என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 180415"

    • தக்கலை போலீசில் புகார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள மிருந்தவிளை பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி ஐடா (வயது 48).

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜ், இறந்து விட்டார். நேற்று ஐடா, தனது மகனுடன் வீட்டில் இருந்தார்.

    இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, யாரோ மர்ம நபர் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள்ளே புகுந்து உள்ளார். அவர் ஐடாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐடா கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர், 2பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஒடிவிட்டான்.

    இதுகுறித்து தக்கலை போலீசில், ஐடா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
    • புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஹைஜின்ஜோஸ் (வயது 40). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுஜா (38), நுள்ளிவிளையில் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அதிகாலை சுமார் 1.45 மணி அளவில் இந்த வீட்டு மாடியின் கதவை உடைத்து 2 பேர் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். அதில் ஒருவன் சுஜாவின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளான்.

    அப்போது மற்றொருவன் சுஜா கழுத்தில் கிடந்த சுமார் 11 பவுன் தங்கத்தாலி சங்கிலியை பறித்துள்ளான். பின்னர் 2 பேரும் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து இரணியல் போலீசில் சுஜா புகார் செய்தார். அதில் நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • வேதனையால் துடித்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பெரியவீரசங்கீ, லட்சுமி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (70). இவரது மனைவி வசந்தா (55). வசந்தாவுக்கு கடந்த 3 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையால் துடித்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தாவை சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். பின்னர் வசந்தா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று திடீரென வசந்தா உடல்நிலை மோசமானது.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று விட்டார்.
    • போலீ்சார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் உத்திகை தெருவில் வசிப்பவர் காசிநாதன் மகன் கவியரசன்(வயது 22). டிரைவர்.

    இவர் அதே ஊரில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்துள்ளார்.

    இதனால் இந்த பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி ஊரை விட்டு அழைத்து சென்று விட்டார்.

    இது குறித்து பெண்ணை காணவில்லை என பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீ்சார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த கவியரசனை போலீசார்கைது செய்து அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இன்று அதிகாலையில் சரிந்து விழுந்தது.
    • இதில் இடிபாடுகளில் சிக்கிய ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, மேட்டு தெரு இப்பகுதியைச் சேர்ந்தவர் ராணி (65), இவரது கணவர் குமார். இவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ராணி இங்குள்ள பெரியார் படிப்பகம் அருகே உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் ராணி குடியிருந்த வீட்டின் சுவர் இன்று அதிகாலையில் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற எடப்பாடி நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா , இறந்தவரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ராணியின் இறப்பு குறித்து அப்பகுதியில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களுடைய சோகத்தை ஏற்படுத்தியது.

    • சங்கிலியை பறித்த.உடன் பெண் கூச்சல் போட்டதால் செயினை பறித்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே அஞ்சாலியை சேர்ந்தவர் சுஜின்குமார். இவரது மனைவி ராதிகா (வயது 31). கோணங்காட்டில் ஆலய திருவிழா நடந்து வருகிறது. ராதிகா ஆலய விழாவிற்கு சென்றார். ஆலய வழிபாடு முடிந்து இரவு அவர் வீடு திரும்பினார்.

    ராதிகா வீட்டு முன் வரும்போது மர்ம நபர் ஒருவர் ராதிகாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி சங்கிலியை பறித்தான்.உடனே ராதிகா கூச்சல் போட்டார். இதனால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டான். இது குறித்து ராதிகா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பறிக்கப்பட்ட செயின் வீட்டின் அருகே கிடந்தது. இதனை போலீசார் கண்டு பிடித்து மீட்டனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபர் பயந்து செயினை வீசிவிட்டு சென்றாரா? அல்லது ராதிகாவிடமிருந்து செயினை பறிக்கும்போது அவர் சத்தமிட்டதால் மர்ம நபர் தப்பும்போது தவறி கீழே விழுந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார், உறவினர்கள் சமரசத்தை ஏற்க மறுப்பு
    • கோர்ட்டில் மனு செய்து விவாகரத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலையை அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் மணவிளை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.

    கணவர் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி, செல்போனில் தோழிகளுடனும், தோழர்களுடனும் பேசி வந்தார்.

    இதில் அவரது வீடு அருகே வசித்த 30 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த வாலிபருடன் செல்போனில் பேசி வந்தார். பின்னர் இருவரும் தனியாக சந்திக்க தொடங்கினர்.

    நாளடைவில் இந்த சந்திப்பு கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவர் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். இங்கு வந்த பின்பு மனைவியை கண்டித்தார்.

    மேலும் இனி கேரளாவுக்கு வேலைக்கு செல்லவில்லை. இங்கேயே வேலை செய்யப்போவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். கணவர் வீட்டில் இருந்தால் கள்ளக்காதலனை பார்க்க முடியாது என்பதை அறிந்து வேதனை அடைந்த அவர் கடந்த மாதம் 24-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.

    இதுபற்றி பெண்ணின் கணவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான பெண்ணை தேடி வந்தனர். இதில் அவர் தனது பக்கத்து வீட்டில் வசித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரியவந்தது. அவரை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். போலீசார், பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீஸ் நிலையம் வந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

    இதுபோல போலீசாரும், உறவினர்களும் கணவருடன் செல்லுமாறு பெண்ணுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து கள்ளக்காதலனுடன் செல்வேன் எனக்கூறினார். இதையடுத்து போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கினர். பின்னர் கோர்ட்டில் மனு செய்து விவாகரத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். கணவர், மகனை தவிக்க விட்டு பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மரத்தில் ஏறி இறங்க மறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சமாதானமாக பேசி கீழே இறக்கி கணவரிடம் ஒப்படைத்தனர்

    புதுக்கோட்டை

    கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது மனைவி சித்ரா (வயது 40). நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள வவ்வால்கள் அடையும் பெரிய ஆலமரத்தில் ஏறி நின்று கொண்டு இறங்க மறுத்துள்ளார். அப்பகுதியினர் சென்று அவரை இறங்கச் சொன்ன போது தன்னை அடிக்கிறார்கள், சொத்துப் பிரச்சினை என்று முன்னுக்குப்பின் முரணாக பேசிக் கொண்டு இறங்க மறுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை இறங்க சொன்ன போதும் அவர் இறங்கவில்லை. இதனால் போலீசார் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் ஏறி நின்ற சித்ராவிடம் சமாதானமாக பேசி அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள் கணபதிபாளையம் ஊராட்சி பெத்தாம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி கல்யாணி(வயது 48). இவர் வீட்டின் அருகேயுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முகவரி கேட்பது போல் நடித்து கல்யாணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அன்ன தானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து போலீசார், நிர்மலாவை கைது செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப் பட்டி, சங்ககிரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா ( வயது 53). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், பான் மசாலா, உள்ளிட்ட குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அன்ன தானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    ‌அதன் பேரில் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில் அந்த கடையில் குட்கா பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து போலீசார், நிர்மலாவை கைது செய்த னர்.

    • சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு
    • னிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள காரியாவிளையைச் சேர்ந்தவர் சுஜிலா. மருந்தாளுநர் பணி செய்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது மர்மமாக இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுஜிலாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் ஏற்பட்ட சந்தே கத்தின் அடிப்படையில் போலீசார் சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்ய ப்பட்டது.

    இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கும்,தற்கொலை தூண்டுதல் வழக்காக மாற்றப்பட்டது.

    இந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய மினி பஸ் டிரைவர் சிபின் கைது செய்யப்பட்டார்.

    • தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
    • மினிபஸ் டிரைவர் சிபின் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே காரியாவிளையை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி சுஜிலா (வயது 28). இவர் மருந்தாளுநர் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் சுஜிலா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் சுஜிலாவிற்கு அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இவர் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    ×