என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக எம்எல்ஏ"
- வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால் அது மனித குலத்துக்கு அவமானம்.
- அப்படி வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் விலங்குகளாக பிறப்பார்கள் என்றார்.
இந்தூர்:
மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் உஷா தாகூர். முன்னாள் மந்திரியுமான இவர், தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசியதாவது:
பா.ஜ.க. அரசின் ஏராளமான திட்டங்களால் பயனாளிகளுக்கு ஆயிரக்கணக்கான பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும் கூட தங்கள் வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம் ஆகும்.
அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத் தான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமானது என்றாலும், கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
- தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் பயணம்.
- டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
- திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர்.சி.கே.சரஸ்வதி மரியாதை செலுத்துவதற்காக வந்தார்.
- திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர்.சி.கே.சரஸ்வதி மரியாதை செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலை பார்த்ததும் கதறி அழுதார்.
பின்னர் அவர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கிருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆறுதல் கூறினார்.
- பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.
- பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜாசிங். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு புதிய கார்களை வழங்கினார்.
ஆனால் தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் குண்டு துளைக்காத பழைய கார்கள் வழங்கப்பட்டது.
பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட பழைய கார்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா சிங் எம்.எல்.ஏ கடந்த வெள்ளிக்கிழமை தனது பைக்கில் சட்டசபைக்கு சென்றார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
- தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி உள்ளார். ஒப்பந்தம் வழங்க கமிஷன் வழங்க வேண்டும் என்று அந்த தனி நபரிடம் எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மதல் பேரம் பேசியுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டதையடுத்து, ரூ.81 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது.
அதில், ரூ.40 லட்சத்தை முன்பணமாக கொடுப்பதாக பிரசாந்த் மதலிடம் அந்த தனி நபர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த லோக்ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பிரசாந்த் மதலை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்திய லோக்ஆயுக்தா போலீசார், அங்கு கணக்கில் வராத ரூ.8 கோடி பணத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும், பிரசாந்த் மதலை கைது செய்ததுடன், எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏவின் மகன் லஞ்ச வழக்கில் சிக்கிய விவவாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏவை போலீசார் தேடுவதை அறிந்ததும், அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது குடும்பத்தினருக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தன் மீது குற்றச்சாட்டு இருப்பதால், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
- இதை "தயங்காமல் அவ்வாறு செய்யுங்கள்" என்று அங்கு போஸ்டரிலும் குறிப்பிட்டுள்ளார்.
- ஆயுதத்தை வீச வரும் எவரும் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் போலீசிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை சேகரிக்க பாஜக எம்எல்ஏ ஒருவர் டிராப் பாக்ஸ் ஒன்றை அமைத்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ லீஷாங்தெம் சுசிந்த்ரோ மெய்டே, மணிப்பூரின் கிழக்கு இம்பாலில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஒரு டிராப் பாக்ஸை அமைத்துள்ளார். அதில், மாநிலம் முழுவதிலும் இருந்து போலீசார் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மக்கள் இந்த டிராப் பாக்ஸில் கைவிடும் வகையில் அமைத்துள்ளார்.
மேலும் இதை "தயங்காமல் அவ்வாறு செய்யுங்கள்" என்று அங்கு போஸ்டரிலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதத்தை வீச வரும் எவரும் விசாரிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும்படி கேட்கப்பட மாட்டார்கள் என்றார்.
- சிறுமிகளை அன்புடன் பொதுவெளியில் சந்தித்ததாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விளக்கம்
- தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளதாக மாநில அமைச்சர் கண்டனம்.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கவுரிசங்கர் பிசென், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் சிறுமிகளை தவறான கண்ணோட்டத்துடன் தொடுவதாக குற்றஞ்சாட்டி இது சம்மந்தமாக ஒரு வீடியோவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் ட்வீட் செய்து பகிர்ந்தனர்.
மத்தியபிரதேச காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் இருக்கும் இந்த வீடியோவை வெளியிட்டு, இது "வெட்கக்கேடான செயல்" என தெரிவித்து, பிசெனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலாகாட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த பா.ஜ.க., சிறுமிகள் தொடர்பான வீடியோவை ட்வீட் செய்ததற்காக எதிர்க்கட்சியான காங்கிரஸை கண்டித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.
மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா கூறும்போது, "இந்த சிறுமிகள் அவரது (பிசென்) பேத்தியின் வயதுடையவர்கள். பிசென், அவர்களை அன்புடன் பொதுவெளியில் சந்திக்கிறார்" என கூறினார்.
மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சரும், அரசின் செய்தித்தொடர்பாளருமான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், "இது காங்கிரஸின் கீழ்த்தரமான மனநிலையை பிரதிபலிக்கிறது. கேவலமான அரசியலின் காரணமாகவே, பெண்கள் மீதான அவரது (பிசென்) பாசத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் வீடியோவை காட்டிய விதம் வெட்கக்கேடானது. குறிப்பாக சிறுமிகளின் அடையாளத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்சினையை நாங்கள் சட்டப்பூர்வமாக அணுகுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.
- ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக சென்றபோது தன்னை கைது செய்ததாக எம்எல்ஏ தெரிவித்தார்.
- இரு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் கஜ்வேல் நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் பீடத்தின்மீது கடந்த திங்கட்கிழமை இரவில் ஒரு நபர் போதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுநீர் கழித்த நபரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சமூகத்தினரும் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். பதற்றம் அதிகரித்ததையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் இன்று கஜ்வேல் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அல்வால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக கஜ்வேல் சென்றபோது தன்னை தடுப்பு காவலில் வைத்திருப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கஜ்வேலில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இரு குழுக்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
அரசு பதவிகளில் இடம்பெறாத என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக அவர்களுக்கு வாரிய பதவிகள் தர வில்லை.
இதனால் ஏற்கனவே அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் அறங்காவலர் குழு அமைக்கக்கூட பரிந்துரைகளை ஏற்கவில்லை என பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் போர்க்கொடி உயர்த்தினார்.
அவர் சட்டசபையில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
தங்கள் தொகுதியில் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ ஏற்கனவே புகார் கூறி வந்தார். இதற்காக சட்டமன்ற நிகழ்வுகளை புறக்கணிக்கப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். சபாநாயகர் செல்வம் அவரை அழைத்து பேசி சமாதானப்படுத்தினார். பணிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
ஆனால் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, காலம் கடந்தும் தனது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை என தற்போது மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவர் சட்டசபை முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த முடிவை சபாநாயகர் செல்வத்திடம் கடிதமாகவும் அவர் வழங்கியுள்ளார்.
புதுவை சட்டசபை வரும் 20-ந் தேதி கூட உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் திடீர் போராட்ட அறிவிப்பு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வே ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
- எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்காக சட்டசபை கூடும் நாளில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கடிதம் அளித்திருந்தார்.
இந்நிலையில் புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபைக்கு வந்த பாஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டசபையின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
9.10 மணியளவில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபைக்கு வந்தார். அவரும் கல்யாண சுந்தரத்துக்கு ஆதரவாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாக குற்றம்சாட்டினார்.
9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்ட சபைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.களை சமரசம் செய்து, தனது அறைக்கு கையோடு அழைத்துச்சென்றார். இதனால் எம்.எல்.ஏ.கள் தர்ணா ½ மணி நேரத்தில் முடிவடைந்தது.
முன்னதாக கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது,
காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை செயலரான கலெக்டரை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பது இல்லை. அவர் முதலமைச்சர் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார். எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.
- சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.
- இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
கடந்த ஜூலை மாதம் அந்த மாநிலத்தில் காணாமல் போன மாணவன்-மாணவி 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அந்த மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.
அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர் குகி இன மக்கள் வாழும் பகுதிகளில் ரகளையில் ஈடுபட்டனர். போக்குவரத்தையும் துண்டித்தனர்.
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது. அவரது வீட்டை தகர்க்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு படையினர் உரிய நேரத்தில் தலையிட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த ஜூன் மாதமும் அவரது வீட்டை தகர்க்க முயற்சி நடந்தது.
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த சமூக வலை தளங்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. என்றாலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
- 2014-ம் ஆண்டு சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
- பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று விசாரணை முடிவில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், நாளை மறுதினம் (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் கோண்ட் மனைவி பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் ராம்துலார் பதவி விலக நேரிடும்.