என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய அணி"
- இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும்.
ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான். இந்நிலையில் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி வீர்ர்களை பிசிசிஐ சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 2வது வாரத்திற்குள் அணிகள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. தகவலின்படி, இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிக்காக 35 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், சாய் சுதர்சன் மாற்று வீரராகவும் இருக்க வாய்ப்புள்ளது.
5-6வது இடத்தில் பட்டீதர் & கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர் என்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மற்றபடி, உத்தேசமாக, ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, ஷமி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
- இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
- முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம் என நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் 2வது போட்டி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
- வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.
இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.
மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:
வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உலக கோப்பை தொடர்களுக்காக, இந்திய அணியை இப்போதே தயார்படுத்த வேண்டும்.
- டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டயாவை நியமிக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து, தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை இப்போதிருந்தே தயார் படுத்த வேண்டும். இதை தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களே இப்போதைய தேவை. மேலும் ஆல்-ரவுண்டர்களும் அவசியமாகும். அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், இதை நேரடியாக சொல்லி இருப்பேன்.
1983-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள். அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
- இன்றைய வெற்றியின்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தென்கொரியாவின் டேகு நகரில் 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் பிஸ்டல் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. மனு பாகெர், ஏஷா சிங், ஷிகா நர்வால் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் மின்சியோ, கிம் ஜூகி, யாங்ஜின் ஆகியோர் கொண்ட அணியை 16-12 என வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருநாள் போட்டி மீதமுள்ளது.
இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ரிதம் சங்வான், பாலக் மற்றும் யுவிகா தோமர் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் ஜங்மி, கிம் போமி மற்றும் யூ ஹின்யாங் ஆகியோர் கொண்ட அணியிடம் 12 -16 என தோல்வியடைந்தது.
- ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை குறை கூறுங்கள்.
- இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல்.
டெல்லி:
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.
ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.
ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.
பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு.
- முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அந்த அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் தொடரில் இந்திய அணி வேகப்பந்து பிரிவில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர்.

இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் ஜனவரி 12ந் தேதி 2வது ஒருநாள் போட்டியும், திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ந் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
- டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
- ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதால், எதிர்கால போட்டிகளை கருத்தில் கொண்டு நியூசிலாந்திற்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான டி20 அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
கே.எல்.ராகுலும் அணியில் இல்லை. குடும்ப பொறுப்புகள் காரணமாக அக்சர் படேலும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
இந்திய டி20 அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.
- எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
- இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.
இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை நிகழ்த்தியது. எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. 300 ரன்னுக்கு மேல் வெற்றியை ருசித்த முதல் அணி இந்தியாவாகும்.
இதற்கு முன்பு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 290 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.
இந்திய அணி இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இந்த வெற்றி வித்தியாசம் 6-வது இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா 275 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்கா 272 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வீழ்த்தி இருந்தது. இதே போல் தென் ஆப்பிரிக்கா 258 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.
இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.
- மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து ஒயிட்வாஷ் செய்தால் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது. இந்தியா 114 தரநிலை புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றினால், தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளும்.
- ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
- 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில், ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடர் மற்றும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பிடித்துள்ளார். ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர் ), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல். ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட். இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மார்ச்1 ம் தேதி தொடங்க உள்ளது.