என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராமரிப்பு பணி"

    • மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
    • நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கி துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.

    மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

    பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இன்று மதியம் இயக்கப்படும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏ.சி. பெட்டி கொண்ட மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • கண்ணாடி பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
    • பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

    அன்றைய தினம் முதல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கண்ணாடி பாலத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில் இன்று தொடங்கியது.

    இந்த பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் இன்று கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பராமரிப்பு பணிகள் நடக்கும் 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணாடி பாலத்தின் நுழைவு வாயி லில் கயிறுகள் கட்டி தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பராமரிப்பு பணிகள் நடப்பது தொடர் பாகவும், அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் பாலத்தின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

    • பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
    • ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

    ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலூர்-திருவண்ணாமலை பஸ்கள் மாற்று பாதையில் இயக்கம்
    • வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்

    கண்ணமங்கலம்:

    வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கண்ண மங்கலம் ரெயில்வே கேட் வழியாக செல்கின்றன. இன்று காலை 9 மணிக்கு திடீரென ரெயில்வே கேட்டில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் தொடங்கியது.

    இதனால் வேலூரில் இருந்து திருவண்ணாமலை போளூர் திருக்கோவிலூர் திருச்சி செல்லும் வாகனங்களும் அங்கிருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்களும் இருபுறமும் சாலையில் அணிவகுத்து நின்றன.

    கண்ணமங்கலம் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழ்பள்ளிப்பட்டு கொங்க ராம்பட்டு ரெயில்வே கேட் வழியாக திருப்பி விடப்பட்டன.

    இதன் காரணமாக வாகனங்கள் அந்த சிறிய சாலையில் சென்று வர மிகவும் அவதி அடைந்தன. முதலில் காலை 9 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரம் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டது.

    ஆனால் பணிகள் அதிகமாக இருப்பதால் மாலை 5 மணி வரை கூட நடக்கலாம் அதுவரை வேலூர் திருவண்ணாமலை சாலையில் வாகனங்கள் மற்றும் பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
    • மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். இதன் காரணமாக சின்ன சேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல் எலியத்தூர், பங்காரம், வினை தீர்த்தாபுரம், தச்சூர், தென்கீரனூர், உலககாத்தான், மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர்பாளையம் பெத்தானூர், ஈசந்தை, நாட்டார்மங்கலம், இந்தலி, லட்சியம், காட்டநத்தல், மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    • இரண்டாவது குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
    • வெள்ளிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. அதனால் 2 வது குடிநீர் திட்டத்தில்குடிநீர் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்கு உட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 50, 51 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் நாளை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • வாடிப்பட்டியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

    மதுரை

    வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (17-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு. விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு. தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர். பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை புதூர் துணைமின் நிலையத்தின் அகில இந்திய வானொலி நிலைய பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பாரதிஉலா ரோடு, பொதுப்பணித்துறை குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனி, பாஸ்போர்ட் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, தாமரைத்தொட்டி முதல் அன்பகம் வரை, யூனியன் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (17-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • நகரின் முக்கியமான பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்ததாக வந்த புகாரையடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
    • ஜனவரி மாதம் முதல், மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கில் சில பல்புகள் செயல்படவில்லை. நகரின் முக்கியமான பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு பழுதடைந்ததால் இரவு நேரங்களில் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் உயர் கோபுர மின் விளக்கில் பழுதடைந்த பல்புகளை மாற்றி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகளை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் நவாப், கவுன்சிலர்கள் மத்தீன், பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல்சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    இது குறித்து நகராட்சி தலைவர் கூறுகையில், நகரின் முக்கியமான பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்ததாக வந்த புகாரையடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வரும் ஜனவரி மாதம் முதல், மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார், ரூ.2.50 கோடி ரூபாய் மதிப்பில், 1,990 எல்.இ.டி., பல்புகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வண்டிக்காரத்தெரு மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வண்டிக்காரத்தெரு மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

        எனவே புதுஆற்று கீழ்க்கரை கருப்பாயி அம்பலக்காரத்தெரு, வெட்டுக்காரத்தெரு, பிரகதமணி மகால், அண்ணா மருத்துவமனை, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ( செவ்வாய்க்கிழமை )காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம் ,குணமங்கலம், அங்கனூர், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நாச்சியார் பேட்டை, உளுந்தண்டார் கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், எறையூர் மற்றும் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    பிள்ளையார் குப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் தாமல் வட மாம்பாக்கம், எம் குன்னத்தூர் கிளியூர் நன்னாரம் அத்திப்பாக்கம் களமருதூர் பெரும்பட்டு டி. ஒரத்தூர் நெமிலி காம்பட்டு ஆதனூர் கிளாப்பாளையம் களவனூர் மற்றும் நத்தமூர் பகுதிகள் எறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி குஞ்சரம் கூத்தனூர் நரிப்பாளையம் பெரிய குறுக்கை வடுகபாளையம் எறையூர் வட குரும்பூர் எஸ்.மலையனூர் எல்லை கிராமம் கூவாடு தேன் குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும் இத் தகவலை உளுந்தூர் பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பாண்டி கோவில் பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாண்டிகோவில் பகுதிகளில் நாளை (14.12.22) அன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கருப்பாயூரணி, சீமான் நகர், நூல் பட்டறை தெரு, பாரதிபுரம் 1-9 தெருக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலி ப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, நாதம்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி.

    ராம நாயக்கன்பட்டி, கள்ளர்ம டம், வல்லப கணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம். கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்து வபுரம், தடாக நாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், குட்லாடம்பட்டி, ரிசபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம்; ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்ப ட்டி பங்களா, கொண்டையம்பட்டி, கல்வேலி ப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி.

    சம்பக்குளம், அய்யன கவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி. தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம் நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, அய்யங்கோட்டை, சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலங்குடி, முலக்கு றிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், நகரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்தார்.

    ×