search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ"

    • ஜாமீன் கேட்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமீன் வழங்க நீதிமன்றம் நிபந்தனை விதித்தது

    மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பைசல் என்ற இளைஞர் இரு குழுக்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார் என்பதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    புகாரின் பேரில் கடந்த மே மாதம் மிஸ்ராட் பகுதி போலீசால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கில் ஜாமீன் கேட்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பைசல் மனு தாக்கல் செய்தார்.

    இதுதொடர்பான விசாரணையில், ஜாமீன் வழங்க வேண்டும்என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் கட்டி மிஸ்ராட் காவல் நிலையத்தில் உள்ள தேசிய கொடியின் முன் 21 முறை வணக்கம் செலுத்தி, 2 முறை பாரத் மாதா கி ஜே என உச்சரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் அந்த உத்தரவின்படி பைசல் தேசிய கோடிக்கு 21 முறை சல்யூட் வைத்து பாரத் மாதா கி ஜே சொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் பொரித்து வாக்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளார்.
    • கமலா ஹாரிசை விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

    இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர். அந்த வகையில் இந்தியாவில் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கையாளும் பார்முலாவை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். அதாவது, அமெரிக்க மக்களின் விருப்பத்துக்குரிய மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் பொரித்து வாக்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளார்.

     

    பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்றில் நேற்றைய தினம் அவர் செஃப் உடை அணிந்து பிரென்ச் பிரைஸ் பொரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கமலா ஹாரிசை விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

    கமலா ஹாரிஸ் தனது இளமைக்கால நடுதர வாழ்க்கை குறித்தும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணியாற்றியது குறித்தும் பிரகாரங்களில் சிலாகித்து வருவதால் அதை கிண்டலடிக்கும் வகையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
    • இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவு உறுதி செய்துள்ளது.

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சறுத்தலாக விளங்கும் அணு ஆயுத நாடு வட கொரியா. தற்போது ரஷியாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெருக்கம் காட்டி வருவது நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது.

    வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஷியா , சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கிடையே சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்த வட கொரியா அமெரிக்காவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்தது.

     

    இந்நிலையில் மேற்கு நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் எதிராக மறைமுகமாக கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. அதாவது, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.

    இது குறித்து வட கொரியாவும் ரஷியாவும் எதுவும் பேசாத நிலையில் டஜன் கணக்கான வட கொரிய வீரர்கள் ரஷிய ராணுவ தலத்தில் பயிற்சி எடுத்து சோர்ந்து ஓய்வு எடுப்பது, ரஷிய ராணுவ உபகரணங்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவும் கண்டறிந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

    எனவே உக்ரைன் ரஷியா போர் அடுத்த மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது 100 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன். மேலும் ரஷியாவின் 2 ஆயுத தயாரிப்பு மையங்களும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.
    • 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்டுள்ளது

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் சமீபத்தில் தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது. இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது. ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.  விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் ஏவுதளத்தில் லேண்ட் ஆனது   சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 17 ஆயிரம் டாலர் [சுமார் 14.29 லட்சம் ருபாய்] மதிப்புள்ள லென்ஸ் மூலம் ஏவுதளத்திற்கு 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்ட வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அந்த மொத்த நிகழ்வதையும் கச்சிதமாக படம்பிடித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது.
    • தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லியின் சூழல் நாளுக்குநாள் கடுமையாகி வருகிறது. இன்றைய தினம் [வெள்ளிக்கிழமை] டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியா மற்றும் பாஸ்பேட் அளவு அதிகம் உள்ளதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையே காற்று மாசு காரணமாக பாஜக செய்தி தொடர்பாளர் பூனாவாலா கேஸ் மாஸ்க் அணிந்து ஊடகத்துக்கு பேட்டியளித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. காற்று மாசை தடுக்க கடந்த டெல்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சாலையில் 65 முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    சாலையில் வண்டியில் சென்றவரை மெதுவாக போகும்படி அறிவுறுத்திய முதியவர் அடித்துக்கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அல்வால் [Alwal] பகுதியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

    அன்றைய தினம் அல்வால் சாலையில் 65 முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார். முதியவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்றவரை மெதுவாக செல்லும்படி முதியவர்  கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    அந்த பைக்கில் வந்த நபருடன் அவரது மனைவியும், மகனும் உடன் வந்துள்ளனர். முதியவரைக் கீழ் தள்ளி அடித்துக்கொண்டிருந்த தனது கணவனை சமாதானப்படுத்தி மனைவி முயன்றுள்ளார். இருப்பினும் முதியவரைத் தாக்குவதை அந்த நபர் நிறுத்தவில்லை. சுற்றி இருந்தவர்கள் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர்.

    இறுதியில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • தசரா விழாவுக்கு சென்றுவிட்டு தனது சகோதரன் ஹிமான்சுவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
    • ஹிமான்சுவுக்கு கழுத்திலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

    நல்லது சொல்பவர்களை கூட எதிரியாக பார்க்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பிரதாப் நகரை சேர்ந்த 22 வயது இளைஞன் அங்கூர், கடந்த சனிக்கிழமை இரவு தசரா விழாவுக்கு சென்றுவிட்டு தனது சகோதரன் ஹிமான்சுவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    சபோலி சாலை அருகே வந்தபோது அந்த வழியாக பைக்கில் இரண்டு பேரை பின்னால் ஏற்றிக்கொண்டு வந்த பைக் ஓட்டுநரை பார்த்து பத்திரமாக ஓட்டிச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவன் ஹிமான்சுவையும், அங்கூரையும் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளான். அதன்பின் அவர்கள் மூவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

    தாக்குதலில் ஹிமான்சுவுக்கு கழுத்திலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கூரின் நிலை அதைவிட மோசமான நிலையில் அங்கிருந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அங்கூரை ஹிமான்சு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கூர் ஏற்கவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    உயிரிழந்த அங்கூரின் மார்பு, வயிறு மற்றும் தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த மூவரின் ஒருவனை கைது செய்தனர். ஹிமான்சுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தசரா நாளில் புதிய கார் ஒன்றை ஷோரூமில் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா பூங்கா அருகே வந்துகொண்டிருந்தார்.
    • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாகப் படுத்துக்கொண்டார் .

    மும்பையில் சிறிய பிரச்சனைக்காக இளைஞன் பெற்றோரின் கண்முன்னரே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள மாலத் பகுதி சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஆகாஷ் என்ற 28 வயது இளைஞர் தசரா நாளில் புதிய கார் ஒன்றை ஷோரூமில் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா பூங்கா அருகே வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆகாஷின் காரை ஓவர்டேக் செய்ய முயன்று லேசாக மோதியுள்ளது. இதனால் ஆகாஷுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆட்டோ ஓட்டுனரின் சகாக்கள் அந்த இடத்தில் கூடிய நிலையில் ஆகாஷ் அவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். ஆகாஷை அந்த கும்பல் கீழே தள்ளி அடித்தும் உதைத்துள்ளது. தடுக்க முயன்ற ஆகாஷின் தந்தையும் தாக்கப்பட்டார்.

    தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாகப் படுத்துக்கொண்டார் . ஆனாலும் அடி உதை நின்றபாடில்லை. கடைசியாக ஆகாஷை உயிர்போகும் அளவுக்கு அடித்த பின்னரே அந்த கும்பல் ஓய்ந்துள்ளது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷ் மீது நடந்த தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • முதுமையை பொருட்படுத்தாமல் கமலாவுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் கிளிண்டன் ஈடுபட்டு வருகிறார்.
    • ஜீன்ஸுடன் உள்ளே நுழைத்த அவரை உணவக பணியாளர்கள் உட்பட யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

    நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டிரம்ப் களமிறங்கியுள்ளார். இரண்டு பக்கமும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் கமலாவுக்கு ஆதரவாக முக்கிய மாகாணங்களில் பிரச்சாரம் செய்வதற்காக ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்கு தற்போது வயது 78. முதுமையை பொருட்படுத்தாமல் கமலாவுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் கிளிண்டன் ஈடுபட்டு வருகிறார்.

     

    அந்த வகையில் ஜார்ஜியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கிளிண்டன் மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்குச் சென்றுள்ளார். USA மேல் சட்டை அணிந்துகொண்டு ஜீன்ஸுடன் உள்ளே நுழைத்த அவரை உணவக பணியாளர்கள் உட்பட யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. குறிப்பாக உணவு ஆர்டர் செய்யும் கவுன்டரில் நின்றிருந்த பெண்மணி ஒன்றும் புரியாமல் விழித்துள்ளார்.

    கிளிண்டன் அந்த பெண்மணிக்கு கை கொடுக்க தனது கையை நீட்டினார். சிறிது நேரம் கழித்து வந்திருப்பது பில் கிளிண்டன் என்று அனைவரும் உணர்ந்தனர். அந்த பெண்மணியும் கிளிண்டனை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

    அந்த இடமே சற்று நேரம் சிரிப்பலையில் ஆழ்நத்து. பின்னர் கிளிண்டனுடன் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு காலத்தில் உலகிலேயே சக்தி வாய்ந்த நபராக இருந்த பில் கிளிண்டன் தற்போது யாருக்கும் அடையாளம் கூட தெரியாமல் போனது மனிதர்களை விட காலமே சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதாக அமைத்துள்ளது. 

    • சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த கட்டடம் 150 வருட பழமையானது.
    • கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் சதார் பஜார் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று நேற்றைய தினம் இடிந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டடம் இடிந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் நொடியில் உயிர் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

    சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 100 முதல் 150 வருட பழமையான அந்த கட்டடம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 6-7 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அந்த கட்டடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து வந்தனர்.

    அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பும் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தன்னைப் பார்த்து குறைத்த நாயை பார்த்து தானும் குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான்
    • சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் தனது வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்ததாக 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 சிறுவர்கள் டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்களைப் பார்த்து நாய் குறைக்கத் தொடங்கியுள்ளது.

    அதில் ஒரு 5 வயது சிறுவன் நாய் தன்னை பார்த்து குறைப்பதுபோல் தானும் நாயை பார்த்து குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான். தனது செல்லப் பிராணி கேலிசெய்யப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாத நாயின் ஓனர், சிறுவன் என்றும் பார்க்காமல் வெறி பிடித்ததுபோல் அவனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சிறுவனை தாக்கிய நாய் ஓனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசும் தெரிவித்துள்ளது.

    • வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார்.
    • போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பள்ளியொன்றில் 6 வகுப்பு மாணவன் [11 வயது] சட்டையை இன்- பண்ணி வரவில்லை என்று ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார். அந்த சிறுவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சிறுவனை கன்னத்தில் அறைந்து சரமாரியாகத் தாக்கியது பதிவாகியுள்ளது.

    அன்றைய தினம் வீட்டுக்கு வந்த சிறுவன் நடந்ததை பெற்றோரிடம் கூறிவே உடனே மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுவனின் செவிப்பறை [eardrum] நிரந்தரமாகச் சேதமடைந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நடவடிக்கை எடுக்காததை அடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது.

    ×