என் மலர்
நீங்கள் தேடியது "வனத்துறை"
- ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர்.
- வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேச்சிப்பறை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ். இவருக்கு களியல் வனச்சரகம் தொடலிக்காடு வனப்பகுதியை ஒட்டி கடையல் கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்திற்கு அரசு உரிமை கோரியதால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுடன் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் வனத்துறையினரை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் அல்லது வனத்துறைக்கு சொந்தமான வாகனம், களியல் வனச்சரக அலுவலகத்தின் கம்ப்யூட்டர், அலமாரி, மேசை உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அதனை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு நீதிபதி விஜயகுமார், வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை 12 வாரங்களுக்குள் டேவிட்தாஸிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.
- பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர்.
- கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மதுரை:
தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்த அந்த விமானத்தில் வழக்கம்போல் சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
அப்போது வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர். இதில் அவர் கொண்டு வந்த ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரியவகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8 என மொத்தம் 64 உயிரினங்கள் கொண்டு வரப்பட்டதை அறிந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து சுங்க அதிகாரிகள் வேலூர் பயணியிடம் விசாரித்த போது, இலங்கையில் இருந்து புறப்படும் சமயத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும், அதை மதுரை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிவித்துள்ளார். யார் அந்த நபர் என்றும், எதற்காக, யாருக்காக இந்த வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டன என்றும் அதிகாரிகள் தரப்பில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து மதுரை விமானநிலைய சுங்க இலாகாவினர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' செல்லும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கியது.
- TrekTamilnadu மலையேற்ற முகாம் திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Trek TamilNadu இணையதளம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "TrekTamilNadu என்பது சாகசத்தை விட மேலானது. 3 மாதங்களில், 4,792 மலையேற்றப் பயணிகள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ. 63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதில், ரூ. 49.51 லட்சம் பயணிகளை அழைத்து சென்ற பழங்குடி இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. சுற்றுலா பழங்குடி மக்களுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது.
காட்டுத்தீ சீசன் முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் பாதைகள் மீண்டும் திறக்கப்படும். மலையேறுபவர்களை இயற்கை எழிலுடன் வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
- நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு திரளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதனை தடுக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். குரங்குகளை பிடிக்க அப்பகுதியினர் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்று வேளிமலை வனசரகத் திற்குட்பட்ட வடக்கு பீட் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க முடிவு செய்து கூண்டு வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதில் நேற்று 32 குரங்குகள் சிக்கியுள்ளன. அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்து வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
- உசிலம்பட்டி பகுதியில் முள்ளம்பன்றியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளுக்குள் முள்ளம்பன்றி புகுந்தது. இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
உடனே இதுகுறித் து உசிலம்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் திருவள்ளுவர் நகரில் முள்ளம்பன்றியை பார்க்க கூட்டம் கூடியது. இதனால் முள்ளம்பன்றி அங்கிருந்து கால்வாய்க்குள் இறங்கி மாயமானது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி பென்சியோ தலைமை யிலான வன குழுவினர் முள்ளம்பன்றியை தேடி பார்த்தனர். ஆனால் பிடிபடவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் இதுவரை சிக்கவில்லை.
முள்ளம்பன்றியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி, மேலக் கோட்டை, ஆலம்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள், மயில்கள் காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான்கள் குடிநீருக்காக அடிக்கடி கிராமங்களுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் விலங்குகள் ரோட்டை கடக்கும்போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே தனியார் நிறுவனத்தின் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 வயதுடைய காட்டுப்பன்றி இறந்து கிடந்தது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் இறந்த கிடந்த காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உசிலம்பட்டி வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
- 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும் ஆமைக்கு ஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு,தொடுவாய்,திருமுல்லைவாசல், கூழையாறு,வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோர பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்பு க்காடுகளில் முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று விடும். இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாத்து வைப்பதற்காக வனத்துறையின் சார்பாக கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் மூலம் சேகரிக்கப்படும் முட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள பொறுப்பாகங்களில் பாதுகாக்கப்பட்டு 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும்
ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.
இந்த ஆண்டு தற்போது வரை 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமைக்குஞ்சு குறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இத்தகவலை சீர்காழி வனச்சரகர் டேனியல் தெரிவித்துள்ளார்.
- கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தை மாத பவுர்ணமி வருகிற 5-ந் தேதியும், பிரதோஷத்தை முன்னிட்டும் நாளை (3-ந்தேதி) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது, இரவில் கோவில் பகுதியில் தங்கக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது.
சதுரகிரி மலைப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் நாளை மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
- வீடுகளுக்குள் இருந்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி
- 10 குரங்குகள் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
மேக்காமண்டபம் கோதநல்லூர் அருகே மாராங்கோணம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
இந்த குடியிருப்புகளுக்குள் அடிக்கடி குரங்குகள் புகுந்து வந்தது. மேலும் வீடுகளுக்குள் இருந்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதையடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளிமலை வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அந்த குரங்கு களை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். குரங்கு களை பிடிக்க அந்த பகுதி யில் கூண்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
நேற்று காலை அந்த பகுதி யில் கூண்டுகள் வைக்கப் பட்டது. அப்போது அங்கு வந்த 10 குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. கூண்டுக் குள் குரங்குகள் சிக்கியதை யடுத்து அந்த குரங்குகளை மீட்க வனத்துறை அதிகா ரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர். கூண்டுக்குள் சிக்கிய 10 குரங்குகளையும் வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பின்னர் அந்த குரங்கு களை வேளிமலை சரகத் துக்குட்பட்ட பாதுகாப்பான வனப் பகுதிக்கு கொண்டு விட்டனர். ஒரே இடத்தில் 10 குரங்குகள் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர்
- அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படக்கூடிய இச்சாலையில் மூடுவது முறையல்ல
- இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி:
ஆறு காணி பகுதியில் இருந்து சூரக்காணி கேர ளாவையொட்டி இருக்கக் கூடிய பகுதிகளுக்கு செல் லக்கூடிய சாலையின் குறுக்கே சோதனை சாவடி உள்ளது. தற்போது வனத்துறையினர் திடீரென்று கேட் அமைத்து மூடுவதற்காக கேட்டுடன் வந்து சாலையை மூடுவ தற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இப்பகுதியில் கேட்டு அமைத்து தடைசெய்தால் யாரும் வனத்துறையின் அனுமதி இல்லாமல் சாலை யை கடக்க முடியாது. ஒவ்வொரு முறையும் சாலையை கடக்கும் பொழுதும் கையெழுத்து போட்ட பின்பு தான் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் செல்லமுடியும். இரவு நேரங்களில் கேட்டை திறந்து தருவதற்கோ திடீரென்று சாலையை கடப்பதற்கோ பொதுமக்களுக்கு இயலாது. ஆகையால் இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறி யுள்ளனர்.
இது சம்பந்தமாக நேற்று மாலை சுமார் மாலை 5 மணி அளவில் தொடங்கிய போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. பின்னர் திருவட்டார் இன்ஸ்பெக்டர், கடையால் மூடு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்டிஓ மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர்களுடன் கலந்துரையாடிய தீர்மா னிக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்தபின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
கடையால்பேரூராட்சி தலைவர் கூறும்போது, கடையால் மூடு பேரூராட்சி ஆனது நிலப்பரப்பில் பெரிய பேரூராட்சி மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பேரூராட்சி எல்லா தரப்பு மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர்.கேரளா பகுதியோடு ஒட்டி இருக்கக்கூடிய பேரூராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர தேவைகள் என் றால் கேரளாவிற்கு அதாவது திருவனந்தபுரம் மாவட் டத்தை அமைந் துள்ள பனச்ச மூடு, வெள்ள றடை, அம்பூரி, ஆனபாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கக் கூடிய பகுதியில் வெகு விரைவாக சென்று வரவும் ஆனப்பாறையில் அமைந்துள்ள கேரளா அரசின் அரசு மருத்துவ மனைக்கு அவசர சிகிச் சைக்காக செல்லவும் இப்பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதேபோன்று திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்லக்கூடிய நோயாளி களை இச்சாலைவழியாக தான் கொண்டு செல்ல வேண்டும். எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிகம் பயன்படக்கூடிய இச்சாலையில் சோதனை சாவடி இருந்தும் மறுபுறம் வனத்துறையினர் கேட்டு போட்டு மூடுவது என்பது முறையல்ல அதை ஒரு போதும் அனுமதிக்க முடி யாது என பேரூராட்சி தலைவர் கூறியுள்ளார்.
- ரப்பர் பால் வெட்ட சென்ற போது சிறுத்தை குதித்து ஓடியது. பதறிப்போன ஹெலன்மேரி அங்கிருந்து ஓட்டம்
- நடமாட்டம் இருந்தது காட்டு பூனையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
நாகர்கோவில் :
தக்கலை அருகே வேலிமலை வன பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். சரல் விளை பகுதியைச் சேர்ந்த நெல்சன் என்பவரது மனைவி ஹெலன் மேரி (வயது 40). இவர், குழிவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்ட சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை ஒன்று குதித்து ஓடியது. பதறிப்போன ஹெலன்மேரி அங்கிருந்து ஓட்டம் பிடித்து நடந்த சம்பவத்தை பொது மக்களிடம் தெரிவித்தார்.
மேலும் கொரங்கேற்றி மலைப் பகுதியில் 3 குட்டிகளுடன் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிச்சிகல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததையும் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.இந்த நிலையில் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட பகுதிக்கு சென்றனர்.அந்த பகுதியில் 4 நவீன காமிராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், வேளிமலை வனப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். நடமாட்டம் இருந்தது காட்டு பூனையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய அந்த பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இரவு பகலாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து கேமராவில் கண்காணிக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது.
- 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் ஊட்டி, கூடலூா், குன்னூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தாடா பகுதியில் மலை ெரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள வனத்தில் வெயிலின் காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அருகில் இருந்த செடி, கொடிகள் மீது பரவியது. இதில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் இருந்த செடி, கொடிகள் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊட்டி தீயணைப்புத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். வனப்பகுதியில் காட்டுத் தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது.