search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை"

    • குமரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினசரி 2 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
    • கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில்:


    குமரி மாவட்டத்தில் கொரோனா முதல் இரண்டு அலையின் போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.


    3-வது அலை தாக்கத்தி லும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து உள்ளனர்‌. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 19420 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 79 ஆயிரத்து 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து உள்ளனர்.

    தற்போது 4-வது அலை பரவ தொடங்கியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை களை மேற்கொ ண்டு வருகிறார்கள்.


    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்த நிலையில் கடந்த வாரத்தில் தினசரி 2 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் 350-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் யாருக்கும்கொரோனா பாதிப்பு இல்லை.


    இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் முன்சிறை ஒன்றியத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிக்க ப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதா ரத்துறை அதிகா ரிகள் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த வர்களின் விவரங்களை சேகரித்து அவர்களையும் தனிமை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 47 வயது இளம்பெண் ஒருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.
    • புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

    • தக்கலை போலீஸ் படையினர் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • புதூர் பகுதியில் நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனை நடத்தியபோது 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீஸ் படையினர் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது புதூர் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் நைசாக ஓட முயற்சித்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் இருந்த பையை சோதனை செய்த போது பிராந்தியுடன் கூடிய மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனே அவரை கைது செய்து போலீசார் அவரது கையில் இருந்த  விசாரனையில் கைது செய்யபட்ட நபர் புதூர் கொட்டாரத்துவிளையை சேர்ந்த தொழிலாளி சசிகுமார் என்று தெரிய வந்தது.

    • கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் போலீசார் வடக்கு பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வடக்கு பேட்டை மார்க்கெட் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடையாக சோதனை செய்தனர். அப்போது ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும்படியாக சிறிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது சத்தியமங்கலம் வடக்குப்பட்டி பகுதியை சேர்ந்த ஆசாராம் (32)என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவருக்கு உதவியாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு போலீசார் சென்றபோது கடையின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். போலீசை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார்.

    அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி(48) என்பதும், பையை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இவருக்கு உதவியாக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேட்டன் என்பவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் ஆவாரா? என எதிர்ப் பார்க்கப்படுகிறது. #Eggnutritioncorruption

    சேலம்:

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், அங்கன் வாடிமையங்களுக்கும் திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்கள் சப்ளை செய்து வருகிறது.

    இந்த நிலையில் கிறிஸ்டி நிறுவனம் போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததால் அதன் துணை நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது 1,350 கோடி ரூபாய் அளவில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.

    மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவி கிறிஸ்டி நிறுவனத்திற்கு உதவியது தொடர்பாக சில ஆதாரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சென்னை நெற்குன்றத்தில் உள்ள சுதாதேவியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிகாரி சுதாதேவி விடுப்பில் சென்றார். தற்போது அவர் மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.


     

    வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்த அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சுதாதேவி சஸ்பெண்டு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் கடந்த 11-ந் தேதி சென்னை தரமணியில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதற்கு 6 நிறுவனங்கள் டெண்டர் கோரி இருந்தது. இதில் 3 நிறுவனங்கள் கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள்.

    கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளதால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க கூடாது என மற்ற நிறுவனங்களும், கோழிப் பண்ணையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 6 நிறுவனங்களுக்கும் டெண்டர் வழங்காமல் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்க கிறிஸ்டி நிறுவனம் ஏற்கனவே பெற்ற டெண்டர் இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் மறு டெண்டர் விட்டு பள்ளிகளில் சத்துணவு முட்டை வழங்க வேண்டும். டெண்டர் கோர கால தாமதம் ஏற்பட்டால் கோழிப் பண்ணையாளர்களிடம் நேரடியாக தமிழக அரசே முட்டைகளை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும், இதனால் முட்டை வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Eggnutritioncorruption

    ×