என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தற்கொலை"

    • அங்கம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.
    • சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு ஆற்றில் இருந்து கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

    திருச்சி,

    திண்டுக்கல் குஜிலியம்பாறை இலந்தை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 33). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.

    பின்னர் முக்கொம்பு அணைப்பகுதியில் காவிரி ஆற்றில் மகனுடன் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது அச்சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் அங்கேயே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு படை வீரர்கள்,ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் சம்பவத்தன்று சென்று படகில் அங்கம்மாளை தேடினர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இன்று 5-வது நாளாக திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தீயணைப்பு படை வீரர்கள் கூறும் போது, தற்கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணின் உடலை அவரது மகன் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பொதுவாக ஒருவர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்தால் அந்த பிணம் 24 மணி நேரத்தில் மிதந்து விடும். ஆனால் 5 நாட்கள் ஆகியும் எந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகவே அவரது உடலை மணல் மூடி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முசிறியில் ஆற்றில் தவறி விழுந்த மூன்று பேரின் உடல்களை மாதக்கணக்கில் தேடியும் கண்டறிய முடியவில்லை. பின்னர் 3 வருடம் கழித்து மணல் அள்ளியபோது மூன்று பேரின் மண்டை ஓடுகள் கிடைக்கப் பட்டன. எனவே அதிகாரிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (38).

    இவர்களது மகன்கள் ஹரி கிருஷ்ணன்(14), குபேந்திர கிருஷ்ணன் (12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர். ஹரிகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், குபேந்திர கிருஷ்ணன் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யனார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அய்யனார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்.

    வீட்டில் தனலட்சுமி தனது 2 மகன்களுடன் இருந்துள்ளார். கணவருடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

    அதன்படி தனலட்சுமி தனது 2 மகன்களுக்கும் விஷத்தை குடிக்க கொடுத்து விட்டு, தானும் குடித்தார். இதில் அவர்கள் 3 பேரும் இறந்து விட்டனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரமாக தட்டியும் தனலட்சுமி திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அய்யனார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனலட்சுமி மற்றும் 2 மகன்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    மனைவி மற்றும் மகன்கள் பிணமாக கிடந்ததை கண்டு அய்யனார் அதிர்ச்சி அடைந்தார். மனைவி மற்றும் மகன்கள் இறந்துவிட்டதால் தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர், மீதம் இருந்த விஷத்தை அவர் குடித்து விட்டார்.

    நள்ளிரவில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அய்யனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு அய்யனார் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததையும், தனலட்சுமி மற்றும் அவரது மகன்கள் பிணமாக கிடந்ததையும் பார்த்த அவர்கள், அது குறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரமும் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர்கள் உயிருக்கு போராடிய அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி மற்றும் அவரது 2 மகன்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக அய்யனாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரிடம் போலீசாரால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. அபாய கட்டத்தை தாண்டியதும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் கண்டித்ததால் விபரீத முடிவை எடுத்தார்.
    • கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்

    கோவை,

    கோவை காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

    கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்.இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பெண் மது குடித்தார். அப்போது அவரது கணவர் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவி மது குடிப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து தகராறு செய்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.

    இதன்காரணமாக மன வேதனை அடைந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கணவர் கதவை தட்டினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.

    வீட்டிற்குள் தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரகுமான், கோகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
    • அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் ரகுமான் (எ)சக்தி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .

    இவர் கோகிலா (வயது 22) என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சாய் சஷ்டிகா என்ற ஒரு பெண் குழந்தையும், சாய் சர்வேஸ் என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கோகிலா தூக்கிட்டு உள்ளார்.

    அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார். உடனடியாக பாலமுருகன் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு மருத்துவர்கள் பரி சோதனை செய்த போது கோகிலா ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கோகிலாவுக்கு திருமண மாகி 2 1/2 ஆண்டு களே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை மேற்கொண்டு உள்ளார்

    • ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்துள்ள ஏமகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவரது தங்கை கல்யாணி யுடன் தங்கி வசித்து வந்தார். திருமணம் ஆகாமல் உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு வருகிறோம் என ராணி வேதனை அடைந்து வந்தார்.

    இந்நிலையில் கல்யாணி வேலைக்கு சென்று விட்டார். ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    கல்யாணியின் மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு மூடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அவர் மேலே ஏறி பார்த்தார். அப்போது ராணி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இத குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி கொடு முடி அரசு மருத்துவமனைக்கு பிரேதசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (49). கூலி தொழிலாளி. இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. இதனிடையே நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை பாதிப்பால் அவதி அடைந்து வருகிறார். அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கினார். இதை பார்த்த அவரது தந்தை கண்ணையன், மணியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணையன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி சண்டையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்து பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி லட்சுமி ( வயது 46 ). இருவரும் கூலி தொழிலாளர்கள் . இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது

    இதில் மனமுடைந்த லட்சுமி நிலத்தில் இருந்த ஒட்டன் தழையை ( விஷம் ) அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார் . உடனடியாக அவரை , அவரது கணவர் சுந்தரேசன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார் . ஆனால் சிகிச்சை பலன் இன்றி லட்சுமி நேற்று இறந்து விட்டார் .

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர் .

    • போலீசார் தீவிர விசாரணை
    • இரவில் பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக பொதுமக்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் பாலாற்றில் தற்போது ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் வரக்கூடிய பழைய பாலாற்றின் பாலத்தின் மேலிருந்து நேற்று இரவு பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக விருதம்ட்டு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனடியாக விரைந்து சென்று பாலத்தின் மேலிருந்து பார்வையிட்டனர். மேலும் ஆற்றின் தண்ணீரில் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இருள் சூழ்ந்து காணப்பட்டது. அங்கு எதுவும் தெரியவில்லை.

    ஆற்றில் குதித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன அல்லது வேண்டுமென்று யாராவது போலீசாரை அலைக்கழித்தார்களா என்பது தெரியவில்லை.

    இன்று காலையில் மீண்டும் போலீசார் பாலாற்று பகுதியில் பார்வையிட்டனர். மேலும் விருதம்பட்டு பகுதியிலிருந்து பெண் யாராவது காணாமல் போனார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை எந்த ஒரு பெண்ணும் காணாமல் போனதாக தகவல் வரவில்லை. ஆற்றில் பெண் உண்மையிலேயே குதித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 31).இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரின் குடிப்பழக்கம் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19.9.2022 அன்று ஆனந்தன் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன்- மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    இதில் மன வேதனை அடைந்த நந்தினி வீட்டில் இருந்த திரவத்தை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நந்தினியின் தாயார் விஜயா, தனது மகள் சாவிற்கு மருமகன் ஆனந்தன் கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்று புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
    • தந்தை போலீசில் புகார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகள் ஆனந்தி. இவரும், சென்னை மந்த வெளி பகுதியை சேர்ந்த ஆதி கேசவன் மகன் பூமிநாதனும் 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    ஆனந்திக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. பூமிநாதன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். 2 மாதத்திற்கு முன்பு கலவைப்புத்தூர் கிராமத் திற்கு வந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.

    இந்த நிலை யில் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத் தில் ஆனந்தி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆனந்தியின் தந்தை ஜெகநாதன் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கலவை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி, ஆனந்தியின் உடலை வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயலட்சுமி தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று விரக்தியாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
    • ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்துள்ள மதிகோன்பாளையம் புதிய திருப்பத்தூர் சாலைப்பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது40).இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரகாசும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஜெயலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று தனது மகன்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஜெயலட்சுமி தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று விரக்தியாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மகன்கள் தருமபுரியில் வசிக்கும் தங்களது உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து தங்களது தாயை பார்த்துவிட்டு வரும்படி தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ஜெயலட்சுமியின் உறவினர் மதிகோன்பாளையம் சென்று பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கம் உள்ளவர்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தருமபுரி நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரியா டாமா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
    • அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பிரியா டாமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    கோவை,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரியா டாமா (வயது 49). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து பிரியா டாமா தனது கணவரை பிரிந்து கோவைக்கு வந்தார். பின்னர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த 1 மாதங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பிரியா டாமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. பின்னர் பிரியா டாமா அந்த வாலிபரை தனது கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    பின்னர் தனது தம்பியிடம் பேசிய பிரியா டாமா தான் வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இனிமேல் முதல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி உள்ளார். திருமணம் செய்து கொண்ட தகவலை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.இந்தநிலையில் பிரியா டாமா தான் 2-வது திருமணம் செய்ததை அவரது தம்பி தனது குடும்பத்தினரிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரியா டாமா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது 2-வது கணவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பிரியா டாமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×