என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 190427"
- கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
- குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.
- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
- பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.
பரமக்குடி
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ-496 மதிப்பெண்களும், மாணவர் அபிஷேக்-494 மதிப்பெண்களும் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்குழு சார்பில் பரிசு வழங்கி பாராட்டினர்.
இதில் கல்வி குழுத் தலைவர் மலேசியாபாண்டியன், கல்விக்குழு செயலாளரும், தாளாளருமான அழகர்சாமி, பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் பாஸ்கரன், துணைச் செயலாளர் செல்லக்காரி, கல்வி குழு உறுப்பினர்கள் போஸ், சந்திரசேகரன், ஹரிகிருஷ்ணன், முதல்வர் பூமாதேவி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.
- ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள்.
- மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்!
உங்களுடைய அன்பு குழந்தை தூங்கும்போது அருகில் சென்று அதிக ஓசை இன்றி ஆனால் திருத்தமாக கீழ்க்கண்ட வாசகத்தை சொல்லுங்கள்.
*என் மகனே(மகளே)! நீ வாழ்க!
*நீ நல்ல முயற்சி உடையவனாக இருக்கிறாய்!
*உடல் நலம் மிக்கவனாக இருக்கிறாய்!
*நல்ல சூழ்நிலை பெற்றவனாக இருக்கிறாய்!
*நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்!
*நன்கு உழைப்பவனாக நீ வளர்கின்றாய்!
*வாழ்வில் வெற்றி பெறுகின்ற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கின்றாய்!
*நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பி இருக்கிறது!
*உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது!
*நீ அருளாற்றல் பெற்றவனாக நல்ல அறிவுடனும் நலத்துடனும் வாழ்க வளமுடன்!
என அனுதினமும் அவனை வாழ்த்துங்கள்.
அவன் ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள். அவனது ஆல்ஃபா மனநிலை அதனை ஏற்று, அவனது ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டுச் சூழல் தோன்றும். இதை சொல்லச் சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அவன் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். உங்கள் பேச்சும், தொணியுமே மாறும், சூழல் மாறும்! எண்ண அலைகள் உங்கள் குழந்தையை தாக்குவதற்கு பதிலாக, அவனை தழுவி அன்பு செய்யும்! மனம் மாறும்! மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்! வாழ்த்தி வாழ்த்தி பாருங்கள் ! வளத்தை சேருங்கள் !
- வேதாத்திரி மகரிசி
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
- நிகழ்ச்சியின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
சிவகிரி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை. தலைமை கழக நிர்வாகிகளாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி., தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில மருத்துவ அணி தலைவர் மருத்துவர் கனிமொழி, என்.வி.என்.சோமு, மாநில மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பாராட்டினார்.
- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம்
- ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
கடலூர்:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று விருத்தாசலம் ஆலடி ரோட்டில் அமைந்துள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து உற்சாகத்துடன் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .
- ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
- பசும்பொன் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பிருந்து அறநெறியுடன் பிறருக்கு ஈதல் வேண்டும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் போதித்த நன்நெறிகளை கடைபிடித்து ரம்ஜான் பெருநாளை திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். அனை வருக்கும் எனது சார்பிலும், அ.தி.ம.மு.க. சார்பிலும் ரம்ஜான் வாழ்த்துக்களை உவகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட மண்ணில் மத நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கம் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகிற சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து சமய நல்லிணக்கத்தை பேணிக்காத்து வருவது திராவிட இயக்கங்களின் தலையாய கடமையாகும்.தமிழ் மண்ணில் திராவிட மாடல் அரசை திறம்பட நடத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து வருவதோடு குறிப்பாக சிறுபான்மை மக்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, பழங்குடி, பட்டியல் இன மக்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு அரணாக, கேடயமாக, பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகிறது,
சாதி, சமய மோதல்களை தவிர்த்து ஒன்றுபட்ட திராவிட சமூகமாக சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, மனிதநேயம் மலர்ந்திட சபதமேற்று ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டா டுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்பை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
- ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரதவீதியில் உள்ள சிக்கந்தர்தர்ஹா பள்ளி வாசல் நிர்வாகிகளான சீனியர் ஒஜீர்கான், செயலாளர் ஆரிப்கான், துணைச் செயலாளர் மாபூப்பாட்ஷா, ஆகியோர் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தொழுகை விரிப்புகள் மற்றும் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹாவின் புகைப்படத்தை யும் ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றியசெயலாளர் நிலையூர்முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ப.மோகன்தாஸ், கலைப்பிரிவு இணைச்செய லாளர்கள் பாலகிருஷ்ணன், சவுந்தரம், சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர் அலி மற்றும் சாகுல்ஹமிது, இளைஞரணி சேக்முகமது நஜீர், பைசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
- தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்றுள்ள இவருக்கு, மாணிக்கம் தாகூர்
எம்.பி. வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
33 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்றுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளது.
கடந்த மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்பத்தூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 விநாடியில் இறங்கி சாதனை படைத்தீர்கள்.
இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக காஷ்மீரில் லடாக் பகுதியில் சுமார் 5,500 அடி உயர பனிமலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளீர்கள்.
தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன். தங்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.
இன்று 10-வது நாள் மலையேறும் பயணம் மேற்கொண்டுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஈஸ்டர் தினத்தையொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அடுத்தவாரம் 22-ந்தேதி கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையையொட்டி பாரதிய ஜனதாவினர் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர்.
கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
- முகாமில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.
- தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக வென்றிலிங்கபுரம், தட்டான்குளம், ஈச்சந்தா ஆகிய கிராமங்களில் 7-நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து பேசினார்.
இதில் தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் குமாரி செல்வி, மேனகா, பேராசிரியர் கணபதி, வென்றிலிங்கபுரம் ஊராட்சி தலைவி சுமதி, தொழிலதிபர் கனகவேல் மற்றும் பெஞ்சமின் நிர்மல் முத்துக்குமார், கணேசன் உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி இல்ல திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது.
- இதில் எம்.எல்.ஏக்கள்-முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.
மதுரை
மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இல்ல திருமணம் மதுரையில் நாளை மறுநாள் நடக்கிறது.
நடிகர் விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். தங்கபாண்டி - அருணா தேவி ஆகியோரது மகன் எஸ். ஆர். டி. சஞ்சய், மதுரை கரிமேடு சரவணன்-சத்யா ஆகியோரது மகள் லத்திகா. இவர்களது திருமணம் நடிகர் விஜய்-சங்கீதா நல்லாசியுடன், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்ஸி ஆனந்து நல்வாழ்த்துக்களுடன் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் உள்ள எம்.ஆர்.சி. மஹாலில் நாளை மறுநாள் 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
மணமக்கள் சஞ்சய்-லத்திகா திருமண விழாவில் எம்எல்ஏக்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜன்செல்லப்பா, புதூர் பூமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன், திரைப்பட தயாரிப்பாளர் ஜி.என். அன்புசெழியன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கபாண்டி குடும்பத்தினர் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு சிவகங்கை கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
- கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.
காரைக்குடி
காரைக்குடி வித்யாகிரி பள்ளி குழுமம் சார்பில் செஸ் போட்டியில் இந்திய அளவில் 79, தமிழ்நாடு அளவில் 28-வது இடம் பெற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த மாணவர் பிரனேசுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் குழும தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, பள்ளிக்குழும தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகம்மது மீரா முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், இளைய தலைமுறையினர்கள் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் போல் திகழ்வதற்கு, தனித்திறமைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறுவயதில் இருந்து செஸ் விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று, 2020ல் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்று, அதில் 2,400 புள்ளிகள் பெற்று, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று பெருமை சேர்த்தார்.
அதனைத்தொடர்ந்து, ஸ்வீடனில் நடந்த ரில்டன் கோப்பை செஸ் போட்டியில் பிரனேஷ் பங்கேற்று 2,500 புள்ளிகள் பெற்று, இந்தியாவின்
79 -வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின்
28-வது கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பையும் பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகருக்கு பெருமை சேர்த்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
இனிவரும்கா லங்களிலும் பிரனேஷ் 2,600 புள்ளிகளை விரைவில் பெற்று, சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொ ணர்வதற்கு அடிப்படையாக இருந்த செஸ் கழக அமைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வித்யாகிரி பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள், குறிப்பாக உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் கடின பொருளாதார ரீதியாகவும் சமாளித்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைத்து, உறுதுணையாக இருந்து விடாமுயற்சியுடன் உலக சாதனை படைக்க செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாக உள்ளனர்.
உலக அளவில் மொத்தம் 2,000 கிராண்ட் மாஸ்டர்கள் தான் உள்ளனர்.ஆனால் பிரனேஷ் தனது 16 வயதில் வாழ்நாள் சாதனை படைத்துள்ளார்.இவரை போன்று பல்வேறு மாணவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து உருவாக வேண்டும்.கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர் பிரனேசுக்கு வித்யாகிரி கல்வி குழுமம் சார்பில் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. தொழிலதிபர் பழ.படிக்காசு, செஸ் கழக தலைவர் கருப்பையா, செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ஹேம மாலினி சுவாமிநாதன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்