என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை"

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நுள்ளிவிளையை அடுத்த மூலச்சன்விளையை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி சிந்து (25). இவர்களுக்கு ரெஜன் (2) என்ற மகன் உள்ளான்.

    கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிந்து வடக்கு நுள்ளிவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தாய் வீட்டில் இருந்த சிந்துவை குழந்தையுடன் காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிந்துவின் தாயார் ராணி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துவையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து, ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.
    • தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தாராபுரம், எம்.எஸ்.பி., நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ஆர்த்தி இவர்களுக்கு, யாழினிஎன்ற ஒரு வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து,ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.

    தொடர்ந்து, தாராபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தைஉட்பட, 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையத்தை அடைந்த போது, வேகத்தடை இருப்பதுதெரியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஏற்றினார். அப்போது, வண்டியில் அமர்ந்திருந்த ஆர்த்தியின் கையில் இருந்த குழந்தை கை தவறி ரோட்டில் விழுந்து படுகாயமடைந்தது.

    இதையடுத்து தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,பின், திருப்பூருக்கு கொண்டு செல்லும் போதுகுழந்தை பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-202-ம் கல்வியாண்டில் முதலா மாண்டு தொழிற்கல்வி பட்டப்படிப்புகளான பி.இ., பி.டெக், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட். மேலும் இதுபோன்ற படிப்புகள் பயிலும் படை அலுவலர் தகுதிக்குகீழ் உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப் பங்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இக்கல்வி உதவித்தொகை பெற குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற தகுதி உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் முதற்கட்டமாக இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கல்வி சலுகை பெற இணையதளத்தில் பி.எம்.எஸ்.எஸ். என்ற தலைப்பின் கீழ் சான்றுகளுக்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையம், வங்கி மற்றும் இவ்வலுவ லகத்திலிருந்து உரிய சான்று பெற்று தேவையான ஆவ ணங்களுடன் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதன் அசல் களை உடனடியாக (மூன்று நாட்களுக்குள்) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து சரிபார்த்து கொள்ள வேண்டும்.

    இணையதளத்தில் விண்ணப் பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் பெண் குழந்தை களுக்கு ஆண்டொன் றுக்கு ரூ.36 ஆயிரம், ஆண் குழந்தை களுக்கு ரூ.30 ஆயிரம் கல்வி இறுதி ஆண்டுவரை தொடர்ச்சியாக வழங்கப் படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தை (தொலை பேசி எண்.04652-243515) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பண்டார விளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் ஜஸ்டின்ராஜ் துக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர்.
    • டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குடும்பம் சமத்துவம் பகுதியை சேர்ந்தவர் மாவீரன். இவரது மனைவி சரண்யா (வயது 26).கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சரண்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • மேலூர் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி போதும் பொண்ணு. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான போது (35). இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் . சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சில் கர்ப்பிணியை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் வழியிலேயே பிரசவ வலி அதிகமானமானதால் வேன் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் போதுவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.ஆம்புலன்ஸ், குழந்தை, Ambulance, baby

    • கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு புகார்கள் வந்ததன.
    • பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் நால்ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக, சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் மகளிர் போலீசார் நால்ரோடு பகுதியில் கைக்குழந்தைகளுடன் இருந்த கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி , ரோசன்பாய் ஆகிய 2 பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவில் பெண் குழந்தை திடீர் பலி.
    • இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 26). இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு வர்தினி (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அதை தொடர்ந்து குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலின் பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் குழந்தை எவ்வாறு இறந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் ராபின்ஸ்டன் (வயது 48). மீனவர். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இதனால் இவர்கள் தனது ஒரே மகளுடன் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10-30 மணிக்கு இவர்கள் தூங்க சென்று விட்டனர். அதன் பிறகு ராபின்ஸ்டன் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணா ததை பார்த்து திடுக்கிட் டார். உடனே அவன் தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்குஉள்ள ஒரு அறையில் அவரது மனைவி ரேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் அவர் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • அப்போது, 18 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசுகள் மற்றும் இதர வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர், தொழிலக பாதுகாப்பு சுகாதா இயக்க அதிகாரிகள் ஆகியோர் நேற்று சேலம் சிவதாபுரம், பனங்காடு பகுதிகளில் உள்ள வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் பட்டறைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, 18 வயதுக்கு

    உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள தாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின்போது, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சைல்டு லைன் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதை தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்மூலமாக குறைந்தபட்ச 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    • மருத்துவரின்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். (35.) விவசாயியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ரம்யா (26) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    2-வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    நேற்று காலை 11 மணி அளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மருத்துவமனை செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயி லாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்க்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர் இன்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியவாறு நள்ளிரவு வரை தலைமை மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான போலீசார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி முன்னிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பிரசவம் நடந்த போது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×