என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹெல்மெட்"
- அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
- இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.
அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ஜோதி அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் BUN-ன்னா கிரீம் இருக்கனும்..Bike-ன்னா ஹெல்மெட் இருக்கணும் என்ற வாசகம் அடங்கிய BUN வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
- போக்குவரத்து விதிமுறைகள் மீறுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- இளம் வயதினர் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ விளையாட்டு மூலம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நகரின் எந்த சாலைக்கு சென்றாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காதது தான்.
இதனால், போக்குவரத்து விதிமுறைகள் மீறுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பலர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக தெரிகிறது. இதனால், அந்த வயது பிரிவினரை இலக்காக கொண்டு பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
அதாவது இளம் வயதினர் விரும்பி விளையாடும் 'பப்ஜி' விளையாட்டு மூலம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 'பேட்டில் கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா' (பப்ஜி) விளையாட்டில் வீரர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்வது போன்றும், 'மச்சா புட் ஆப் ஹெல்மெட் டா' (ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவது) என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இளம் வயதினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என பத்திரிகையாளர் கேள்வி
- அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் காரில் சென்ற துஷார் சக்ஸேனா என்ற பத்திரிகையாளர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி நொய்டா போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் ராம்பூர் நகரில் வசி வசிக்கும் துஷார் சக்ஸேனா வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளை நிற ஹூண்டாய் காரை அவர் வாங்கினார்.
அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கவுதம புத்தா நகரில் அவர் கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாததற்காக 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு 9 மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
தவறுதலாக மெசேஜ் வந்துள்ளது என்று அவர் முதலில் நினைத்துள்ளார். ஆனாலும் அபராதம் செலுத்தக் கூறி அவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து போலீசாரிடம் அவர் கேட்டபோது, அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.
இதுவரை கவுதம புத்தா நகருக்கு காரில் சென்றதே இல்லை எனக் தெரிவித்த துஷார், காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் இதேபோன்று ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மாருதி ஆம்னி காரை ஒட்டிய நபருக்கு ஹெல்மெட் அணியாததற்காக போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து அந்த நபர் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்ட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
- ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோன் வைரலானது.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பிரபல யூடியூபர் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான் தான். இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்" என்று விமர்சித்தனர்.
இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் ‘ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.
- கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் 90 களில் 'சாக்லேட் பாய்' ஆக வலம் வந்த நடிகர் பிரசாந்த், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'அந்தகன்' என்ற படம் மூலமாக 2-வது இன்னிங்சில் நுழையவுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது. அதேவேளை பிரசாந்துக்கு வினையாகவும் அமைந்தது.
காரணம், மோட்டார் சைக்கிளில் சுற்றியபடி பேட்டியளித்த நடிகர் பிரசாந்த், 'ஹெல்மெட்' அணியாதது தான். மேலும், பேட்டி கண்ட அந்த யூ-டியூப் சேனல் இளம்பெண்ணும் 'ஹெல்மெட்' அணியவில்லை. இதனால் வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் 'ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.
இந்த வீடியோவை வைரலாக்கிய விவகாரம் பிடித்த இளைஞர்கள், ''நாங்களெல்லாம் ஹெல்மெட் போடாம போனா, துரத்தி பிடிக்கும் போலீசார், இதனை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை. இதை கேட்பார் இல்லையா...'' என்று கொந்தளித்தனர்.
குறிப்பாக சென்னை போக்குவரத்து போலீசாரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், இந்த வீடியோவை 'டேக்' செய்து, நடவடிக்கை எடுக்குமாறு ஆதங்கப்பட்டனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தே அபராத வேட்டையில் இறங்கும் போலீசாருக்கு, லட்டு போல ஆதாரத்தை தந்தால் சும்மா விடுவார்களா... உடனடியாக மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' போடாமல் பயணித்த குற்றத்துக்காக நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் தங்களை நோக்கி கேள்வி எழுப்பியோருக்கு பதில் அளிக்கும் விதமாக, பிரசாந்த் 'ஹெல்மெட்' போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய புகைப்படத்தையும், அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டனர்.
வைரலாகும் என நினைத்த வீடியோ வினையாகி விட்டது, பிரசாந்த் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் கூறியதாவது:
கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு முழுக்க இலவசமாக ஹெல்மெட் வழங்கி இருக்கிறேன். நீங்களும் அந்த செய்தியை போட்டு இருக்கிறீர்கள்.
நாகர்கோவில், திருச்சி, மதுரையில் ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். பாதுகாப்பாக ஓட்டுங்க, நிதானமாக ஓட்டுங்க என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
இப்போது இந்த நிகழ்வு மூலமாக எனக்கு ஒன்மோர் பிளாட்பார்ம் கிடைத்து இருக்கிறது.
தயவுசெய்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. அது எனக்கில்லை உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் முக்கியம்.
நீங்கள் வெளியே செல்லும்போது 5 நிமிடம் முன்பே கிளம்புங்கள். அவசரமாக வண்டி ஓட்டாதீர்கள்.
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஹெல்மெட் போடு ஓட்டுங்க. பாதுகாப்பாக இருங்க என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- சிலர் விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள்.
சென்னையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் சோதனை நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள். போலீசாரை கண்டதும் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள்வார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பயனர் ஒருவர் கூகுள் மேப் செயலியில் வேளச்சேரியை ஒட்டிய பகுதி ஒன்றில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இது தொடர்பான பதிவு வைரல் ஆனது.
சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொடுக்கும் வகையில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்ற குறிப்பு கூகுள் மேப்ஸ்-இல் இடம்பெற்றால், பலரும் ஹெல்மட் அணிய தொடங்குவார்கள்.
இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முழுவதும் இத்தகைய முயற்சியை கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக அறிவுறுத்தியுள்ளார்.
- இதை பைக்கில் வந்தவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
- அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் டிராபிக் போலீஸ் வாகனம் மற்றும் டிராபிக் போலீஸ் இருப்பதை பார்த்த 2 சக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது ஹெல்மெட்டை எடுத்து அவசரமாக தலையில் மாட்டுகிறார். பின்னர் பக்கத்தில் போன பின்புதான் அது உண்மையான போலீஸ் இல்லை போலீஸ் கட்அவுட் என்று தெரியவருகிறது.
இதை பைக்கில் வந்தவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாகன விபத்துக்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதை குறைப்பதற்காக போக்குவரத்துத்துறை மேற்கொண்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சியை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பதாக கூறப்பட்டிருந்தது.
- போலீசாரை அணுகி தெளிவுபடுத்திய பிறகும், போலீசார் அபராத பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய நிலையில், காரில் செல்லும் நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து ஓட்டும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங் பரிகார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் இருசக்கர வாகனம் ஓட்டவில்லை. தனது ஆடி காரில் சென்ற நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் போலீசாரை அணுகி தெளிவுபடுத்திய பிறகும், போலீசார் அபராத பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. மாறாக தேர்தல் முடிந்த பிறகு இந்த பிரச்சனை குறித்து பரிசீலிப்பதாக கூறி உள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த பகதூர்சிங் தற்போது காரில் செல்லும் போது கூட ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ஹெல்மெட் இல்லாமல் எனது காரை ஓட்டியதற்காக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அதனால் நான் என் காரை ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் மீண்டும் அபராதம் விதித்தால் என்ன செய்வது? என கூறி உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அவ்வழியே தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் (எஸ்.பி) ஷசி மோகன் சிங் இந்த ஜோடியை பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் ஆபத்தான முறையில் பைக் ஒட்டிய வினய் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.
- வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சில வாகன ஓட்டிகள் சாலையில் வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து செல்வது சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் இளைஞர்கள் முயல் வடிவ ஹெல்மெட் அணிந்து சென்ற காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் பரவி இருந்தது.
இந்நிலையில் தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கான்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அணிந்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.
அதில், சாலையில் செல்லும் அந்த இளம்பெண் அணிந்திருந்த ஹெல்மெட்டை கூர்ந்து கவனிக்கும் போது அந்த ஹெல்மெட் அவரது தலையை முழுங்குவது போன்று இருக்கிறது. தலை முழுவதும் மூடிய நிலையில் சிறிய இடைவெளி கூட இல்லாமல் காணப்படும் அந்த பெண்ணின் வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
- பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அணிவதன் மூலம் அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள இந்த வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேன் பேட்டரி மூலம் இயங்கும். ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.
முதற்கட்டமாக 450 போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.
#WATCH | Gujarat: Vadodara Traffic Police provided AC helmets to its personnel to beat scorching heat waves in summer. pic.twitter.com/L3SgyV2uEm
— ANI (@ANI) April 17, 2024
- வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
- ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
மேற்கு வங்க போலீசார் தனது சமூக வலைதள பக்கங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது ஐ.பி.எல். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க போலீசார் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விராட் கோலி ஹெல்மெட் அணிந்து கொண்டு சிக்சர் விளாசும் ஒரு காட்சியுடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி சிக்சர் அடிக்கும் காட்சி உள்ளது. அப்போது கோலி சிக்சர் அடித்த பந்து மைதானத்தில் கூட்டத்தினரின் மத்தியில் விழுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
#ViratKohli #SafeDriveSaveLife pic.twitter.com/2Jyn4r6p6Q
— West Bengal Police (@WBPolice) March 29, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்