என் மலர்
நீங்கள் தேடியது "கூட்ட நெரிசல்"
- பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் நேற்று இரவு வருடாந்திர ஜாத்ரா (ஊர்வலம்) நடைபெற்றது. அப்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறையான அடிப்படை வசதிகள் செய்யாததே இச்சம்பவத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
- குறுகிய தெருவில் சிக்கித் தவித்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
இடோவான்:
தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள். கொரோ தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர்.
அப்போது மூச்சுத் திணறி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சியோல் நகர மீட்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 74 உடல்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படும் வகையில் அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த அறிந்த தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உடனடியாக காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவ குழுக்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளார்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுரை
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல் ேவார் பயணிப்பதால் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகரில் டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் சில பெண்களும் ஈடுபட்டு ள்ளனர்.
பஸ்சில் அருகில் நிற்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சக பயணிகளுடன் கலந்து நிற்கும் கொள்ளை கும்பல் பயணிகள் அசந்த நேரத்தில் பணம்-நகையை திருடிச் செல்கின்றனர்.
மதுரை நகரில் குறிப்பிட்ட வழித்தடங்க ளில் 4 பெண்கள், 19 பவுன் நகையை பறிகொடுத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 25). சம்பவத்தன்று மாலை இவர் மண்டேலா நகரில் இருந்து அரசு பஸ்சில் பழங்காநத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் கற்பகவள்ளி வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.400 ஆகியவற்றை திருடிச் சென்றார்.
மதுரை பழங்காநத்தம், மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி ஜோதிமணி (52). சம்பவத் தன்று காலை இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வசந்த நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்மநபர், ஜோதிமணி அணிந்திருந்த 6 பவுன் நகையை கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக பறித்துச்சென்றார்.
பழங்காநத்தம், பொட்டூரணி தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி லோகாமணி (50). இவர் சம்பவத்தன்று மதியம் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்றார். அதன் பிறகு பைக்காராவுக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 3 பவுன் நகையை திருடிச் சென்றார்.
மதுரை திருப்பரங்கு ன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி பிறைகன்னி (55). இவர் சம்பவத்தன்று மதியம் ஆண்டாள்புரம் பஸ் நிலையத்தில் இருந்து அழகப்பன் நகருக்கு அரசு பஸ்சில் சென்றார்.
அப்போது மர்ம நபர் பிறைகண்ணி கொண்டு வந்திருந்த பையில் இருந்த 6 பவுன் தங்க வளையல், 2 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை திருடிச் சென்றார்.
மேற்கண்ட 4 சம்பவங்களும் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. எனவே போலீசார் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் கும்பலை பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
- அசன்சோல் 27வது வார்டு கவுன்சிலராக உள்ள பாஜக தலைவர் சைதாலி திவாரி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
- நெரிசல் ஏற்பட்டதையடுத்து சுவேந்து அதிகாரி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
அசன்சோல்:
மேற்கு வங்காளத்தின் மேற்கு பர்த்வான் மாவட்டம் அசன்சோல் நகரில் பாஜக சார்பில் மக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு போர்வை பெற்றுச் சென்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி, மற்றொரு முக்கிய தலைவரான ஜிதேந்திர திவாரி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. நெரிசல் ஏற்பட்டதையடுத்து சுவேந்து அதிகாரி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
இக்கூட்டத்தில் சுமார் 5000 பேர் திரண்டுள்ளனர். போர்வை வாங்குவதற்காக முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள் சந்த்மணி தேபி(55), ஜிகாலி பவுரி (60), பிரித்தி சிங் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அசன்சோல் 27வது வார்டு கவுன்சிலராக உள்ள பாஜக தலைவர் சைதாலி திவாரி, மத அமைப்பின் கீழ் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் பாஜக இந்நிகழ்ச்சியை நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டது.
- இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமராவதி:
முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்
ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியினர் என கூறப்படும் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும், சிலர் படுகாயமடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன், காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சென்று சந்திரபாபு நாயுடு ஆறுதல் தெரிவித்தார்.
- கட்சி நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார்.
- கடந்த மாதம் 29ம் தேதி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்
குண்டூர்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சந்திரபாபு நாயுடு சிலருக்கு சேலைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் முண்டியடித்து மேடையை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதேபோல் கடந்த மாதம் 29ம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. தகவலை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர்.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார்.
- ஜின்னா பாலம் அருகே இலவச வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச வேட்டி- சேலைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜின்னா பாலம் அருகே வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலவச வேட்டி-சேலை வாங்குவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படட்து. இதில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சிலருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் ஜல்லி நிறுவன உரிமையாளருமான ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
- மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள்.
நடந்தேறிய இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசை வலியுறுத்துகிறேன்.
நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
குறித்த காலத்தில் விலையில்லா வேட்டி, சேலையை வழங்காத இந்த திமுக அரசு தான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் ரெயில் போக்குவரத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இதனால் விடுமுறை காலங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில் நெரிசல் மிகுந்த ரெயிலில் பயணித்த ஒருவர் கஷ்டப்பட்டு கழிவறைக்கு செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.
இந்த சம்பவம் தேவகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபிஜித் டிப்கே என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் அவரது உறவினர் ஒருவர் அவுரங்காபாத்தில் இருந்து மும்பைக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
அதிகாலை 2 மணிக்கு அவர் கழிவறைக்கு செல்ல முயன்ற போது ரெயில் பெட்டி முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. பெட்டியின் தரையிலும் பயணிகள் அதிகளவில் அமர்ந்திருந்ததால் அவரால் கழிவறைக்கு செல்ல முடியாத நிலையில் அவர் பெர்த்கள் மீது ஏறி ஒவ்வொரு சீட்டையும் கடந்து கஷ்டப்பட்டு கழிவறைக்கு செல்லும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ரெயில் பயணத்தை ஒரு சாகச விளையாட்டாக மாற்றியதற்கு ரெயில்வேக்கு நன்றி என ஒரு பயனர் கிண்டல் செய்துள்ளார். மேலும் சில பயனர்கள் தாங்களும் இதுபோன்ற சூழ்நிலையை பலமுறை எதிர் கொண்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Got this video from my cousin who was travelling in Railway.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) June 18, 2023
Here is his friend trying to make his way to the toilet. @RailMinIndia, thank you for transforming train journey into an adventure sport. pic.twitter.com/3fuHdXWS2A
- தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது.
- மைதானத்தில் சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
அன்டனானரிவோ:
மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்றும், 80 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என்றும், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிக்கு விரைவு, பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை பகுதி பொது மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.
உடுமலை:
உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிக்கு விரைவு, பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் குறைவான செலவில் மனநிறைவான பயணத்தை பாதுகாப்புடன் பெற்று பயனடைந்து வருகின்றனர்.குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை பகுதி பொது மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.
பெளர்ணமி,கோடை ,பொது, வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்று கடலில் குளித்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.அந்த வகையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, மிலாடிநபி,காந்தி ஜெயந்தி என 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதனால் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதி தொழிற்சாலை மற்றும் கோழிப்பண்ணை மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், திருச்செந்தூருக்கு செல்லும் பொதுமக்கள் திருச்செந்தூர் ரெயிலில் பயணம் செய்ய நேற்று குவிந்தனர்.இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.ஆனால் முன்பதிவு,தட்கல் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிச்சிட்டு வழங்குதல் என அனைத்து பணிகளுக்கும் ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் செல்லலாம் என்று நினைத்திருந்த பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏராளமான மக்கள் திரண்டதால் ரெயில் நிரம்பி வழிந்தது.இதனால் ரெயிலில் ஏறிச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.திருச்செந்தூர் பாலக்காடு ரெயில் 20 பெட்டிகள் கொண்டதாக உள்ளது.அதனுடன் கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதேபோன்று கூடுதல் டிக்கெட் மையம் திறக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்தும் மற்றும் உடுமலை ெரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் மையத்தை திறந்து வைக்கவும் முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.