என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரம்ஜான்"
- இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.
இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் மே 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் மிருணாலினி -க்கும் இடையே திருமணம் நடக்கிறது. இத்திருமணத்தில் மிருணாலினிக்கு விருப்பம் கிடையாது. எப்படி விஜய் ஆண்டனி அவரது காதலை தன் மனைவியான மிருணாலினிக்கு புரிய வைக்கிறார் அதற்க்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும்.
- ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், இவரது புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.
அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை நாளான (ஏப்ரல் 11) இன்று சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் கூடினர். ஒரே சமயத்தில் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் ஒன்று கூடியதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், காவலர்களால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க கூடிய ரசிகர்கள் மீது தடியடி நடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான் கான் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திற்கு "சிக்கந்தர்" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
#WATCH | Maharashtra: Police uses mild lathi-charge to disperse the large gathering outside the residence of Actor Salman Khan, in Mumbai. pic.twitter.com/mKcqXoDYr5
— ANI (@ANI) April 11, 2024
- ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து.
- பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.
இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.
- ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
- புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது
ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பலனடைகின்றனர்.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை மட்டும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது.
- கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை எட்டயபுரம் கால்நடை சந்தைக்கு அடுத்தபடியாக இந்த மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.
இங்கு வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நெல்லை சுற்று வட்டார பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் ஆடு விற்பனையானது சுமார் ரூ.3 கோடி அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது. கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தை பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.
- வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
- மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது.
ஆடு, மாடுகளுடன், கோழி, கருவாடு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுவதால் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றாக இது திகழ்கிறது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்கிழமைகளில் ஆடு விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உட்பட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடு, மாடு விற்பனை அதிகளவில் காணப்படும். வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இன்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளுடன் திரண்டனர்.
இதற்காக மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது. அவற்றை வாங்க ஏராளமான வியாபாரிகள், பொது மக்களும் குவிந்தனர்.
- ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன.
- ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும்.
சென்னை:
ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையிலும் இன்று முதல் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடுகளே பூர்த்தி செய்கின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளரான ராயபுரம் அலி கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும். வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.
இதனால் வெளி மாவட்டங்களை போன்று சென்னையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.
- ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.
திருமங்கலம்:
ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் மிக முக்கிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம், ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதாகவும், ரம்ஜான் பண்டிகையால் வரத்து குறைவு என்பதால் வேறு வழியின்றி வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அதிக பணத்தை கொண்டு வர முடியாததால் பகிர்ந்து கொண்டு செல்வதாகவும், ஏற்கனவே எங்களை நம்பி ஆடுகளை கொடுத்து விடும் மக்களுக்கு நாங்கள் உரிய முறையில் பணத்தைக் கொண்டு செலுத்த வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அதிக தொகையை கொண்டு செல்வதில் அச்சம் நிலவுவதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகாலை 2 மணி முதல் ஆடு விற்பனை களை கட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.
- இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது.
- தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும்.
செஞ்சி:
செஞ்சி வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. செஞ்சி பகுதி மலைகள் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இதனால் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் ஆடுகள் விற்பனையாகும்.
வழக்கம்போல் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது. ஆனால் கடந்த காலங்களைப்போல் ஆடுகள் அமோகமாக விற்பனையாகவில்லை மந்தமாகவே இருந்தது. தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும். இதனால் இப்போது இந்த வார சந்தையில் வியாபாரிகள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியது என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
- இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.
- பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நான் படத்திற்கு பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில் நடித்தார். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மக்களிடையே கொண்டாடபட்டது.
விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் பிச்சைக்காரன். அதற்கடுத்து கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்தார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.
- ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10-ந்தேதி அறிவியல் தேர்வும், 12-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11-ந்தேதி ஈகைப் பெரு நாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.
நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும், தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஏப்ரல் 10-ந்தேதி அன்றும் 12-ந் தேதி அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.
எனவே ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்