என் மலர்
நீங்கள் தேடியது "தொடர் மழை"
- திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். பாலாறு, செய்யாறு, வேதவதி ஆறுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்கிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதே போன்று வேங்கசேரி தடுப்பணையும் முழு கொள்ளளவை எட்டி 2 ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டு ஆர்ப்பரித்து நீர் செல்கிறது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த இரு தடுப்பணைகளும் நிரம்பி அதிக நீர் செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திருமங்கலம் தாலுகாவில் கண்மாய்கள் நிரம்பின.
- தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் மழை மற்றும் வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீ ரால் இந்ததாலுகாவில் அமைந்துள்ள பொன்னமங்கலம் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
பொன்னமங்கலம் கிராமத்திற்கு அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கண்மாய் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக கடந்த ஒருவாரகாலமாக பொன்னமங்கலம் கண்மாய்க்கு வந்து கொண்டிருந்தது.
இதனால் நேற்று முன்தினம் பொன்ன மங்கலம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து கண்மாய் உபரிநீர் கண்மாயின் கிழக்குப்பகுதி வழியாக மறுகால் பாய்ந்து வெளியேறி அருகேயுள்ள ஜோசியர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்லத் தொடங்கியுள்ளது.
இதே போல் பொன்ன மங்கலம் கிராமத்தின் அருகேயுள்ள மேலேந்தல் கண்மாயும் நிரம்பி வழிகிறது. இந்த கண்மாய்க்கு பொன்னமங்கலம் கண்மாயின் மேற்குபகு தியிலுள்ள மறுகால் மூலமாக வெளியேறும் நீர் வருவதால் மேலேந்தல் கண்மாயும் நேற்று நிரம்பியது. இந்த கண்மாயின் உபரிநீர் மறுகால் வழியாக உரப்பனூர் கண்மாக்கு செல்கிறது. இது தவிர பொன்னமங்கலத்தினை அடுத்துள்ள திருமங்கலம் தாலுகாவின் கடைசி எல்லை கிராமமான வாகைகுளம் கிராமத்தில் உள்ள வாகைகுளம் கண்மாயும் நிரம்பியுள்ளது. தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மின்கம்பமும் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
- பொதுப்பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும்
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே காவஸ்தலம் சந்திப்பில் இருந்து மணலிவிளை செல்லும் ரோடு பகுதியானது பட்டணங்கால்வாய் சானல் கரையோரம் பகுதியாகும்.
இந்த சானல் இரண்டு பகுதிகளிலும் ஏராளமான வீடுகள் உள்ளது தினமும் இந்த பகுதி வழியாக கார், மோட்டார் சைக்கிள் வாகனம் அதிகம் செல்கிறது. அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள் அமைந்துள்ளது. பள்ளி வேன்கள் இந்த பகுதியாக தான் செல்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது. குலசேகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது.
இதனால் சானல் கரை யோரம் இருந்த பகுதிகள் மிக மோசமாக இருந்தது. காவஸ்தலம் சந்திப்பில் இருந்து செல்லும் ரோடு நேற்று பெய்த மழையில் சானலின் கரையோர பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி யில் விரிசல் ஏற்பட்டது அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதன் அருகில் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின்கம்பமும் சரிந்து நிற்கிறது. எனவே பொதுப் பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
- சிதம்ப ரத்தில் அதிகபட்சமாக 15.3 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இதில் சிதம்ப ரத்தில் அதிகபட்சமாக 15.3 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது குறிப்பிடத்த க்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பதிவாகியுள்ளது பின்வருமாறு:-
சிதம்பரம்-153.8, சேத்தியத்தோப்பு- 128.6, அண்ணாமலைநகர்-119, பரங்கிப் பேட்டை115.8, கே.எம்.கோயில்-115, லால்பேட்டை-111, புவன கிரி-105, ஸ்ரீமுஷ்ணம்- 56.2, பெல்லாந்துறை-55.2, கடலூர்-52.6, கொத்த வாச்சேரி- 35.0, ஆட்சியர் அலுவலகம்-32.6, விருத்தா சலம்-32.0, எம்.மாத்தூர்-28.0, குப்பநத்தம்-27.6, குறிஞ்சிப்பாடி- 27.0, SRC குடிதாங்கி - 25.0, வேப்பூர்- 16.0, காட்டுமயிலூர்- 14.0, கீழ்செருவாய்- 13.0, பண்ருட்டி- 12.0, வானமா தேவி- 11.0, தொழுதூர்- 9.0, வடக்குத்து-8.0, லக்கூர்- 7.1மொத்தம் - 1309.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம்.
கடலூர்:
வடகிழக்கு பருவ மழை தற்போது தமிழகத்தில் பெய்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மழை பரவலாக மழைபெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதியில் மழை வெளுத்த வாங்கி வருகிறது. சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம். தற்போது பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படும். விளை நிலங்களில் மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாக பாசன வாய்க்காலை தூர்வாரி பராமரிக்காத காரணத்தாலும் மெத்தன போக்காலும் அதிகளவு மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை மதிப்பீடு செய்து உரிய இழப்பீடுவழங்க வேண்டும் என்றனர்.
- தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
- நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்தது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரங்கி பேட்டை, கீரப்பாளை யம், குமராட்சி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது தவிர கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.
கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் 200 வீடுகள் சேதமாகி உள்ளது. 8 கால்நடைகள் இறந்துள்ளது. 7 இடங்களில் மின்கம்பம் சாய்ந்துள்ளது. ஒரு இடத்தில் மரம் முரிந்துள்ளது. தொடர் மழை காரண மாக கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து ள்ளது. இந்த பகுதியில் உள்ள தண்ணீரை ராட்சத குழாய் மூலம் பம்பிங்செய்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக தோட்ட க்கலை, பொதுப்ப ணித்து றை, வருவாய்துறை அதி காரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- கடந்த சில மாதங்களில் ரப்பரின் விலை ஒரு கிலோ ரூ.160 வரை இருந்தது. ஆனால் தற்போது விலை ஒரு கிலோ ரூ.129 என்று குறைந்து உள்ளது.
- தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாலும் அவதிப்படுகிறார்கள். அரசு உடனே தேங்கி இருக்கும் ரப்பர் சீட்டுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலையோர பகுதிகளில் தினமும் அதிக மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்ட மக்களின் முக்கியமான தொழில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் இங்கு உற்பத்தியாகும் ரப்பர் உயர்தரமான வகையை சார்ந்ததாகும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் இங்கு உள்ள ரப்பருக்கு விலை அதிகமாக இருக்கிறது. இதனால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் நல்ல வருமானம் வருகிறது.
தற்போது இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இங்கு உற்பத்தியாகும் ரப்பர் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. கடந்த சில மாதங்களில் ரப்பரின் விலை ஒரு கிலோ ரூ.160 வரை இருந்தது. ஆனால் தற்போது விலை ஒரு கிலோ ரூ.129 என்று குறைந்து உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாலும் அவதிப்படுகிறார்கள். எனவே அரசு உடனே தேங்கி இருக்கும் ரப்பர் சீட்டுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரப்பர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது.
- ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா்.
காங்கயம்:
காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலா்த்தும் உலா்களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்துப் பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெறும்.
இந்நிலையில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது. இதனால், தேங்காய் உடைத்து உலா்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா். இதனால் தேங்காய் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு ஏரி குளம் ஆகிய இடங்களில்நீர் நிரம்பி உள்ளது. பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஆறு, குளம்,ஏரிகளில் குளிக்க கூடாது என்று தடை விதித்துள்ளனர் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்று பகுதியில் குளிப்பதற்காக வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார்தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
- திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்படும்.
பின்னர் மாலை நேரங் களில் வனத்தில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்குகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகப்படியான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் பிரதான அணையான பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர்தரமான ரப்பர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்ப டுகிறார்கள். ரப்பர் உற்பத்தி செய்யும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் செங்கல் சூளை அதிக அளவில் உள்ளன. இந்த தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
- வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.
- வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்படும். இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறி பயிர் வகைகள் கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.
கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் அதிக அளவில் விற்பனைக்கு விளை பொருட்களை கொண்டு வரவில்லை. காய்கறிகளை விவசாயிகளிடம் வாங்கி விற்கும் வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை. இதனால் வார சந்தையில் வியாபாரம் குறைவாகவே காணப்பட்டது.
- ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு
- பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பொழியும் தொடர்மழை யால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு அடைந்துள்ளதால் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிக் கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதா ரமாக விளங்குவது ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழிலாகும். இந்த மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தோட்டங்கள் ஆரல் வாய்மொழி, பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோர், அருமநல்லூர், சுரு ளோடு, சித்திரங்கோடு, பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, கோதையார், வேளிமலை பகுதிகள், முட்டைக்காடு, அருமனை, மருந்துகோட்டை, குமாரகோயில், வட்டம், கல்குறிச்சி, இரணியல், புதுக்கடை, பாலமோர், காஞ்சாம் புரம் மற்றும் பல ஊர் பகுதிகளிலும் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தோட்டங்களில் பல நிலைகளில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை காக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிக்கின்றனர்.