என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல்"

    • 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது29). இவருக்கு மதுஸ்ரீ என்ற 11 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை அழைத்து கொண்டு வீரபாண்டி கழுகுமலை அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார்.

    சம்பவத்தன்று குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருக்கவே வீரபாண்டி குழந்தையை கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர்.
    • நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர். கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல்

    மாவட்டத்தில் பண்ணையா ளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கி யுள்ளனர்.

    இதன்படி நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது. பண்ணைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் கொண்ட 45 அதிவிரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை களை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என இக்குழு கண்காணிப்பில் ஈடுபட, நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் பாஸ்க ரன் உத்தரவிட்டு உள்ளார்.

    இதனிடையே பல்ல டத்தில் நேற்று முன்தினம் ரூ.119-ஆக இருந்த கறிக்கோழி விலை, 13 ரூபாய் குறைந்து நேற்று ரூ.106- ஆக இருந்தது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ள நிலையில் மேலும் இந்த விலை குறையும் என கூறப்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பீதிஅடைந்துள்ளனர் .

    முட்டை பண்ணை கொள்முதல்விலை 5 ரூபாயாக நீடிக்கிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்ட நிலையிலும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் வழக்கம் போல அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    • மழைக்காலங்களில் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுக்குமே காய்ச்சல் வந்துவிடுகிறது.
    • சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம்.

    திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் வருகின்றன. இவை இயல்பானதுதான் என்பதால் பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னதாக லேசான மூக்கொழுகுதலுடன் நார்மலாக இருக்கிற குழந்தைகளுக்கு அன்றைக்கு சாயங்காலமோ, இரவோ காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற சாதாரணக் காய்ச்சல்.

    இப்படியில்லாமல் சளிப்பிடித்து இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து காய்ச்சல் வருகிறது என்றால், மழைக்கால தொற்றுநோய்கள் காரணமாக இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இரண்டு, மூன்று நாள் இருந்துவிட்டு போய்விடும். அம்மாக்கள் 'அப்பாடா' என்று சற்று ரிலாக்ஸ் ஆகிற நேரத்தில் மறுபடியும் மெல்ல தலைகாட்ட ஆரம்பிக்கும். இதுவும் மழைக்கால தொற்றுநோய்களால் வருகிற காய்ச்சல்தான்.

    இந்த மாதங்களில், சில குழந்தைகளுக்குக் காய்ச்சலுடன் தொண்டையில் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படும். இதனால், தொண்டையெல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு 10 அல்லது 15 நாள் மாத்திரை தர வேண்டி வரும். நான் மேலே சொல்லியிருக்கிற நான்கு காய்ச்சல்களுக்குமே குழந்தைகளின் வயது மற்றும் எடையைப் பொறுத்து மருந்து கொடுத்தாலே சரியாகிவிடும்.

    வராமல் தடுக்க வழிகள்

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சல், ஒரு குழந்தையிடம் இருந்துதான் இன்னொரு குழந்தைக்குப் பரவும். அதனால், உங்கள் பிள்ளைக்கு லேசான காய்ச்சல் இருந்தால்கூட பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருப்பதுதான் நல்லது.

    இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை வாங்கித் தராதீர்கள். ஏனென்றால், சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம். கேன் வாட்டராக இருந்தாலும் கொதிக்க வைத்து ஆறிய நீரை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

    இந்த சீஸனில் மழையும் வெயிலும் மாறி மாறி இருக்கும் என்பதால், உங்கள் வீட்டைச் சுற்றி சுத்தமான மழை நீர் எங்கும் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் கொசுக்களின் பிறப்பிடம். டெங்கு கொசுக்கள் இப்படிப்பட்ட சுத்தமான நீரில்தான் முட்டையிடும் என்பதால், கவனம்.

    வீட்டுக்கு முன்னால் தேங்கியிருக்கிற மழை நீரில் வெறுங்காலுடன் குதிப்பதற்கு பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்தான். ஆனால், அப்படிக் குதித்தால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, எலிக் காய்ச்சல் என மழைக்கால தொற்றுநோய்கள் அத்தனையும் வந்துவிடலாம். 10 வயதுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் என்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவையான அளவு உடலில் இருக்கும். அதுவரைக்கும் மழை நீரில் விளையாடுவதைத் தள்ளி வைப்பதுதான் நல்லது.

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சலைப் பொறுத்தவரைக்கும், அதிகமான வயிற்று வலி, அடிக்கடி வாந்தியெடுத்தல், கை, கால்கள் சில்லிட்டுப்போவது போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் இருந்தால், குடிப்பதற்கு நிறைய நீராகாரங்கள் கொடுங்கள். காய்ச்சல் இருந்தாலும் சின்னதாகவாவது விளையாடிக்கொண்டிருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அதற்கு மாறாக, சோர்ந்துபோய் படுத்துக்கொண்டே இருந்தாலும், தூங்கிக்கொண்டே இருந்தாலும் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்.

    • இந்த காய்ச்சல் ஆறு நாட்கள் வரை இருக்கும்.
    • மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    பருவமழைத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் 'புளூ காய்ச்சல்' அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ரங்கராஜன் கொடுத்த ஆலோசனைகள் இதோ…

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை புளூ காய்ச்சல் வருவது வழக்கமானதுதான். இந்த காய்ச்சல் ஆறு நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதில் இருந்து மீளலாம். குழந்தைப் பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே குழந்தைகளுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    புளூ காய்ச்சலின் பாதிப்பு எப்படி இருக்கும்? புளூ காய்ச்சல் நுரையீரலைப் பாதிக்கக்கூடியது. இரண்டு முதல் ஆறு நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண் டைக் கரகரப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு 'நிமோனியா' எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால், காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். புளூ காய்ச்சலுடன் 'எச்1என்1' எனும் ஒரு வகை இன்புளூயன்சா வைரஸ் கிருமித் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். இதற்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    காய்ச்சல் அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

    காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது முதலில் ஈரத்துணியால் உடலைத் துடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது உடல் வெப்பம் குறையத் தொடங்கும். பிறகு ஒரே ஒரு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ரத்தப் பரிசோதனை, அவசர சிகிச்சை முறைகள் 24 மணி நேரமும் வழங்கப்படுகின்றன. எனவே தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். காய்ச்சல் இருந்தால் உடலில் வேகமாக நீர் இழப்பு ஏற்படும். அந்த நேரத்தில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'ஓ.ஆர்.எஸ் உப்பு சர்க்கரைக் கரைசல்' அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அதுதவிரப் பழச்சாறு வகைகள் அரசு மருத்துவமனையில் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிகள் என்ன? கை கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் பருகலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிய வேண்டும். காய்ச்சல் இருந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    • ஃப்ளு வைரஸ் சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும்.
    • இந்த வகை காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

    * குழந்தைகளை அதிகமாக பாதிக்கக்கூடிய ஃப்ளு வைரஸ் காய்ச்சல் சென்னையில் பரவி வருவதால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    * பல பள்ளிகளில் குழந்தைகளின் 'ஆப்சென்ட்' எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுவதாகவும், பள்ளிக்கு வந்திருக்கும் குழந்தைகளில் கூட பலர் தொடர்ந்து இருமிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    * அதே சமயம் இந்தக் காய்ச்சலால் பெரியவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருக்கும் என்பதால், அவர்களை இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் தொற்றுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    அறிகுறிகள்:

    * ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை ஃப்ளு வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாகும். இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.

    என்றாலும், ப்ளு வைரஸ் பாதிக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    * ஃப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அது சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும்.

    * இதனால் இருமல் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி, வயிற்று வலி போன்றவையும் ஏற்படக் கூடும்.

    * ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் 2 முதல் 4 நாட்களில் குணமாகிவிடும். சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    எப்படி பரவுகிறது?

    * ஃப்ளு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவிவிடும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளிப்படும் துளிகள் மூலம் மற்றவர்களைப் பாதிக்கும்.

    இந்த வகை காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

    * எனவே காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பக்கத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றால் ஃப்ளு வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    பரவல் ஏன்?

    வைரஸ் காய்ச்சல்களில் ஃப்ளு வகை வைரஸ் காய்ச்சல் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகளவு பரவுவது உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாலும், முகக் கவசம் அணிந்ததாலும் இத்தகைய வைரஸ்கள் தாக்கம் இல்லாமல் இருந்தது.

    ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் விலகி உள்ள நிலையில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொது மக்கள் கைவிட்டு இருப்பதால் மீண்டும் வைரஸ் காய்ச்சல்கள் தலையெடுக்கத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் தற்போது சென்னையில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில், சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம்.
    • இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன.

    மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுள் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிய இடம் உண்டு.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்படலாம் என்றாலும், பச்சிளம் குழந்தைகளை குறிவைத்து தாக்குவது நிமோனியாவின் தனித்தன்மை.

    பலதரப்பட்ட கிருமிகள் காற்றில் கலந்துவந்து நுரையீரலை தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியை உமிழும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சரவர தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்பு புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்கு பசி இருக்காது, சாப்பிடாது.

    கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால் குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாக காணப்படும்.

    இந்த நோயை கவனிக்க தவறினால், இந்த கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளைஉறை போன்றவற்றை பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.

    உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன. நிமோனியா சில நேரம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்க 50 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். புறநோயாளிகளுக்கான தனியாக காய்ச்சல் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

    பொது மருத்துவத்துறை மற்றும் நுரையீரல் மருத்துவத்துறையுடன் இணைந்து இதனை செயல்படுத்துவது அவசியமாகும்.

    நோயாளிகளை உடல் நிலை அடிப்படையில் தனித்தனியாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொது மருத்துவம் மற்றும் சுவாச நோய் துறை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் உதவி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

    தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை மேற் கொண்டு அவர்களது உடல் நிலை தொடர்பான தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இவர்களை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி பொது மருத்துவர்கள் சுவாச நோய் துறை மருத்துவர்களே முடிவெடுக்க வேண்டும்.

    தேவைக்கேற்ப ஆக்சிஜனை இருப்பு வைத்திருப்பது அவசியமானது. அத்துடன் படுக்கைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பரிசோதனை கருவிகள் போதிய அளவில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போதிய அளவுக்கு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மருந்து-மாத்திரைகள், சிகிச்சைகளுக்கு தேவையான உரிய காரணங்கள் போன்றவை தட்டுபாடின்றி ஆஸ்பத்திரிகளில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும்.
    • காய்ச்சல், சளி என 5 நாளில் இவை சரியானவுடன் நெத்திலி மீன் குழம்பு, ஆட்டுகால் சூப், ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்.

    நன்றாக இருக்கும் ஒருவருக்கு தலைவலி, கால்வலி என ஒருமணி நேரத்தில் காய்ச்சல் வந்துவிடுகிறது.

    காய்ச்சல் வந்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் என ஏதாவது ஒருநாளில் மட்டும் உண்ணாநோன்பு மிக முக்கியம்... காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தண்ணீர் என எதுவும் சாப்பிட கூடாது. தாகம் அதிகமானால் சிறிது தண்ணீர் குடிக்கலாம். ஒய்வுடன் பட்டினியை கடைபிடித்தால் காய்ச்சல் தீவிர நிலைக்கு போகாமல் சமாளிக்கலாம்.

    12 மணி நேர பட்டினிக்கு பிறகு சூடான சோறு அல்லது புளிக்காத மாவு இட்லி தொட்டுகொள்வதற்கு புதினா கொத்தமல்லி கலந்த சட்டினி மட்டுமே.

    முதல் இரண்டு நாளில் பட்டினி வைத்தியம் பலன் தரும். மூன்றாவது நாளில் பட்டினி வைத்தியம் பலன் தராது..

    பப்பாளி இலை சாறு 20 எம்.எல். தேன் கலந்து காலை இரவு என மூன்று நாட்கள் சாப்பிடலாம்...

    முதல் மூன்று நாட்கள் ஓய்வும் (செல்போன், டீவி கூடாது), பத்திய உணவும் அவசியம்... (ரசம் சோறு கஞ்சி இட்லி)

    மூன்று நாட்கள் கழித்து காய்ச்சல் சளியாக மாறிவிடும். சளி இருக்கும் சமயத்தில் கற்பூரவள்ளி இலை 4, துளசி இலை 10, வெற்றிலை 1 இது மூன்றையும் கசக்கி போட்டு ஒரு டம்ளர் நீரை அரை டம்ளராக சுண்ட காய்ச்சி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிடவும்...

    இந்த மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும்.

    காய்ச்சல், சளி என 5 நாளில் இவை சரியானவுடன் நெத்திலி மீன் குழம்பு, ஆட்டுகால் சூப், ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்.

    -ரியாஸ்

    • காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.
    • நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குழந்தைகள், பெண்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் சாம்பவர் வடகரை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு கண்டறியப்படுவதால் டெங்கு காய்ச்சலாக இருக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கொசுக்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சியில் இருந்து சாக்கடைகளை சுத்தம் செய்தும் குப்பைகளை அகற்றும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூர் அருகே காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது
    • டெங்கு, மலேரியா, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த மாத்தூர், காமரசவல்லி ஆகிய கிராமங்களில் குருவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். காமரசவல்லி கிராமத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவராமன், விவின் ஆகியோர் கொண்ட குழுவினர், வீடு வீடாகச் சென்று கொசுப்புழு மற்றும் உண்ணிகள் அழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் டெங்கு, மலேரியா, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும், கொசு ஒழிப்பு மற்றும் கொசுக்களால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இதே போல் மாத்தூர் கிராமத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.


    • உதவி தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
    • போதுமான அளவு குளோரின் மருந்து கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலக துணை இயக்குனரிடம் கலந்து ஆலோசனை செய்து மக்களைத்தேடி மருத்துவம் வாகனங்கள் மூலம் கிருஷ்ணாபுரம் மற்றும் மேலக கடையநல்லூர் பகுதிகளில் தனித்தனியே மருத்துவ குழுக்கள் அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படு பவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ பணியாளர்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பள்ளிகளிலேயே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    பொறியியல் பிரிவு மூலமாக பொதுமக்களுக்கு குடிநீரில் போதுமான அளவு குளோரின் மருந்து கலந்திட உத்தரவிடப்பட்டு உறுதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் மற்றும் டி.பி.சி. பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு நகராட்சி மேலக்கடையநல்லூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாகவும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் நகர் எங்கும் முதிர் கொசுக்களை ஒழிக்க புகை மருந்தும், வாறுகால்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தும், அனைத்து வார்டுகளிலும் தங்கு தடையின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் பொதுமக்கள் காய்ச்சல் கண்ட விவரத்தினை நகராட்சி பொது சுகாதார பிரிவிலும், கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலக்கடைய நல்லூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தெரிவித்து மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன.
    • பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிய வரும் என்பதால் மக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல் எளிதில் வகைப்படுத்தி அறிந்து கொள்ள முடியும்.

    சென்னை:

    பருவ மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்தாலும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதன் மூலம் 5 முதல் 7 நாட்களில் காய்ச்சல் குணமடைந்தாலும் சளி, இருமல் ஆகியவை 2 வாரங்களுக்கு மேல் தொடருகின்றன. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதில் தொற்றிக் கொள்வதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்த காய்ச்சல் எந்த வகை வைரசால் பரவி வருகிறது என்பதை கண்டறியும் ஆய்வை பொது சுகாதாரத் துறை செய்து வருகிறது.

    இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    இன்ப்ளுயன்சா வைரஸ், ஆர்.எஸ்.வி. எனப்படும் நுரையீரல் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் சென்னையில் அதிகமாக பரவி வருவதாக தெரிகிறது. காய்ச்சல், உடல் வலியுடன் இருமல் பாதிப்பும் இருப்பதால் சுவாசப் பாதையின் மேற் பகுதியில் ஏற்படும் தொற்றாகவே இதை கருத முடிகிறது.

    இந்த வகை பாதிப்புகள் ஒரு வாரத்தில் குணம் அடைகின்றன. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    இந்த காய்ச்சலை ஏற்படுத்தும் புதிய வகை வைரஸ் எந்த வகையானது என்பதை கண்டறிய பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்ய உள்ளோம். பொது சுகாதாரத் துறை ஆய்வகத்திலேயே அதற்கான வசதிகள் உள்ளன. பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிய வரும் என்பதால் மக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல் எளிதில் வகைப்படுத்தி அறிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×