என் மலர்
நீங்கள் தேடியது "கரும்பு"
- நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை
- வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை
மடத்துக்குளம்,நவ.21-
மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.
இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.
சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்க தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராக கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாத கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.
பூதலூர்:
பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாத கண்டித்தும், உடனடியாக பொங்கல் கரும்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தலைமைவகித்தார். விவசாய அணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் நக்கீரன், திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் பழனி பிரபா, திருச்சி புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக மாநில பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தெரிவித்தார்.
- அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
- பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது.
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி அறிவித்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு கரும்பை விற்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி டிசம்பர் 24-ந்தேதி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்தேன். அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
- பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- இந்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
சென்னை:
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பை வழங்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் ஜனவரி 2-ம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி தி.மலையில் ஜனவரி 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
கரும்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கரும்பு வழங்கப்படுகிறது.
- மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவனியாபுரம்
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்கியதற்கு காரணம் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு பயந்து அல்ல.
2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு முழுமையாக ரூ.1000த்துடன் பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் முறையாக கிடைக்கும். அதில் எந்த தங்கு தடை இருக்காது. அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மதுரை மாநகர் விவசாய அணி துணை அமைப்பாளர் மாணகிரி குணசேகர்,ஜெய ஹிந்துபுரம் நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்
- அறுவடைக்கு கரும்புகள் தயார் ஆகிறது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வார காலமே உள்ள நிலையில், வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் ஒரு சில விவசாயிகள் மூலமாக, நடவு செய்துள்ள செங்கரும்புகள் தற்சமயம் அறுவடை செய்ய தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் விளைந்த செங்கரும்புகள் பத்து கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று விவசாய தோட்டங்களில் ரூ.150 வரை விற்பனை ஆனது. மேலும் சரக்கு வேன் மூலமாக, வாங்கி சென்ற வியாபாரிகள் கடைகள் மற்றும் பொது இடங்களில் கொண்டு சென்று கட்டு ஒன்று ரூ.200 மற்றும் ரூ.250 வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் எனவும் இப்பகுதி செங்கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
- 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.
பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று தொடங்கிவைக்கிறார்.
அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் 1185 ரேஷன் கடைகளில் உள்ள 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன்விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தஞ்சை கரந்தை சுஜானா கீழக்கரை பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலர் சுமதி இளங்கோவன், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகித்தனர்.
இதேப்போல் தஞ்சை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
- கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது.
- 6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடம் இருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது.
6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.
6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது.
கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
- கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கரும்பு கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்ல புக்கிங் செய்யப்படுகிறது.
இன்று முதல் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்படுகிறது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. முழு கரும்பு கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படுவதால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் 400 கிலோ குறைத்து, 600 கிலோ கரும்பு மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கோவை,
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி ெகாண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்காக கடந்த 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு இன்று காலை கரும்பு கட்டுகள் வந்து இறங்கியது. இவை சேலம் மேட்டூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாளை முதல் பொங்கல் தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும். எனவே டோக்கன் பெற்றவர்கள் நாளை முதல் பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என்றனர்.
- கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
- கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.
பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...?
1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும் பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.
3. மன அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
4. புற்று நோய் வராமல் தடுக்கும்: கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.
5. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
6. கல்லீரலின் ஆரோக்கியம் : கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.
7. வயதாவதை தடுக்கும் : கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
8. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் : கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
9. உடல் எடையினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
10. ரத்த அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.
கரும்பு ஏன் இனிக்கிறது?
கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை இந்த கரும்புச்சர்க்கரைதான்!
கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்
கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.
- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள கரும்பு வியாபாரமும் இன்று அமோகமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.100 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பனங்கிழங்கு விற்பனையும் நடந்தது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, சித்தோடு, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, பர்கூர், தாளவாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது.
ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பெரியார் நகர் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு உசிலம்பட்டி, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓமலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வருகிறது. ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு 5 டன்கள் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது பொங்கலை முன்னிட்டு 10 டன் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.
தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது. எனினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
கடந்த வாரம் ரூ.800-க்கு விற்ற முல்லை பூ இந்த வாரம் தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.3 ஆயிரமாக விற்கப்படுகிறது. இதேபோல் ஜாதி பூ ஒரு கிலோ ரூ.1600, சம்மங்கி பூ ஒரு கிலோ ரூ.100, அரளிப்பூ ரூ.400, செவ்வரளி ரூ.400, செவ்வந்தி ரூ.120 விற்கப்பட்டது.
இன்று சத்தியமங்கலம்பூ மார்க்ெகட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள்தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து. தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிேலா மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.