search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் ஆவாரா?
    X

    வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் ஆவாரா?

    வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் ஆவாரா? என எதிர்ப் பார்க்கப்படுகிறது. #Eggnutritioncorruption

    சேலம்:

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், அங்கன் வாடிமையங்களுக்கும் திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்கள் சப்ளை செய்து வருகிறது.

    இந்த நிலையில் கிறிஸ்டி நிறுவனம் போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததால் அதன் துணை நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது 1,350 கோடி ரூபாய் அளவில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.

    மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவி கிறிஸ்டி நிறுவனத்திற்கு உதவியது தொடர்பாக சில ஆதாரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சென்னை நெற்குன்றத்தில் உள்ள சுதாதேவியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிகாரி சுதாதேவி விடுப்பில் சென்றார். தற்போது அவர் மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.


     

    வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்த அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சுதாதேவி சஸ்பெண்டு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் கடந்த 11-ந் தேதி சென்னை தரமணியில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதற்கு 6 நிறுவனங்கள் டெண்டர் கோரி இருந்தது. இதில் 3 நிறுவனங்கள் கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள்.

    கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளதால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க கூடாது என மற்ற நிறுவனங்களும், கோழிப் பண்ணையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 6 நிறுவனங்களுக்கும் டெண்டர் வழங்காமல் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்க கிறிஸ்டி நிறுவனம் ஏற்கனவே பெற்ற டெண்டர் இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் மறு டெண்டர் விட்டு பள்ளிகளில் சத்துணவு முட்டை வழங்க வேண்டும். டெண்டர் கோர கால தாமதம் ஏற்பட்டால் கோழிப் பண்ணையாளர்களிடம் நேரடியாக தமிழக அரசே முட்டைகளை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும், இதனால் முட்டை வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Eggnutritioncorruption

    Next Story
    ×