிக்கு அவிநாசி கோவிலில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு 9மணிக்கு கங்கையில் இருந்து அம்மன் அழைத்து வருவல் (கும்பம் எடுத்தல்) நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை 4-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 3மணிக்கு அலங்கார பூஜை , 5 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 10மணிக்கு அம்மன் அழைத்து கங்கையில் விடுதல் (கும்பம் விடுதல்) நடக்கிறது.

    நாளை மறுநாள் 5-ந்தேதி மதியம் 12மணிக்கு மஞ்சள் நீர் பூஜை நடக்கிறது. 6-ந்தேதி மாலை 7மணிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜை நடக்கிறது. 

    • பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
    • சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அம்மன் சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை உட்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    • தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது.
    • தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.

    கோவை:

    கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.

    பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். அவர்களுடன் நடிகை குஷ்புவும் இணைந்து கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    தொடர்ந்து அவர் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். சிறிது தூரம் ரேக்ளா வண்டியிலும் பயணித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரிய பண்டிகையாகும். இது வீட்டிலும், குடும்பத்திலும் சந்தோஷம் கொடுக்க கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகையை இங்கு நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி உள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.

    தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது அவரது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் கருத்து சொல்ல முடியாது.

    பா.ஜ.க.வில் எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகவில்லை. ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பா.ஜ.க.வில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன்.

    தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.

    தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் பொங்கலுக்கு துணிவு பார்ப்பீர்களா? வாரிசு பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் பொங்கலுக்கு எங்கும் போகவில்லை. வீட்டில் தான் இருக்க போறேன். எந்த படத்திற்கு போவார்கள் என்பதை நீங்கள் ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

    ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து விலகிய நிலையில் நேற்று நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் அந்த கட்சியில் இருந்து வெளியேறினார்.

    இந்தநிலையில் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் நடிகை குஷ்பு இன்று கோவையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வேந்தர் விசுவநாதன் பேச்சு
    • வி.ஐ.டி.யில் பொங்கல் விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியம் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொங்கல் விழாவை யொட்டி நையாண்டி மேளம், கரகாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதையடுத்து விஐடி வேளாண் துறை சார்பில் நிலத்தடி நீர் மேலாண்மை காய்கறி சாகுபடி நிலக்கடலை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சார்பில் விவசாயிகளுக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் கையேடுகளை வழங்கினார்.

    மேலும் பண்ணை பணியாளர்களுக்கு பண முடிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்

    இதையடுத்து வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-

    3000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய முன்னோர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பூங்குன்றனார் எழுதிய வரிகளுக்கேற்ப தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர்.

    உலக மக்களோடு தமிழர்களுக்கு நல்ல உறவு உள்ளது. உலகத்தில் 7100 மொழிகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் சீன மொழியும் ஐரோப்பியாவில் கிரேக்க மொழி உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே தற்போது உள்ளன.

    ஆனால் 2,3 ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் தமிழ் மொழி தற்போது இளமையோடு உள்ளது. அந்த மொழிக்கு சொந்தக்காரர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

    தமிழர்கள் வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லவர்களாக இருப்பதற்கு திருக்குறள் ஒரு ஆதாரம். வல்லவர்களாக இருப்பதற்கு கடுமையான உழைப்பு உதாரணம். நல்ல அரசு இருந்தால் வல்லவர்களாக வர முடியும்.

    தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்.

    ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்

    தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

    இந்த விழாவில் தமிழர்கள் மட்டும் இன்றி வெளி மாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மேளம் தாளம் முழங்க விஐடி வேந்தர் விசுவநாதன் துணைவேந்தர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர்.

    அதை தொடர்ந்து பொங்கல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வேட்டி சட்டை அணிந்தும் சேலை அணிந்தும் தங்கள் மாநில பாரம்பரிய உடைகள் அணிந்து வந்து இருந்தனர். நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்ப மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

    • புரோகிதர்கள், முஸ்லீம் மத குருக்கள்,கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
    • பொங்கலோ பொங்கல் என்று கூடியிருந்தவர்கள் முழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.

    துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் இந்து புரோகிதர்கள், முஸ்லீம் மத குருக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின ்போது,மண்பானைகளில் புத்தரிசி பொங்கலிட்டு, பொங்கல் பொங்கியதும், பொங்கலோ பொங்கல் என்று கூடியிருந்தவர்கள் முழங்கினர்.

    தொடர்ந்து, சூரியனுக்கு பொங்கல் படைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும் சர்க்கரைபொங்கல் வழங்கப்பட்டது. விழாவில், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதா, மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் பொங்கல் பண்டிகை சிறப்புகள் குறித்து பேசினர்.

    • பாரம்பரியமாக 7 மண் பானைகள் வைத்து, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இணைந்து பொங்கலிட்டனர்.
    • பொங்கல் பொங்கி வரும் வேளையில் ‘பொங்கலோ பொங்கல்’ என குலவையிட்டு கொண்டாடினர்.

    பொன்னேரி:

    பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டம் E4 காட்டூர் காவல் நிலையம் சார்பில், காட்டூர் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலய வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரியமாக 7 மண் பானைகள் வைத்து, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இணைந்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் 'பொங்கலோ பொங்கல்' என குலவையிட்டு கொண்டாடினர்.

    காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர், செல்வராமன் உதவி ஆய்வாளர்கள், விஜயகுமார், பழனிவேல், குமார், உமாபதி, கோவிந்தராஜன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர்
    • கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கவர்னர் மாளிகை வளாகத்தில் மாட்டு வண்டிகள், கரும்பு, மஞ்சள், மண் பானைகள் ஆகியவற்றைக் கொண்டு பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி மற்றும் முன்னாள் கவர்னர்கள் எம்.எம்.ராஜேந்திரன், எம்.கே.நாராயணன், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றாக பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், காவல்துறை உயர் அதிகாரிகள், தேசிய விருது பெற்றவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. 

    ×