என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்கள் ரத்து"
- இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
- ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரெயில் நிலையங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் பழைய இரும்பு பாலம் உள்ள நிலையில் புதிதாக 2 பாலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பழைய பாலத்தின் தூண்களை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.

பழையாற்றை ஒட்டி உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்ல வசதியாக புதிய பாலத்தில் தண்டவாளத்தின் கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பழைய தண்ட வாளத்தின் கீழ் பகுதியிலும் புதிதாக குழாய் அமைக்க ரெயில்வே துறை நேற்று நடவடிக்கை எடுத்தது. குழாய் அமைக்க வேண்டிய பகுதியில் தண்டவாளத்தை முற்றிலும் அகற்றிவிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பணியை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை அப்புறப் படுத்திவிட்டு அந்த பகுதியில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணியின் போது இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கோவையைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கராஜா (39), மதுரையை சேர்ந்த பால கிருஷ்ணன் (42) ஆகியோர் சிக்கி கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் சிக்கிய 3 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு 108 ஆம்பு லன்சு மூலமாக சிகிச்சைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மண்சரிவு ஏற்பட்டதை யடுத்து அந்த பகுதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு உடனடியாக ரெயில் போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தோண்டப்பட்ட பள்ளம், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டது. இந்த பணி முடிய காலை 6 மணி வரை ஆகிவிட்டது. இதன் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.
சென்னை, பெங்களூரூ, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாங்குநேரி, மேலப்பாளையம், நெல்லை, கோவில்பட்டி நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.
மண் சரிவு சரி செய்யப்பட்ட பின்பு தான் இந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. மேலும் பணி நடத்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டன. அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி காலை 4.40 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு வந்தடைந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.05 மணிக்கு தான் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 8.45 மணிக்கும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.15 மணிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரெயில் இன்று காலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையில் இணைப்பு ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
- 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
- வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர்:
விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ெரயில்கள் இயங்காது என ெரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தனர். இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து ெரயில் செல்லாது என அதிகாரிகள் அறிவித்து ெரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக இறங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது இதனை கேட்ட ெரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ெரயில்வே துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் வரை ெரயில்கள் இயங்காது என தெரிவித்தனர்.
அப்போது பொதுமக்கள் கடும் கோபம் அடைந்து எதற்காக விழுப்புரம் வரை ெரயில் டிக்கெட் வழங்கீனர்கள்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக ெரயில்வே துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடலூர் முதுநகரில் இருந்து அவர் அவர்கள் எடுத்த ெரயில் கட்டணத்தை மீதி தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய ரயில் கட்டணத்தை வழங்கினர். பின்னர் பொதுமக்கள் அவசர அவசரமாக கொட்டும் மழையில் நனைந்தபடி பஸ்சில் செல்வதற்கு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.
- கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் - வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் திருப்பூர் வழியாக சென்னை - கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023 ஜனவரி 3 மற்றும், 4ந் தேதி 2நாட்களும், சென்னையில் காலை 6:10 மணிக்கு புறப்பட்டு மதியம், 2:05 மணிக்கு கோவை வரும் கோவை எக்ஸ்பிரஸ், மதியம் 3:15 மணிக்கு கோவையில் புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.ஜனவரி 4ந் தேதி காலை 7:10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மதியம் 2:15 மணிக்கு கோவை வரும் சதாப்தி சூப்பர்பாஸ்ட் (12243) இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் புறநகர் ரெயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
- 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெறும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி:
சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் புறநகர் ரெயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டிக்கும் பொன்னேரிக்கும் இடையே ரெயில்வே பராமரிப்பு பணி காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெறும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
- குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தங்களது மொழியான குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பழங்குடியினர் அங்கீகாரம், சர்னா மதத்தை அங்கீகரித்தல் மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குர்மலி மொழியைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
தென்கிழக்கு ரெயில்வேயின் முக்கியமான வழித்தடங்களான காரக்பூர்-டாடாநகர் மற்றும் ஆத்ரா-சண்டில் வழித்தடங்களில் பல்வேறு குர்மி அமைப்பினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 64 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தென்கிழக்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் காரணமாக ஏப்ரல் 5ம் தேதி முதல் இதுவரை 225 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தின் தக்க்ஷின் தினாஜ்பூர், புருலியா, ஜார்கிராம் மற்றும் பாஸ்சிம் மேதினிபூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குர்மி அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குர்மி சமூகத்தினர் தற்போது ஓபிசி என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- பயணிகள் கடும் அவதி
- புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது
அரக்கோணம்:
சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்துக்கும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்ப ரத்துக்கும் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்க ணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்களின் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, சில நாட்களுக்கு முன்பு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள புறநகர் மின்சார ரெயில் சேவையில் 54 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கும், பின்னர் அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை செல்லும் ரெயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளா கியுள்ளனர்.
- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
- இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
அரக்கோணம்:
சென்னை செண்ட்ரல் அரக்கோணம் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் இன்று நடந்தது.
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்கள்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்த போது டிக்கெட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவித்தனர். முன் அறிவிப்பு இன்றி திடீரென அறிவித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுபோன்று தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
- சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
- 6 ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஜோலார்பேட்டை- கே. எஸ்.ஆர். பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு வருகிற 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (16203), திருப்பதி- சென்னை சென்ட்ரலுக்கு 12, 13,14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16204), சென்னை சென்ட்ரல்- மைசூருக்கு 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021), மைசூரு- சென்னை சென்ட்ரலுக்கு 13, 14, 15, 21, 22, 24 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) உள்பட 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு 12-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (12657) 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர 6 ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடக்கு ரெயில்வேயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
- ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும்.
மதுரை
ரெயில்களை பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரெயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரெயில் நிலைய பிரிவில் ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில் கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியா குமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை-டெல்லி நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் (12651), டிசம்பர் 6,
ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திரு நெல்வேலி-ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652), டிசம்பர் 11, ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ரெயில் எண்.12688 சண்டிகர்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
- மதுரை மார்க்கத்தில் ரெயில் எண்.16788 ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வடக்கு ரெயில்வேயில் ஆக்ரா பிரிவின் மதுரா-பல்வால் பிரிவில் யார்டு மறுவடிவமைப்பு பணியை முடிப்பதற்காக மதுரா சந்திப்பில் இன்டர்லாக் செய்யப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் மதுரையில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் பல ரெயில்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரத்து செய்யப்படுகின்றன. ரெயில் எண்.12641 கன்னியாகுமரி-டெல்லி நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரெயில் எண்.12642 டெல்லி நிஜாமுதின்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்ரவரி 3, 5 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரெயில் எண்.12651 மதுரை-டெல்லி நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ரெயில் எண்.12652 மதுரை-டெல்லி நிஜாமுதின்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 16, 18, 23, 25, 30 மற்றும் பிப்ரவரி 1, 6 ஆகிய தேதிகளில் ரத்தாகிறது.
ரெயில் எண்.12687 மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ஜனவரி 10, 14, 17, 21, 24, 28 மற்றும் 31-ந்தேதியில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. ரெயில் எண்.12688 சண்டிகர்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல ரெயில் எண்.16787 திருநெல்வேலி-ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ் ஜனவரி 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ரத்தாகிறது. மதுரை மார்க்கத்தில் ரெயில் எண்.16788 ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.
- இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவை:
மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரெயில் (எண் 20644) ரத்து செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12680) ரத்தானது.
இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675), காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675) ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர மிச்சாங் புயல் காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மிச்சாங் புயல் காரணமாக கோவையில் இருந்து வருகிற 6-ந் தேதி பரௌனி புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 03358), கோட்டயத்தில் இருந்து இன்று நரசாபூர் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07120), கொல்லத்தில் இருந்து நாளை செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07130), கொச்சுவேலியில் இருந்து வருகிற 6-ந் தேதி கோரக்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்12512), திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12625), புதுடெல்லியில் இருந்து நாளை மற்றும் 6-ந் தேதிகளில் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் ஷாலிமரில் இருந்து வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்டு வரும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12660), தன்பாத்தில் இருந்து இன்று ஆலப்புழா புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13351), ஆலப்புழாவில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13352), செகந்திராபாத்தில் இருந்து இன்றும், நாளையும் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17230), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 5,6,7-ந் தேதிகளில் செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17229), எர்ணாகுளத்தில் இருந்து நாளை டாடா நகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 18190) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் திப்ருகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) ரத்து செய்யப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து நாளை நெல்லை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22619), எர்ணாகுளத்தில் இருந்து இன்று பாட்னா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22643), பாட்னாவில் இருந்து வருகிற 7-ந் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22644), கொச்சுவேலியில் இருந்து இன்று கோர்பா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22648), கோர்பாவில் இருந்து வருகிற 6-ந் தேதி கொச்சுவேலி புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22647), பாட்னாவில் இருந்து நாளை எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22670), பிலாஸ்பூரில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22815), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22816), ஹதியாவில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22837), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி ஹதியா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22838) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.