என் மலர்
நீங்கள் தேடியது "slug 166461"
- ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவுவிடப்பட்டுள்ளது
- அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
அரியலூர்:
சென்னை மேடவாக்கத்தில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 66). இவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆவார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை ரூ.22.500க்கு வாங்கியுள்ளார். இதற்கிடையில் உபகரணத்தில் சில பகுதிகள் வேலை செய்யவில்லை. இது குறித்து தான் வாங்கிய தனியார் நிறுத்தில் குறையை சரி செய்ய கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அந்த நிறுவனத்தின் மீது ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், சென்னை தெற்கு மாவடட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:
குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் விற்பனை செய்யப்பட்ட பின்பு உத்தரவாதம் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள காலத்தில் பழுது ஏற்படும் போது அதனை நீக்கி தர வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமையாகும். ஆனால் அதனை விற்பனையாளர் செய்ய தவிறிவிட்டார். என்பதை புகார்தாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே புகார் தாரருக்கு குடிநீர் சுத்திகரிப்பான உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய ரூ.22.500-ஐ 13.10.2015 ஆம் தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு புகார்தாரருக்கு யுரேகா போர்ப்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.
சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு புகார்தாரருக்கு நிறுவனத்தினர் ரூ 50,000 இழப்பீடு வழங்க வேண்டும். இதனை 4 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
- பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பல்லடம் :
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் பல்லடம் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த வாகன பேரணியை பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இருசக்கர வாகன பேரணி பல்லடம் நீதிமன்றத்தின் முன்பு துவங்கி கடைவீதி, கோவை- திருச்சி மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளின் வழியாக நடைபெற்றது. இந்த வாகன பேரணியின் போது ரோட்டில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் நீதிபதி சித்ரா, துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.இதில் நீதிமன்ற ஊழியர்கள்,வழக்கறிஞர்கள்,போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது.
- உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் முதல் மற்றும் 2 வது கூடுதல் மாவட்ட கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றிய கோவிந்தராஜ் கோவைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் இக்கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் தாமதமாகி வந்தது.
தற்போது கும்பகோணம் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த பத்மா, திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என பேசினார்.
- திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வையிட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் ''நியூ மாடல் கேம்ப்'' தொடக்க விழா நடந்தது.
முகாமை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய்பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், இந்த முகாமில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் அரங்குகள் அமைத்து செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர் மூலம் செயல் விளக்கம் அளிப்பதுடன் கையேடுகளும் விநியோகிக்கப்படுகிறது .
இதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் நீதித்துறை (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு), வருவாய்த் துறை , காவல் துறை (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு), பொது சுகாதாரத் துறை, சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், மாவட்ட காசநோய் மையம், தொழுநோய் பிரிவு, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சைல்டு லைன் , மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத்துறை, முதியோர் உதவி எண் 14567, நகராட்சி நிர்வாகத் துறை ஆகிய 18 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது .
விழாவில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன் , போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி பரமேசுவரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1. அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 சத்தியநாராயணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வை யிட்டனர்.
- உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை.
- நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இம்முகாம் நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி வரவேற்றார்.குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சுகந்தி தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை. அதை முறையாகப் பராமரித்து பாதுகாத்து நல்ல உடல் நலத்துடன் வாழ்வதும், அதை பாழ்படுத்தி வீணடிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இந்த பூமியில் நம் பிறப்பு மூலம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் உதவும் வகையில் நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.நம்மை நம்பியுள்ள நம் குடும்பத்தைக் காப்பாற்ற நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். எனவே அதை முறையாக நாம் பாதுகாத்து நலமுடன் இருக்க வேண்டும்.வேலைப் பளு காரணமாக மருத்துவ பரிசோதனைக்கும், உடல் நலம் காக்கவும் இயலாத நிலையில் உள்ளோருக்கு இது போன்ற மருத்துவ முகாம்கள் பயன்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.முகாமில், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி நாகராஜன், மோட்டார் விபத்து வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நடுவர் புகழேந்தி, வக்கீல் சங்க நிர்வாகிகள், பழனிசாமி, சுப்ரமணியம், அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வளர்மதி வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றார்.
- நீதிபதி சபீனா பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அவினாசி :
அவினாசியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவருடைய மனைவி வளர்மதி (36) ஆகியோர் வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றனர். அப்போது அறைக்குள் சென்ற வளர்மதி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த நீதிபதி சபீனா உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்துவந்து அப்பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மயங்கி விழுந்த பெண் விசாரணைக்கு வந்தவர் என்று தெரிந்தும் உடனடியாக நீதிபதி சபீனா மனிதநேயத்துடன் உதவிய மனிதாபிமான செயலை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
- சட்டங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்த ப்பட்டுள்ளதன் அவசியம் குறித்து பேசினார்.
- கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா சட்டம் பற்றி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
கும்பகோணம் :
கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முக ப்பிரியா அறிவுரையின்படி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான சட்டக் கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் தனலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றின் நீதிபதி பாரதிதாசன் சட்டங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்த ப்பட்டுள்ளதன் அவசியம் குறித்து பேசினார். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா சட்டம் பற்றி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் வழக்கறிஞர்கள் மோகன்ராஜ், சிவகுமார், சசிகலா மற்றும் கும்பகோணம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் விஷ்ணு பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப் பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
- வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது என்று நீதிபதி சுனில்ராஜா பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன், துணைத் தலைவா் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
பணிநிறைவு சி.ஐ.டி. அண்ணா மலை வரவேற்றார். வழக்கறிஞா்கள் சுடர்முத்தையா, ராமலிங்கம், கார்த்திகைராஜன், பாத்திமாசித்திக் ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி பேசினர்.
நீதிபதி சுனில்ராஜா பேசியதாவது:-
இந்த குழுவின் நோக்கம் என்னவென்றால் சட்டத்தின் முன் அனை வரும் சமம். ஏழை, வசதி படைத்தவன் என்ற வேறுபாடு கிடையாது. வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது.
நீண்ட காலமாக நடந்து வரும் வழக்குகளை மக்கள் நீதிமன்றம் சமரச தீர்ப்பாயம் மூலம் தீர்வு தேடிக்கொள்ளலாம். அப்படி தீர்வு கிடைக்கப் பெற்றவா்களுக்கு வழக்குக்காக தங்கள் செலவு செய்த தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்த முகாமில் அதிமாக பெண்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. என்றார்.
நிகழ்ச்சியில் வழக்கறி ஞா்கள் மாலதி, சாமி, குமார், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் குத்தா லிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வடகாசி, வசந்தகாளி, திரு மலைக்கு மார், வேலம்மாள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஊராட்சி செயலா் இசக்கி நன்றி கூறினார். ஏற்பாடு களை வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணின் செய்திருந்தார்.
- சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி:
சேலம் அழகாபுரம் ஏடிசி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38) இவருக்கு ஜீவிதா (வயது 34) என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் சேலம் போக்சோ கோர்ட் நீதிபதியின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த வினோத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் கோரிமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வினோத்குமார் சென்றுவிட்டார்.ஜீவிதா அவரது பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார், பின்னர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வினோத்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆட்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம், சாட்சி பாதுகாப்பு என மூன்றும், மனிதரின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட வேண்டிய முக்கிய காரணியாக உள்ளது.
- உலகெங்கும் நடக்கும் ஆட்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவனம், சேவ் அறக்கட்டளை சார்பில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு கூட்ட அரங்கில் ஆள்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி கருத்துரை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, 'ஆட்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம், சாட்சி பாதுகாப்பு என மூன்றும், மனிதரின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட வேண்டிய முக்கிய காரணியாக உள்ளது. அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் பட்டியல் வக்கீல்கள் அனைவரும் இந்த நிகழ்வை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாலமுருகன், உலகெங்கும் நடக்கும் ஆட்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடப்பது குறித்து பேசினார். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய சட்ட உதவி மைய வக்கீல் டேவிட் சுந்தர் சிங், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்து பேசினார். அரசு வக்கீல்கள் மற்றும் பட்டியல் வக்கீல்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்.
- டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஒடிசாவின் தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து நடத்திய தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நீதிமன்ற தீர்ப்புகள் பொதுமக்கள் கருத்துகளின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது, எனவே உச்ச நீதிமன்றமே சட்டத்தின் ஆட்சியை மனதில் வைத்து செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜனநாயகத்தை நான் நம்புகிறேன். ஜனநாயகத்தில் சட்டம் மிகவும் முக்கியமானது. லட்சுமண ரேகையை கடந்து, நீதிபதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வது ஆபத்தானது என்பதால், அரசியலமைப்பின் கீழ் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க நாட்டில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு நீதிபதி, ஒரு விதிவிலக்கான வழக்கில், சமூகத்தின் உணர்வுகளையும், அவர் வழங்கப் போகும் தீர்ப்பின் விளைவையும் அறிந்திருக்க வேண்டும். நீதிபதிகள் சமூக வலைதள விவாதங்களில் பங்கேற்கக் கூடாது, நீதிபதிகள் தங்கள் நாக்கின் மூலம் ஒருபோதும் பேச மாட்டார்கள், அவர்களின் தீர்ப்புகளை மட்டுமே பேசுவார்கள்.
நீதித்துறையின் பங்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கும் மக்களால் நிலைநிறுத்தப்படும் புனிதமான நம்பிக்கையாகும். சட்டத்தின் ஆட்சி என்பது இந்திய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு அம்சமாகும். நாடாளுமன்ற முறைகள் இல்லாத நாடுகளிலும் சட்டத்தின் ஆட்சி உள்ளது. ஒரு சர்வாதிகாரம் கூட சட்டத்தின்படி ஆட்சி செய்வதாகக் கூறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- யோகா பயிற்சியில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
- யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாலையம்பட்டி
ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் தலைமையி் யோகா பயிற்சி நடந்தது. இதில் நீதிபதிகள் ராஜ்குமார், சிந்துமதி, கவிதா மற்றும் நீதித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி நடந்தது. இதில் அருப்புக்கோட்டை நீதிமன்ற சார்பு நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துஇசக்கி ஆகியோர் பங்கேற்றனர்.
யோகா ஆசிரியர் சுந்தர்ராஜன் பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். சாத்தூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
சாத்தூர் நீதித்துறை நடுவர்கள் இதில் பங்கேற்று ஆசனங்கள் செய்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் அனுராதா, நீதித்துறை குற்றவியல் நடுவர் ராஜபிரபு ஆகியோர் பலவிதமான யோகா ஆசனங்களை செய்தனர்.
யோகா ஆசிரியர் ஆசனங்களை செய்து காண்பித்து அதற்கான பலன்களை விளக்கிக் கூறினார்.