என் மலர்
நீங்கள் தேடியது "மோதல்"
- ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
- "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மகாராஷ்டிரா அரசியலில் மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை பேசு பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மகன் சத்ரபதி சாம்பாஜி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "சாவா" என்ற திரைப்படம் வெளியானது முதல் ஓரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்து அமைப்புகளான பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆகியவை மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து ஔரங்கசீப் கல்லறை அமைந்துள்ள சாம்பாஜி நகர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன்படி ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மேலும், இது தொடர்பாக வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. இதையடுத்து இஸ்லாமியர்களை கொதிப்படைய செய்தது. இதனால் அவர்கள் மகால், கோட்வாலி, கணேஷ்பேத் மற்றும் சித்னாவிஸ் பூங்கா என பல்வேறு பகுதிளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமுற்றனர். இந்த மோதல் நாக்பூரின் ஹன்சாபூரி பகுதியிலும் பரவியது.
அடையாளம் தெரியாத நபர்கள் கடைகளை அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும், இந்த பகுதியிலும் கல்வீசி தாக்குதல் நடந்தது. நாக்பூர் முழுக்க மோதல்கள் அரங்கேறி வருகிறது.
வன்முறையை தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். வன்முறையை தொடர்ந்து காவல் துறையினர் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் காரணமாக வன்முறை நடந்த பகுதிகளில் அதிகாரிகள் சிசிடிவி வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கலவரக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்க காவல் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
- சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரதாஸ் (வயது 46). இவரது மனைவி ராஜலக்ஷ்மி. இவர் 36- வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சங்கரதாஸ் அகற்றும் போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பக்கிரி உள்ளிட்ட சிலர் சங்கர் தாஸை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
இதில் சங்கரதாஸ், உஷா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சங்கர்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், பக்கிரி, குப்புராஜ், வினோ, ரவீந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீதும், உஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கரதாஸ், வெள்ளையன், கபிலன் உள்ளிட்ட 6 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது தங்கை பிறந்தநாளுக்கு சூர்யா என்பவர் தனது நண்பர்களுடன் வாழ்த்து கூற வந்தார். அப்போது சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து எதற்காக வாழ்த்து கூற வந்தீர்கள்? என்று கூறி சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் உட்பட 3 பேரும், சபரி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர்.
- நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியானது.
கடலூர்:
விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் . அவரது மகன் வருண்குமார் இவரும், கீழப்பாளையூர் கிராமத்தை சேர்ந்த சுதாகரன் என்பவரும், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீ யர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர். . இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதால், 2பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று கல்லூரி செல்வதற்காக சுதாகரனும், வருண்குமாரும், கல்லூரி பஸ்சுக்காக கருவேப்பி லங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி மாணவியியை காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சினையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்தில், 2 மாணவர்களும் மற்றும் அவர்கள் சக கல்லூரி மாணவருடன் ஒன்றிணைந்து, ஒருவரு க்கொருவர் உருட்டு கட்டை கொண்டு கொடூரமாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்த 6 கல்லூரி மாணவ ர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினர் இதுபோல் சம்பவத்தில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து, வழக்கு எதுவும் பதியாமல் வீட்டுக்கு, அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையால், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியாகி விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.
- மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் ஆலத்தூரை சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். சங்கராபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த சங்கராபுரம் மாணவரின் பையை, ஆலத்தூர் மாணவர் பிடுங்கியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த சங்கராபுரம் மாணவரை, ஆலத்தூர் மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மாணவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலத்தூர் மாணவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவரது பெரியப்பா காசிநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அருண்குமாரை , குணசங்கர், ரவிக்குமார் மற்றும் ஒரு சிலர் சேர்ந்து தாக்கினார்கள். அப்போது இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் குணசங்கர் என்பவரை தாக்கியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் குணசங்கர், ரவிக்குமார் உள்பட 6 பேர் மீதும், குணசங்கர் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் உள்பட 4 பேர் மீதும் என 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்து அமைப்பினர் அப்பகுதியில் அனைத்து சாலைகளிலும் காவி கொடிகளை கட்டி இருந்தனர்.
- மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிருங்கேரி:
கர்நாடகாவில் மசூதி முன்பு இந்து அமைப்பினர் காவிக்கொடி ஏற்றிய விவகாரத்தால் மோதல் ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம், சிருங்கேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் முன்பாக நேற்று இரவு இந்து அமைப்பினர் சிலர் காவி கொடி தோரணம் கட்டி, காவி கொடியையும் ஏற்றியுள்ளனர். இதைப் பார்த்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலில் முடிந்தது.
பாபாபுடங்கிரி யாத்திரையை முன்னிட்டு இந்து அமைப்பினர் அப்பகுதியில் அனைத்து சாலைகளிலும் காவி கொடிகளை கட்டி இருந்தனர். மசூதிக்கு வெளியே உள்ள சாலையில் காவி கொடிகள் கட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் இரு தரப்பினரிடையே போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
- கார் மீது வேன் மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
- மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் முனியாண்டி (வயது56). இவரது மனைவி முத்துப்பிள்ளை. இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். முனியாண்டி தனக்கன்குளம் பகுதியில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து வேடர் புளியங்குளத்திற்கு காரில் சென்றார்.
அப்போது ஆவியூரில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கொரியர் வேன், கார் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்து முனியாண்டி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் 6 பேர் மீது வழக்கு
- படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி பீச் ரோடை சேர்ந்தவர் பீர் காஜ முகைதீன்.இவரது மனைவி முபீனா (வயது 34).இருவரும் உகண்டாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-ம் அலையில் பீர் காஜ முகைதீன் இறந்து விட்டார். இதற்கு பிறகு முபீனா உகண்டா சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு ஊர் திரும்பி கணவர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் வீட்டில் முபீனா வசிப்பது தொடர்பாக முபீனாவுக்கும் மாமியார் மெகர்பான் பீவிக்குமிடையே தகராறு இருந்து வருவதாக கூறப்ப டுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவ ருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கை கலப்பு ஏற்பட்டது.அவர்கள் இரு தரப்பினராக மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முபீனா, மெகர்பான் பீவி இருவரும் படுகாயமடைந்தனர்.
இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இருவ ரும் தனித்தனியாக மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்
- போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள கையால விளை முதலார், செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ஜாண்கிறிஸ்டோபர்.
இவரது மனைவி ஷீபா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாபு மனைவி ஜெயலலிதாவுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று காலையில் பஞ்சா யத்து குழாயில் தண்ணீர் எடுத்துவரும் போது 2 தரப்பினரும் வாய் தகராறு வந்து மோதிகொண்டார்கள். 2 தரப்பினரும் அரிவா ளால் மாறிமாறி தாக்கி கொண்டார்கள். இதில்இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்காயம் அடைந்த ஜாண் கிறி ஸ்டோபர், அவரது மனைவி ஆகிய 2 பேரும் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாபு, அவரது மனைவி ஜெயலலிதா ஆகிய 2 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.
- தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் யாத்திரை கணேசன் (வயது 57). இவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடர்ந்து அவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.
இதையடுத்து அங்கிருந்து நேற்று அவரது உடல் தஞ்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அவரது உடலுக்கு எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்) , முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், நிர்வாகிகள் அலாவூதீன், கோவி.மோகன், பூபதி, சதா.வெங்கட்ராமன், செல்வம் மற்றும் பலர் செலுத்தினர். இதனை தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.
- 2 பேர் படுகாயம் அடைந்தனர்
- களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.
இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.