என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் கைது"

    • ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பேருந்தில் குதித்து உள்ளார்.
    • சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவன மினிபஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறுகையில்,

    ஊழியர்கள் உயிரிழப்பிற்கு தீ விபத்து காரணமல்ல... நாசவேலை தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர், ஏற்கனவே சில ஊழியர்களுடன் தகராறு செய்ததாகவும், அவர்களை பழிவாங்க விரும்பியதும் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பள குறைப்பில் அதிருப்தியில் இருந்த அவர் பஸ்சுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

    இறந்த நால்வரில் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ஊழியர்கள் இல்லை என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.

    புனே நகருக்கு அருகிலுள்ள ஹின்ஜாவாடி பகுதியில் வ்யோமா கிராபிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ் 14 ஊழியர்களை பணியிடத்திற்கு ஏற்றிச்சென்றது.

    குற்றம் சாட்டப்பட்டவர் பென்சீனை (அதிகமாக எரியக்கூடிய ரசாயனம்) வாங்கியிருந்தார். டோனர்களைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியையும் அவர் பஸ்சில் வைத்திருந்தார். நேற்று பஸ் ஹின்ஜாவாடி அருகே வந்தபோது, அவர் தீப்பெட்டியை ஏற்றி துணியை தீ வைத்துக் கொளுத்தினார்.

    ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உள்ளார். அவர் வெளியே வருவதற்கு முன்பே தீக்காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவசரகால வெளியேறும் கதவை சரியான நேரத்தில் திறக்க முடியாததால் 4 ஊழியர்கள் இறந்தனர். மேலும், 6 பயணிகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.

    ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சேலம் அருகே உள்ள காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் சிவமணி (வயது 50). இவர் அந்த மாணவியிடம் நல்லவர் போல் பழகி மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு நாளடைவில் அவர், மாணவியிடம் தவறாக பழக தொடங்கினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பற்றி வீட்டில் சொல்லி விடுவதாக கூறி எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் சிவமணி கேட்கவில்லை.

    மாணவியை பின்தொடர்ந்து தன்வலையில் வீழ்த்தினார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனக்கு சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி விட்டு, மாணவியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    • பான்பராக் பொருட்கள் மூட்டை, மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஓட்டுநர் இம்ரான் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய சந்தோஷ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சப்பள்ளியிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர்.

    பின்னர் போலீசார் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் ரூ.3.26 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் பொருட்கள் மூட்டை, மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள வாகனத்துடன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதை பொருட்களை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அளேசீபம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் இம்ரான் (வயது. 24) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பியோடிய சந்தோஷ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

    பெங்களுரிலிருந்து தேன்கனிகோட்டை வழியாக சேலத்திற்கு கொண்டு செல்ல குட்காவை கடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
    • ஞானசுப்பிரமணியன் தொடர்ந்து வற்புறுத்தியதால் பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் டவுனில் உள்ள ஒரு தட்டச்சு பயிற்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் தனது தங்கைக்கு ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இருந்து வாலிபர் ஒருவர் காதலிக்குமாறு வற்புறுத்துவதாகவும், அவரை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து மர்மநபரை தேடியதில், அந்த நபர் பாளை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஞானசுப்பிரமணியன்(வயது 28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் தங்கை டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    ஆனாலும் அவரை போன் செய்து தொந்தரவு செய்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல்கள் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது.
    • போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் சமீபகாலமாக லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா, ஹான்ஸ் மது பாட்டில் உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோதமான செயல்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கையில் முற்றிலுமாக குறைந்து வருகிறது.இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு வேன் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை செஞ்சியில் இருந்து சேப்பட்டு நீலாம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. இதைப் பார்த்த போலீசார் உடனே வேனை மறித்து அதில் சோதனை செய்தனர். இதில் வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கீழ்ரவளந்தவாடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32) டிரைவர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து விழுப்புரம் குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தியை ஒப்படைத்தனர்.இது குறித்து குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த ரேஷன் அரிசி யார் மூலம் எங்கு கடத்த ப்பட்டுள்ளது மேலும் இந்தக் கடத்தலுக்கு தொடர்பா னவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மூன்று யூனிட் மண் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சீனிவாசன் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை போலீசார் ராமியணப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசின் அனுமதியின்றி மூன்று யூனிட் மண் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியை ஓட்டிவந்த சீனிவாசன் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் சின்னகாளியூர் வேதபாறை பள்ளம் அருகே ரேசன் அரிசி கடத்துவதாக பங்க ளாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் வேனில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரிசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் மேட்டு நாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்க டேஷ் (34) என்பதும், 40 கிலோ எடையுள்ள 22 மூட்டைகள் என சுமார் 1 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் அவர் ஓட்டி மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    • இரட்டை கொலை வழக்கு சம்பவத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட் டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 35). சரக்கு ஆட்டோ டிரைவர். தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35), லாரி எலக்ட்ரிஷியன். நண் பர்களான இவர்கள் இருவ ரும்.நேற்று முன்தினம் மாலை புத்தாண்டை முன்னிட்டு வி.சி.மோட்டூரில் உள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் மது அருந்தியதாக கூறப்படு கிறது.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை வேலுவை கத்தியால் குத்தி யுள்ளார். இதனை தடுக்க சென்ற சரவணனையும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்தி குத்தில் காயம டைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    அந்த சம்பவம் குறித்து துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் காண் டீபன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அங்கிருந்த கண்கா ணிப்பு கேமராவில் பதிவான ஒரு நபரை பிடித்து விசா ரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தீபா சத்யன் உத்தர வின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் வி.சி. மோட்டூரில் லாரி பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. இங்கு புத்தாண்டு விடுமுறை யையொட்டிலாரியை பழுது பார்ப்பதற்காக திருத்தணியை அடுத்த டி.புதூர் பெரிய தெருவை சேர்ந்த நிர்மல்கு மார் (25) என்றலாரிடிரைவர் தனது லாரியை பழுது பார்க்க கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

    அப்போது நிர்மல்குமாருக் கும், மெக்கானிக் சரவணனுக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிசரவணன் மற்றும் குழந் தைவேலு ஆகிய இருவரும் நிர்மல்குமார் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்த தாக கூறப்படுகிறது. மேலும் நிர்மல் குமாரை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. தொடர்ந்து குழந்தைவேலு யாருக்கோ போன் செய்துள்ளார்.

    இதனால் நிர்மல்குமார் அச்சமடைந்துள்ளார். திடீரென அவர் லாரியில் வைத்தி ருந்த கத்தியை எடுத்து குழந்தை வேலு மற்றும் சரவணன் ஆகியோரை சாலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக குத்தி உள்ளார்.

    நிர்மல்குமாருக்கு ஏற்கனவே கொலை முயற்சி கொள்ளை, அடிதடி, உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில் தொடர்புடையதும், அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள தாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிர் மல்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.
    • கலெக்டரின் மணல் லாரி,டிரைவர் கைது ,டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதியில் பல்வேறு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வந்தார். அப்போது அவர் கூட்டேரிப்பட்டு அருகே வந்தபோது எதிரில் மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.

    அப்போது சுதாரித்துக் கொண்ட மாவட்ட கலெக்டரின் டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் லாரியை கைப்பற்றி போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியை ஓட்டி வந்த ரகோத்தமனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் திருமாள் தலைமையில் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் 16 டன் ரேஷன் அரிசி 280 மூட்டைகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் மேற்கு தெருவை சேர்ந்த ரகோத்தமன் (வயது 27) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர், பிப்.9-ககள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா நன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). விவசாயி. இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காணமல் போன 9-ம் வகுப்பு மாணவியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இதில் அதே ஊரில் செங்கல் சூளையில் டிரைவராக பணியாற்றிய நடையன் (21) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் நடையனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் செங்கல்பட்டு பகுதியில் பணி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவருடன் அந்த மாணவியை தங்க வைத்திருப்பதும் தெரியவந்தது.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் செங்கல்பட்டு அருகேயிருந்த செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த டிரைவர் நடையனை போக்சோ சட்டடத்தின் கீழ்கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 9-ம் வகுப்பு மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

    • ஆட்டோ டிரைவரின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி, இதுபற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் அடையாளம் தெரிந்தது.

    சென்னை:

    சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, நீலாங்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் தனியாக சென்ற சிறுமியை நிறுத்தி பேச்சு கொடுத்தார். வழியில் இறக்கி விடுகிறேன் என்று கூறி ஏமாற்றி தனது ஆட்டோவில் சிறுமியை ஏற்றியுள்ளார்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்ற அவர் ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கத்தியை காட்டி மிரட்டினார். சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த அவர் ஆட்டோவில் வைத்தே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்தார். பின்னர் ஆட்டோ டிரைவரின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதுபற்றி அடையாறு அனைத்து மகளிர் போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் அடையாளம் தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் கைது செய்தனர்.

    ரோட்டில் தனியாக சென்ற சிறுமியை மடக்கி ஆட்டோ வில் வைத்து மிகவும் துணிச்சலாக செக்ஸ் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து நீலாங்கரை பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ×