என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 177592"
- கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது.
- கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது.
மதுரை:
மதுரை கீழமாசி வீதியில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மொத்த பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இந்தப்பகுதியில் கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகிய 3 பேர் மொத்த பலசரக்கு கடைகளை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஜி.எஸ்.டி. இயக்குநரக அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ரூ.66 கோடி வரை 3 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலசரக்கு கடைகளுக்கு வந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அங்குள்ள ரசீதுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கூறி அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பதட்டமடைந்த அவர்கள், மகாத்மா காந்தி நகர் வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அதிகாரிகள் எந்த தகவலையும் கூற மறுத்ததோடு, 3 பேரையும் சந்திக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது. அதிகாரிகளும் சரியாக பதிலளிக்கவில்லை.
இதை கண்டித்தும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரை விடுவிக்க வலியுறுத்தியும் நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கீழமாசியில் கடை வைத்து வியாபாரம் செய்ய மொத்த முதலீடு ரூ.50 லட்சம் தான். ஆனால் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.66 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. ஜி.எஸ்டி. தொடர்பாக ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் எஸ்டி மேட் பில் என கூறப்படும் ரத்தான பில்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரையும் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.
- திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் உற்பத்தியாளர்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:- நாங்கள் திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் சிறிய அளவில் நடத்தி வருகிறோம். எங்களிடம் சென்னை தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ்,ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.
ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் ரிட்டன் ஆகி விட்டது. அவர்கள் இது போல் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களிடம் ரூ.11கோடியே 62 லட்சத்து 64ஆயிரத்து 218க்கு ஆடைகள் வாங்கி பணம் கொடுக்காமல் உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இது பற்றி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்ய ப்பட்டுள்ளது. பணமோசடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியு ள்ளனர்.
- குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
- அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.
கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.
இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.
தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.
ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
- கடை வியாபாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான தெருவோர கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற தொழிற்பேட்டை சிட்கோ சார்பில் இன்று நோட்டீசு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர கடை வியாபாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
- தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்.
- ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர்.
தென்காசி:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலமாக இருக்கும்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக இருக்கும்போது அதனை ஒட்டிய பகுதி தென்காசி மாவட்டம் என்பதால் அங்கும் 3 மாதங்களும் சாரல் மழை பொழியும். இதனால் குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்ட தொடங்கும்.
சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வண்ணம் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் வியாபாரிகள் பலர் அருவி பகுதிகளை சுற்றிலும் அரசு அனுமதியுடன் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரங்களை மேற்கொள்வர்.
ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர். தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து குற்றால சீசன் தொடங்குவதற்கு முன்பாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வருகிற 4-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளதால் குற்றாலம் சீசனும் இன்னும் ஒரு சில தினங்களில் சாரல் மழையுடன் தொடங்கும் எனும் எதிர்பார்ப்பில் வியாபாரிகள் அனைவரும் தற்காலிக கடைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை போன்று குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டும் மிகப் பிரமாண்டமாக அரசு சார்பில் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தென்காசி மாவட்ட மக்க ளிடையே ஏற்பட்டுள்ளது.
- செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும்.
- கரென்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம்.
திருப்பூர் :
2000ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெறும்அறிவிப்பு வெளியானதில் இருந்து பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள், மருந்துக்கடைகளில் இந்நோட்டுக்களை பெற்று க்கொள்ளாமல் திருப்பி அனுப்புவது தொடர்கிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து ள்ளதால் இந்நோட்டுக்களை மக்கள்அதுவரை பயன்படுத்தலாம்.ஆனால் அதற்கு முன்னதாகவே இந்நோட்டுகளை பெற்றுக்கொள்ளாமல் வர்த்தகர்களும், வியாபாரிகளும் மறுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாயை பெற்றுக்கொள்வதில்லை. 500 ரூபாய் நோட்டு க்களை மட்டும் பெற்றுக்கொ ள்கின்றனர்.அதே போல் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங்மால்கள், மொத்த மளிகை வியாபாரிகள், மருந்துக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பெற்றுக்கொள்வதில்லை. இதனால் இருக்கும் பணத்தை தேவைக்கு கூட செலவிட முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இது குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:- 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொள்ள முடியாது என்று வாடி க்கையாளர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வர்த்தக ரீதியான கரென்ட் அக்கவு ன்ட் வைத்திரு ப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம். எந்த விளக்கமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.ஆனாலும் பலர் இந்த விழிப்புணர்வு இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டை பெற்றுக்கொள்ள மறுப்பது தவறு. வியாபாரிகள், வர்த்த கர்கள் மக்களிடமிருந்து 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொண்டு வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். அப்பணத்தை வங்கியிலும் செலுத்தலாம். எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.
- கருப்பு பணமாக முடக்கி வந்த காரணத்தினால் நடுத்தர மக்கள் பார்க்க கூட முடியவில்லை.
- சிறுக...சிறுக... சேர்த்து வைத்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.
சிறு வியாபாரி புவனேஸ்வரி (கோடம்பாக்கம்):- நடுத்தர மக்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பணக்காரர்களிடம் மட்டுமே ரூ.2000 நோட்டு அதிகளவில் உள்ளது. அவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டும்.
இளநீர் வியாபாரி குமார் (கில் நகர்):- 2000 ரூபாய் நோட்டுகளை பார்த்தே 2 வருடங்கள் ஆகிறது. நோட்டுகள் அச்சடித்தது முதல் 2, 3 வருடங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. பிறகு அதை கருப்பு பணமாக முடக்கி வந்த காரணத்தினால் நடுத்தர மக்கள் பார்க்க கூட முடியவில்லை.
ஆட்டோ டிரைவர் கணேஷ் (சூளைமேடு):- உள்ளூர், வெளியூர் பயணிகள் யாரும் அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுகள் தருவதில்லை. ஆனால் இனி அடிக்கடி மீண்டும் 2000 ரூபாய் பணப் புழக்கத்தை பார்க்கலாம்.
கூலி தொழிலாளி ஜெகநாதன் (போரூர்):- வார சம்பளத்தில் ஒன்று, இரண்டு 2000 ரூபாய் தாள்கள் வரும் நிலையில் அதனை சில்லரையாக மாற்ற பெரும்பாடு பட வேண்டி உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக்கில் கூட சில்லரை தர மாட்டார்கள். இனி எங்கும் மாற்ற முடியாது. இனி அதனை கண்டால் பயம்தான் வரும்.
குடும்ப பெண் சித்ரா (போரூர்):- கொஞ்சம் கூட பணத்தை சேர்த்து வைக்க முடியல. வீட்டிற்கு கணவர் செலவுக்கு தரும் பணத்தில் மிச்சப்படுத்தி அதனை 500, 1000 ரூபாய்களாக மாற்றி வைத்து இருந்த நிலையில் திடீரென 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பு விடுத்து படாதபாடு பட்ட நிலைமையில் மீண்டும் சிறுக...சிறுக... சேர்த்து வைத்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.
- நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
- புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது. சிமெண்ட் கூரைகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளை அகற்றி விட்டு, ரூ.1.61 கோடி மதிப்பில் 48 கடைகள் கான்கிரீட் மேற்கூறையுடன் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடைகளை வாடகைக்கு எடுத்துள்ள வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாற்று இடம் வழங்கப்படுவதாகவும், புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வியாபாரிகள் தரப்பில் கட்டப்படும் புதிய கடைகளில் ஏற்கனவே வாடகைக்கு உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். கட்டப்படும் கடைகளுக்கு குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நியாயமான தொகையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
- தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
கண்ணன், சத்யா ,பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடங்கி வைத்தார். தேசிய நிர்வாக குழு சந்திரகுமார் முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும் . சட்டம் 2015-ன் படி தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
வியாபாரம் செய்யும் இடத்தை முடிவு செய்வதற்கு வணிகக் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் வணிக குழு தேர்தல் நடத்தும் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்டத் தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்கம் பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.
இதில் மின்வாரியம் மண்டல செயலாளர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்கம் பொதுச்செயலாளர் அப்பாதுரை, டாஸ்மாக் சங்கம் மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், டி.என்.எஸ்.டி.சி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், டி.என்.சி.எஸ்.சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கட்டுமான சங்கம் மாவட்ட துணை தலைவர் செல்வம், உடலுழைப்பு தொழிலாளர் சங்கம் சுதா, கல்யாணி, மாநகரத் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில செயலாளராக அந்தோணிராஜ் நியமனம் செய்யப்பட்டார்.
- பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை தலைவர் மைக்கேல்ராஜ் பரிந்துரையின்படி மாநில தலைவர் முத்துகுமார், மண்டல துணைத் தலைவராக பணியாற்றிய குட்டி என்ற அந்ேதாணிராஜை, மாநில செயலாளராக நியமித்துள்ளார்.
அவரை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர்சிவா, மாநில இளைஞரணி தலைவர் ஜெயபால், மதுரை மண்டல, மாநில நிர்வாகிகளான மரிய சுவீட்ராஜன், குணஜீசஸ், வாசுதேவன், பிரபாகரன், கரண்சிங், ஜெயகுமார், தேனப்பன் மற்றும் பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
- பஜார் பகுதியில் பயணத்திற்கு பயன்படாத பழுதான ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
- கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடன்குடி:
உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க கமிட்டி தலைவர் ரவி தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் வேல்ராஜன், துணை செயலாளர் ராஜா, பிரதீப் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சுந்தர்சிங் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில், வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள போலீஸ் பூத் அலுவலகத்தை உடனடியாக அப்புறப்படுத்தி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், உடன்குடி பஜார் வீதிகளில் அலையும் மாடுகள் மற்றும் பன்றிகளை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும், பஜார் பகுதியில் பயணத்திற்கு பயன்படாத பழுதான ரோட்டை புதுப்பிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போரா ட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அமுதன் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.
- நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.
- வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். தற்போது காங்கிரீட் தளம் மற்றும் மேற்கூரை அமைக்க ரூ. 1 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
அதனால் வார சந்தை தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே மாற்றப்படும் என டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்தது. ஆனால் நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.
வாரசந்தையில் பணிகள் நடைபெற்று வருவதால், பாதிக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் பில்லர் அமைக்க 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அறியாமல் பள்ளத்தில் விழும் வாய்ப்புள்ளது. வாரச்சந்தை மாற்றும் முடிவில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாரச்சந்தை பழைய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு, வியாபாரிகளுக்கும் கழிப்பிட வசதி முதற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வியாபாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து இதே பகுதியில் கடை போட்டு வருகின்றனர். வரும் நாட்களில் வார சந்தை பழைய பஸ் நிலையம் அருகே கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படும் என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்