search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுவெடிப்பு"

    • பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
    • இதில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங் மாவட்டத்தில் இன்று காலை 8.35 மணிக்கு பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.

    இதில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

    முதல் கட்ட விசாரணையில், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், ரிமோட் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை வாகனம் மற்றும் சில ஆட்டோக்கள் சேதமடைந்தன.

    குண்டு வெடிப்புக்கு காரணமானோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலுசிஸ்தான் மாகாண முதல் மந்திரி சர்பராஸ் பக்டி பள்ளி மாணவர்கள் மீதான குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தானில் இயங்கும் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அந்த டெலிகிராம் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
    • இந்திய கோழை ஏஜன்சியும் அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்கலாய்

    தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய புலன் விசாரணை அமைப்பு, தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோரும் இதை விசாரித்துவருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று டெலிகிராமில் அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அந்த டெலிகிராம் சேனலில் பதிவிடப்பட்டவை டெல்லி குண்டுவெடிப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

    அந்த பதிவில், டெல்லி குண்டுவெடிப்பு வீடியோ இடம்பெற்றுள்ளது. மேலும் கீழே காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாட்டர் மார்க் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி,' இந்திய கோழை ஏஜன்சியும் [Indian coward agency] அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்களை [காலிஸ்தான் ஆதரவாளர்களை] அமைதிப்படுத்த, நமது குரலை நசுக்க கேடுகெட்ட ரவுடிகளை பணம் கொடுத்து ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கின்றனர்.

    அப்படி நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம் . நாம் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோம் என்றும், நம்மால் என்ன செய்ய முடியும் என்றும்,  அவர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது.  நம்மால் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும். #காலிஸ்தான் ஜிந்தாபாத் #ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு குறித்து என்ஐஏ விசாரணையில் இறங்கியுள்ளது.

     

    முன்னதாக கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளதாகவும், லாரன்ஸ் பிஸ்னோய் ரவுடி கும்பலுடன் இந்திய அதிகாரிகள்  தொடர்பு வைத்துள்ளதாகவும் கனடா குற்றம் சாட்டியது. மேலும் அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி தொடர்பாக இந்திய உளவுத்துறை [RAW] முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது
    • பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது.

    தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசால் டெல்லியின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் அதிஷி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிஆர்பிஎப் பள்ளி அருகில் நடந்த இந்த வெடிவிபத்து டெல்லியின் பாதுகாப்பு அமைப்பு சிதைந்துவருவதைக் காட்டுகிறது.

    டெல்லியின் சட்ட ஒழுங்கு மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் வருகிறது. ஆனால், பா.ஜ.க. அதை கவனிப்பதை விட்டுவிட்டு, டெல்லி அரசை முடக்குவதையே முழு நேர வேலையாக செய்து வருகிறது. மும்பையில் 1990 களில் இருந்த நிழல் உலகைப் போல் தற்போது டெல்லி உள்ளது.

    நகரத்தில் வெட்டவெளிச்சமாகத் துப்பாக்கிச்சூடும் வழிப்பறிகளும் நடக்கின்றன . பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததை போல, பள்ளிகள், மருத்துவமனை என அனைத்து கட்டமைப்பையும் சிதைத்து விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த விமர்சனத்தால் கொந்தளித்த பாஜக அதிஷியை பொம்மை முதல்வர் என்று விமர்சித்துள்ளது. மேலும் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது முதலமைச்சர் குடியிருப்பில் அதிக செலவு செய்து பொருட்களை வாங்கியாக ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளது.

    • குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
    • அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.

    டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

     

    இன்று காலை சரியாக 7.47 மணிக்கு சிஆர்பிஎப் பள்ளி அருகே பிரஷாந்த் விகாரில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரி அமித் கோயல் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

    இந்த வெடிவிபத்து காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது. 



    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.
    • வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சி செய்தனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையம் [Artillery Centre] செயல்பட்டு வருகிறது. இங்கு ஐதராபாத்திலிருந்து அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.

     

    இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத குண்டு வெடித்துள்ளது. இதில் கோஹில் விஸ்வராஜ் சிங் [20 வயது], சைபத் சித் [21 வயது] என்ற இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

     

    உடனே அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

    • குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • பிளாஸ்டிக் பையில் இருந்தே வெடித்ததாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் ப்லோக்மான் தெருவில் [Blochmann Street] உள்ள எஸ்.என்பானர்ஜி சாலையில் சிறிய அளவிலான திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் பிளாஸ்டிக் பையில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் அங்கு வசித்து வந்த குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பையில் இருந்தே குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் டாகடர் கொலையை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடித்தது. அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தளங்களை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மொகடிஷு ஓட்டலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

    ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின.
    • படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    டமாஸ்கஸ்:

    தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே சாலையில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

    இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
    • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் - என்.ஐ.ஏ

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் ஷிவமோகா பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்தியதில் 2 இளைஞர்களை கைது செய்தனர்.

    இந்நிலையில் அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
    • குண்டுவெடிப்பில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.

    ஈரானின் கெர்மான் பகுதியில் உள்ள முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "ஈரானின் கெர்மன் நகரில் ஏற்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது."

    "இந்த கடினமான சூழ்நிலையில், ஈரான் அரசு மற்றும் பொது மக்களிடம் எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் காயமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருடனேயே உள்ளது," என குறிப்பிட்டுள்ளார். 

    • வாகனங்கள் தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
    • தீயணைப்பு படையினர் வாகனங்களில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    மிலன்:

    இத்தாலியின் மிலன் நகரின் மத்திய பகுதியில் இன்று குண்டு வெடித்ததுபோன்ற பயங்கர சத்தம் கேட்டது. சாலையோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு வேன் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பிடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. வேன் பற்றி எரியும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

    ×