என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு கூட்டம்"

    • திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    • கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கைகள் குறித்து விவாதிக்க முடிவு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கைகள் குறித்து திமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.
    • பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறுித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 30.04.2025 புதன்கிழமை காலை 09.00 மணியளவில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.

    அதில் தேமுதிக பொதுச் செயலாளர் .பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், கழக வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

    இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் (ஒரு நபர் மட்டும்), மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம்
    • 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கை, வரவு, செலவு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட இந்து நாடார் சங்கத்தின் 2022-ம் ஆண்டிற் கான பொதுக் குழு கூட்டம் நாகர் கோவில் சான்றோர் நகர் ஜெக நாதன் தெருவில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் சுபாஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கையை சங்கத் தின் பொதுச் செயலா ளர் பாரத் சிங் அவர்க ளால் வாசித்து அங்கீகரிக்கப் பட்டது. 2021-2022 நிதி ஆண்டிற்கான வரவு, செல வினை சங்கப் பொருளாளர் ராஜதுரை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப் பட்டது. கூட்ட தீர்மானத் தில் காலஞ்சென்ற சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும் இந்து நாடார் வரலாறு, சமுதாய மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், தொழில் துறை மற்றும் விளையாட்டு துறைகளில் முன்னேற்றம் பெற்றிடவும், இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் ஜெயபிரம்ஆனந்த், இனச்செயலாளர் தர்மலிங் கம் என்ற உடையார், செயற் குழு உறுப்பினர்கள் ரெத்தி னாகரன், பூபதி, கனகநா தன், தமிழ்செல்வன், சுரேந்திரகுமார், முத்தரசு, சிவகுரு குற்றாலம், சுயம்பு, தங்கமுருகேசன், பாபுராஜேந்திர பிரசாத், செல்வமணி என்ற மணி, செல்வன், டாக்டர். ஹரிஹர சுதன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் சங்க துணைத் தலைவர் பொறியாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.

    • கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.
    • மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் வரும் 27 ந் தேதி தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. 13- வது மாநாடு சிறப்பாக நடத்துவது என்றும், டிசம்பர் மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் கே.மணி, மாவட்ட பொரு ளாளர் முருகன்,மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனன், மாவட்ட துணைச்செயலாளர் நடராஜன், போக்குவரத்து மண்டல தலைவர் ரவி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கந்த சாமி, கட்டுமானசங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி,விசைத்தறி மாவட்ட செயலாளர் சாமிநாதன், உள்ளாட்சி மாவட்டத்தலைவர் மனோகரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியன், மாவட்ட சிறுதொழில் முகமை உதவி கமிஷனர் சுரேஷ் பாபுஜி, மாநில தலைவர் திருமுருகன், துணைத் தலைவர் பால்கனி, செயலாளர் விஜிஸ், இணை செயலாளர்கள் மணிகண்டன், மாரிமுத்து, பொருளாளர் விஜயன், செயற்குழு உறுப்பினர்கள் காஞ்சனா, ஊர்மிளா, செல்வம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், உணவு பொருள் வியாபாரி சங்க கவுரவ தலைவர் ஜெயபிரகாசம், மடீட்சியா தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்பள தொழிலுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், அபராதம் தொகையை ரத்து செய்ய வேண்டும், அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீதான உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது
    • வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது


    திருச்சி:

    திருவானைக்கோவில் வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.

    திருவானைக்கோவில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளரும் சங்க நிறுவனத் தலைவருமான வெற்றிவேல் தலைமையில் திருவானைக்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் காவேரி பாலம் பழுது வேலை காரணமாக மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், வணிகர்களும் பைபாஸ் வழியாக செல்ல இருப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது. மற்றும் விபத்துகளும், டிராபிக் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் காவேரி பாலத்தை விரைந்து சீரமைத்து தருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில உயர் மடடக்குழு உறுப்பினர் சிவசக்தி ராமநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ் .பி .பாபு , பொருளாளர் இஸ்மாயில் சேட் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் செயற்குழு,பொதுக்குழு , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. சோளிங்கர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி முன்னிலையில் வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அரக்கோணம் மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் மக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், மணி, ஜெயசங்கர், கிருஷ்ணன், குணசேகரன், மாதவன், முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராமசாமி, சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், மாணவர் சங்க செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பொது குழு உறுப்பினர் கோ.ஏழுமலை மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளரும் கைணூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோ.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

    • தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக வீரகனூர் கிளையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் பார்த்தசாரதி, வீரதனூரில் உள்ள வார்டு உறுப்பினர் சுமதி, வட்டாரத் தலைவிகள், பணியாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

    மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வட்டார பணியாளர் ஜமுனா வட்டாரத்தின் சிறப்புகளை பற்றி விளக்கி பேசினார். மேலும் வங்கி மேலாளர் பார்த்தசாரதி மகளிர் குழுவின் சிறப்பை பற்றியும், வங்கி கடனை திரும்ப செலுத்துதல் குறித்தும் பேசினார். முடிவில் வட்டாரத் தலைவி கல்யாணி நன்றி கூறினார். அனைவருக்கும் சிறுதானியம் வழங்கப்பட்டது.

    • வணிகர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் .
    • கடைகளுக்கு விடுமுறை அளித்து திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    தருமபுரி, 

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிரிதர் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு வருகிற மே மாதம் 5-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் 30-வது வணிகர் உரிமை முழக்க மாநாடு குறித்து விளக்கி பேசினார். இந்த மாநாட்டில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் அனைவரும் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து திரளாக கலந்து கொள்வது, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கடைகளில் ஏற்கனவே கடை நடத்தி வரும் வணிகர்களுக்கு மீண்டும் கடைகளை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட இணை தலைவர்கள் சின்னசாமி, தர்மன், மாவட்ட துணைத் தலைவர்கள் மணி, சத்தியநாராயணன், சத்திய நாராயணன், மாவட்ட இணை செயலாளர் மாது, மாவட்ட இணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அசம்கான், நாராயணசாமி, முத்து, கண்ணப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ஆண்டாள் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களை ஆசிரியர் சவுந்திர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    • ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
    • ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி, கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொகுதி தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் சேருவதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு வழங்கினார். அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கீழக்கரை, திருப்புல்லாணி,பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    • ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.கே.பெரியசாமி, செயலாளர் வர்கீஸ், இளைய பெருமாள், பொருளாளர் சந்திரதாசன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில், ஊராட்சி கடை களுக்கான அரசாணை யினை மறுபரிசீலனை செய்து நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் சங்க செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பாலாஜி, ஆலோசகர்கள் சரவணன், கணேசன், சீஜூ, சதானந்தம், புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள், ஏற்காடு பகுதி வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.
    • சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க கூடாரங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.பி.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கத்தின்கவுரவ ஆலோசகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ்.கவுரிசங்கர், பொருளாளர் ஏ.டி.சி.பழனிச்சாமி, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால், செயலாளர் கங்கா எஸ்.சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உள்பட சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×