என் மலர்
நீங்கள் தேடியது "slug 179048"
- அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை.
- சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் 22-ந்தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.
அப்போது திருமாவளவன் தரப்பு வக்கீல், இந்த ஊர்வலத்தினால் மத நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ஐகோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு கோர மனுதாரருக்கு உரிமை உள்ளது.
அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை. சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு எடுத்தது உகந்ததல்ல. அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இளந்திரையன் அளித்தார். அதில், கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது. திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
- இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் வெற்றிகரமாக நடைபெறும்.
- 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.
காரனை:
மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சாதி, மதவாத அரசியலுக்கு இடமில்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை.
சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.

இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் இந்த அறப்போர் வெற்றிகரமாக நடைபெறும். லட்சக் கணக்கானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது. வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாஞ்சாங்குளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் மற்றும் குறிஞ்சாகுளத்தில் சாதிய பாகுபாடு தொடர்வதாக கூறி அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சங்கரன்கோவில் டவுன் வடக்கு ரதவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர்கள் டேனியல் சிங், சதுரகிரி, முருகன், சுரேஷ், சுந்தர் தமிழப்பன், இக்பால் கதிரேசன், திருமாவேந்தன், ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாஞ்சாங்குளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும். அதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்தியாவிலேயே அதிகமாக சாதிய வன்கொடுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது. இது போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். பதிவாகாத வழக்குகள் ஏராளமாக உள்ளன. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலை குனிவு. இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு மீண்டும் நாங்கள் எடுத்து சொல்வோம்.
அகில இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான அரசியல் இப்போது தலை தூக்கி இருக்கிறது. தமிழகத்தில் அது வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழக ஆளுநர் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைக்கிறார்.
கிறிஸ்தவர்களை திட்டமிட்டு திருக்குறளை தவறாக மொழி பெயர்த்து விட்டார் என சொல்லுவது என்பது அபத்தத்திலும் அபத்தம். கிறிஸ்தவ சமுதாயத்தின் மீதான வெறுப்பை அவர் வெளிப்படுத்துகிறார்.
இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும், வைணவ சமய அறநிலையத்துறை என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவை தனித்தனியே இயங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை.
- மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அக்டோபர் 2-காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடது சாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது எவ்வகையில் நியாயம் என்னும் கேள்வி எழுகிறது.
பல்வேறு காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது.
ஏனெனில், அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல. ஆனால் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளும் வி.சி.க.வும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளாகும்.
இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த "சமூக நல்லிணக்க மனித சங்கிலி" அறப்போராட்டத்துக்கு எமது தோழமை கட்சிகளான ம.தி.மு.க., ம.ம.க, த.வா.க., நா.த.க., எஸ்.டி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்.எல்-வி), த.பு.க. என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தி.க., தி.வி.க., த.பெ.தி.க., போன்ற சமூகநீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதாவது இந்தப் போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும்.
எனவே, இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை. மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.
எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளன்று நடக்கவுள்ள எமது 'சமூக நல்லிணக்க மனித சங்கிலி' அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும்.
- நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் மர்மமான முறையில் இறந்த பரமசிவம் வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி ஏனாதியில் அம்பேத்கரின் உருவ சிலையை அகற்றியதோடு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக தான் வைக்க வேண்டும் என கூறுகின்றனர். இந்த நடைமுறை இந்தியாவில் எங்குமே கிடையாது.
வெளிநாட்டில் புகழ்பெற்ற இடங்களில் அம்பேத்கர் சிலை வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சிலை வைப்பதில் பல்வேறு பிரச்சினை உள்ளன. சேலம் ஏனாதியில் அம்பேத்கர் சிலையை காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதில் பொதுமக்களையும், வி.சி.க. கட்சியினரையும் அடித்து துன்புறுத்தப்பட்டனர். வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைப்பது கலாச்சார விழா என்கிறனர்.
அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அறிவித்த நிலையில் இதையே காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணிக்கும் தடை விதித்திருப்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி.
சமூக மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2-ல் நடத்தப்படும். அதற்கு உச்சநீதிமன்றத்திலும் டி.ஜி.பி. அலுவலகத்திலும் அனுமதி பெற்று நடத்தப்படும்.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் 50 இடங்களில், நாங்களும் மனித சங்கிலி நடத்தினால் சட்ட ஒழுங்கு ஏற்படும் என்ற அச்சம் அரசுக்கு இயல்பாக ஏற்படதான் செய்யும். அந்த 50 இடங்களில் அனுமதி மறுத்தால் சரி. நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய போராட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்திருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது.
நாங்கள் 500 இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதி கோரி இருந்தோம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த இருந்த 50 இடங்கள் போக, மீதமுள்ள இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குனரை கேட்டுக்கொள்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும். நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
- விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந்தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு 28-ந்தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது, விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்காரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அக்டோபர் 2-ந்தேதி வி.சி.க. சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு இன்று காலையில் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் திருமாவளவன் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.
மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யுங்கள் எனவும் திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.
தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.
- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
- இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
75-வது சுதந்திர தின விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வரும் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, வரும் 28-ம் தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் பெயர் போன சீர்குலைவு சக்திகள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கப் பார்க்கின்றன.
- கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை காவிமயமாக்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கின்றன.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சங்க காலம் முதல் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்ற உலகளாவியப் பார்வையோடும், பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வானளாவிய கோபுரங்கள் கொண்ட திருக்கோவில்கள் நிறைந்த இந்த மண்ணில்தான் சமணமும், பவுத்தமும் நீண்ட நெடுங்காலம் வேரோடித் தழைத்திருந்தன. சமயக் காழ்ப்பு இல்லாமல் அனைவரும் சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கைக்குச் சான்றாக திகழும் நிலம் தமிழ் நிலம் ஆகும்.
சமய சச்சரவுகளுக்கு இங்கே என்றும் இடம் இருந்ததில்லை. தமிழ்ச் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஆன்மீகம் என்பது அனைத்து உயிர்களின்மீதும் அன்பு செலுத்துவது, உயர்வு தாழ்வு பார்க்காதது, தமர்-பிறர் எனப் பேதம் பாராட்டாதது. இப்படி அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் இந்த மண்ணில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன.
வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் பெயர் போன சீர்குலைவு சக்திகள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கப் பார்க்கின்றன. கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை காவிமயமாக்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கின்றன.
இது தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுப்பது மட்டுமின்றி வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான சதித்திட்டமாகும். இந்தப் பிளவுவாத சக்திகளைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
இன்றைய புதுமை வாய்ந்த ஊடக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு பொய்களைப் பரப்புகிற இந்தப் பிரிவினைவாதிகள் தமிழ்நாட்டை வெறுப்பின் விளைநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். அவர்களது வெறுப்புப் பரப்புரைக்கு எதிராக அன்பை, அமைதியை, நல்லிணக்கத்தை முன்னெடுப்போம்.
அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ம் நாள், அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தித் தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமூக நல்லிணக்கப் பேரணிகளை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தப் பேரணியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் சனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்று தமிழ்ச் சமூகத்தின் தனித்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட முன்வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காங்கிரஸ், தி.மு.க.வுக்கு நிகரான வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் அவர்களோடு சேர வேண்டும்.
- தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை நான் எதிர்கொள்ள தயாரில்லை.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்...
எனக்கு தி.மு.க.வும் வேண்டாம்... அ.தி.மு.க.வும் வேண்டாம். காங்கிரசும் வேண்டாம். பி.ஜே.பி.யும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னத்தை சாதிக்க போகிறீர்கள்? இதைவிட முட்டாள்தனமான முடிவு வேறெதுவும் இருக்காது.
எங்களுக்கும் எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேருகிறோம்? பகைவர் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பதை பார்க்க வேண்டும்.
இப்போது சனாதன தர்மத்தை தலைதூக்கவிடக்கூடாது. 2024 தேர்தலில் பி.ஜே.பி.யை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக பிடிக்காவிட்டாலும் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ், தி.மு.க.வுக்கு நிகரான வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் அவர்களோடு சேர வேண்டும். ஒரு ஏழே முக்கால் கிராம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாமும் கால் கிராம் சேர்ந்தால்தான் ஒரு சவரன் ஆக முடியும்.
அண்ணன் சொல்றது சரிதான். அதை நான் ஏற்கவில்லை. ஆனால் அண்ணன் ஏற்கனவே சொன்னது மறந்துவிடவில்லை. 4 சீட்டுக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. மண்டியிட வேண்டியுள்ளது, கெஞ்ச வேண்டியுள்ளது என்றீர்களே? அண்ணன் பட்ட அந்த அசிங்கத்தை நானும் படணுமா?
அவரால் முடியாது என்றால் இருக்கட்டும். தம்பி நான் போராடி பார்க்கிறேன். கெஜ்ரிவால் பஞ்சாபிலும், டெல்லியிலும் போராடி வெற்றி பெறவில்லையா? வெற்றி பெற முடியாது என்று சொல்லக்கூடாது. தம்பியாலும் முடியும். தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை நான் எதிர்கொள்ள தயாரில்லை.
நான் இப்பவே சொல்கிறேன். 2024 தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன். 2026 தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன்.
- நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
- தூத்துக்குடி படுகொலை என்பது நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் அளித்தது.
சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதை இன்னும் அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கிச் சூடு தேவையில்லாமல் நடத்தப்பட்டது என்றும் கலைந்து ஓடிய மக்களைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள் என்றும், இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஃபிரண்ட்லைன் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இல்லாமல் இவ்வாறு அந்த ஆங்கில இதழ் இச்செய்தியை வெளியிட வாய்ப்பில்லை. அத்தகைய நம்பகத் தன்மைக்குரிய ஒரு ஏடு என்பதால், அச்செய்தியைப் புறம்தள்ள இயலவில்லை.
எனவே, ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ளவாறு அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீதும் உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன .
தொலைதூரத்திலிருந்து குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை கொண்டு சுட்டிருக்கிறார்கள் என்றும் கலைந்து ஓடியவர்கள் மீது பின்னால் இருந்து தலையில் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள் என்றும் உடல் கூராய்வு அறிக்கையில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சுடலைக்கண்ணு என்ற போலீஸ் கான்ஸ்டபிள் தொலைதூரத்தில் இருந்து சுடும் எஸ். எல். ஆர் துப்பாக்கியைக் கொண்டு பல பேரை சுட்டுக் கொலை செய்திருப்பதை ஆணையம் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதுபோலவே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரன் தனது பாதுகாவலர் ஸ்டாலின் என்பவரின் கைத்துப்பாக்கியை எடுத்து 25 வயது இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றிருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது.
அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த உருப்படியான முயற்சியையும் செய்யவில்லை என்பதையும் ஆணையம் சுட்டிக் காட்டி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறது.
சிறப்பு நிர்வாக மாஜிஸ்ட்ரேட் அதிகாரம் கொண்ட சேகர், கண்ணன் மற்றும் சந்திரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்த எளிதாக அனுமதி வழங்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டியுள்ள ஆணையம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் உண்மைகளையும், கடுமையான பரிந்துரைகளையும் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றம் சாட்டப் பட்டிருக்கும் காவல்துறை , வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சர்கள் சிலருக்கும் இருந்த நெருக்கமான உறவே இத்தகைய படுகொலை நடப்பதற்குத் தூண்டுகோலாக இருந்தது என ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன.
அந்த அம்சம் குறித்து விசாரணை ஆணையம் ஏதும் தெரிவித்திருக்கிறதா என்பதைத் தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். தூத்துக்குடி படுகொலை என்பது நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும்.
அது தொடர்பான அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தாமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25-வது மாநாடு நாளை நடக்கிறது.
- ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திருப்பூர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் திருமண மண்டப வளாகத்தில் நாளை நடக்கிறது.இதையொட்டி நாளை மாலை 4மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., நாளை மாலை 4மணிக்கு திருப்பூர் வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- நிஷாந்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலறிந்து மிகுந்த வேதனையும் துக்கமும் மேலிடுகிறது. அவரது குடும்பத்தை எண்ணி வெகுவாகத் துயரப்படுகிறேன்.
மருத்துவம் படிப்பது தான் மானத்திற்குரியது என்று இந்த பெண் பிள்ளைக்கு யார்தான் கற்பித்தது? நீட் தேர்வில் தேர்ச்சியடையா விட்டாலும்; அல்லது தேர்ச்சிப் பெற்றாலும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கா விட்டால் அப்படி என்ன இழுக்கு ஏற்பட்டு விடும்?
இத்தனை இளங்குருத்து கள் நீட் என்னும் கொடிய நஞ்சினால் அவிந்து போயுள்ள நிலையிலும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் நெஞ்சில் ஒருதுளியும் ஈரமில்லை என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.
அனிதா முதல் நிஷாந்தி வரை இதுவரையில் 17 பேரை தமிழ்நாடு நீட்டுக்குப் பறிகொடுத்துள்ளது. ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.
ஒருமுறைக்கு இருமுறை நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும் பா.ஜ.க. அரசு மெத்தனம் காட்டிவருகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்தி வருவதன் விளைவாகவே அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் பலியாக நேர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நிஷாந்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அக்குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.