என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 187843"
- பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
- சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார்.
பல்லடம் :
பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு கோவை - திருச்சி மெயின் ரோட்டில் நால்ரோடு பகுதியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார். அப்போது எதிரே வந்த சிறிய சரக்கு வேனில் மோதி கீழே விழுந்தார்.இதையடுத்து அவரை அமுக்கிப் பிடித்த போலீசார் அவர்களது பாணியில் "கவனித்து" அவரை மீண்டும் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்பொழுது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.
- மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது.
- அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.
கோவை:
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 96.21 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கோவை மாவட்டம் 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவில் 97.57 சதவீதம் பெற்று மீண்டும் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
கோவையில் உள்ள மத்திய ஜெயில் கைதிகளில் 12 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.
- அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை.
- ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவடைகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா சங்கதாலா கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரா ராத்தோடு. நீதிபதியான இவர் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கோர்ட்டில் 4 ஆண்டுகளும், விஜயாப்புராவில் 2 ஆண்டுகளும் பணியாற்றி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக கதக்கில் அவர் பணியாற்றினார்.
இந்நிலையில் அரசியலில் ஈடுபட நீதிபதி சுபாஷ் சந்திரா முடிவு செய்தார். இதையடுத்து, தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு கட்சியில் சித்தாப்புரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதுபற்றி அவர் கூறுகையில், அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய தூண் சரிந்து கொண்டே வருவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
அரசியல் மூலமாக சமூகத்தில் மாற்றங்களையும், பலதரப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் முடியும். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில், என்னுடைய நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்றார்.
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நடந்தது. இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஷாபி என்பவர் உள்பட 8 பேரை என்.ஐ.ஏ. கைது செய்தது. அனைவரும் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விசாரணை கைதியாக சிறையில் உள்ள ஷாபி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து நேற்று ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
- ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி
- இரணியல் கோட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
கன்னியாகுமரி :
திங்கள் சந்தை அருகே புது குளத்தான் கரை பகுதி யைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55).
இவர் கடந்த ஜனவரி மாதம் குளச்சல் அருகே டாஸ்மார்க் கடையில் நடந்த மோதலில்அதே பகுதியைச் சேர்ந்த அருள் பாபி (53) என்பவரை தாக்கினார். இதில் அருள் பாபி இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் ராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜெயி லில் இருந்த ராஜனை வழக்கு விசாரணைக்காக நேற்று இரணியல் கோட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜன் போலீ சாரிடம் சிறுநீர் கழிக்க செல்லவேண்டும் என்று கூறிவிட்டு கழிவறைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து கழிவறையிலிருந்து சத்தம் கேட்டதையடுத்து அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.அப்போது கழிவறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ரத்த வெள் ளத்தில் கிடந்த ராஜனை மீட்டு போலீசார் சிகிச் சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச் சைக்காக நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ராஜனை போலீசார் சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்துள்ளனர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். தற்கொலைக்கு முயன்ற ராஜன் மீது போலீ சார் இந்திய தண்டனைச் சட்டம் 309 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறின்போது கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
- போலீசார் கதவை உடைத்து கழிவறைக்குள் சென்று தற்கொலைக்கு முயன்ற ராஜனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே நீதிமன்ற கழிவறையில் கொலை வழக்கு கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள சாத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கபடி ஆசிரியர் அருள்பாதி என்பவர் கடந்த ஜனவரி மாதம், மார்பில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தார். சந்தேக மரணம் என்ற பிரிவில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது இரணியல் அருகே உள்ள நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர், டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறின்போது அருள்பாதியை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ராஜனை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக ராஜனை போலீசார் இன்று இரணியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக காத்திருந்த ராஜன், கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் கூற, அவர்களும் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் கழிவறைக்கு சென்றவுடன் கதவை உள்தாழ்ப்பாள் போட்ட ராஜன், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் தரையில் விழுந்து துடிதுடித்தார். அலறல் சத்தம் கேட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போலீசார் ராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
- விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார்.
விக்கிரவாண்டி:
இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் போலீசார் இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்று வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர்.
அப்போது இரவு 8.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள ஓட்டலில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு போலீசார் சாப்பிட சென்றனர். அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறினார்.
மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது.
- மனைவியை சந்திக்க ஹரிகிருஷ்ணன் பரோலில் சென்றார்.
- சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார்.
சேலம்:
சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது52). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், பல்வேறு சிறைகளில் மாறி மாறி 12 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார்.
இதில், அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியை சந்திக்க, ஹரிகிருஷ்ணன், 2022 ஜூன் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பரோலில் சென்றார்.
பின்னர், அவர் சேலம் திரும்பியபோது, சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார். இதற்கு, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அப்போதைய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், துறை நடவடிக்கை மேற்கொண்டு வார்டனை, சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
பின் கோவை கூடுதல் சிறை எஸ்.பி. சதீஷ்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில், வார்டன் மோட்டார் சைக்கிளில் ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச் சென்று அஸ்தம்பட்டி சந்திப்பில் இறக்கி விட்டு, அவரை தப்பிக்கவிட்டார் என்பது உறுதியானது.
அதன்படி எஸ்.பி. தமிழ்செல்வன், வார்டனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
- 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
- இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே புத்தன் சந்தை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 37). இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.இதையடுத்து சுனில் குமார் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். சுனில் குமார் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பளுகலை அடுத்த கண்ணுமாமூடு பகுதியில் சுனில் குமார் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அமர்வு நீதிமன்றத்தில் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
- வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் ஆற்றோரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் என்கிற துரைசாமி (வயது 2). இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவர் பிணையில் வெளிவர இயலாதபடி பிணை ஆனை கோர்ட்டு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது மீதான குற்ற முறையீட்டுக்க பதில் அளிக்க வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் தலைமறைவான 27.3.2003-ம் ஆண்டு முதல் போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனாலட போலீசாரின் கண்களில் படாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் எலும்பன் என்கிற துரைசாமி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சேலம் டவுன் போலீஸ் நிலையம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
- இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
போலா
இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
போலா போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'போலா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Experience the unstoppable in 3 days. #BholaaTeaser2OutOnJan24#Bholaain3D @ajaydevgn #Tabu @ADFFilms @prabhu_sr pic.twitter.com/v1G0bdIEOb
— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 21, 2023
- 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
- இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
போலா
இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
போலா
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், போலா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிட்டுள்ளது.
Shooting has wrapped; the post-production frenzy has already begun. Remember, we have a date - March 30th in the theatres!#Bholaain3D @ajaydevgn #Tabu @prabhu_sr pic.twitter.com/qbOvXCrIs8
— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 5, 2023
- பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடினார்.
- மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி மகன் அஜித் குமார் (வயது24).
இவர் கடந்த 5-ந் தேதி நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
காயம் காரணமாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டிருந்தார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
நேற்று இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி அஜித்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்