search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிவாரண்ட்"

    • பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 4 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

    இந்த நிலையில், ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச இந்தியாவுக்கு அதிக அழுத்தம் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுதந்திர போராட்ட வீரர் வேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
    • ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு.

    தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவின்படி, 97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

    உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வாரண்டை செயல்படுத்தி, ஜூலை 8ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.

    • பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
    • ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில்,பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டுள்ளது
    • போலீஸ் இன்ஸ்பெக்டருமான சண்முகசுந்தரம் கடந்த ஒராண்டாக 20 வாய்தாக்களுக்கு ஆஜராகவில்லை.

    கரூர்:

    கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கில் விசாரணை அதிகாரியான அப்போதைய பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டரும், தற்போது சேலம் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருமான சண்முகசுந்தரம் கடந்த ஒராண்டாக 20 வாய்தாக்களுக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் போக்சோ வழக்கில் ஆஜராகாமல் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு கரூர் கூடுதல் அமர்வு நீதிபதி நசீமாபானு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


    6 மாதமாக கோர்ட்டு சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாததால் பிடிவாரண்ட்

    திருச்சி:

    கோவை மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவ–டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்து–றையின–ருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீ–சாரும் ஈடுபட்டு வருகி–றார்கள். இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜூ என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜூவுக்கு கடந்த 6 மாதமாக கோர்ட்டு சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர் பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு ஆஜராக கடந்த 11-ந்தேதி திருச்சியில் பணியாற்றி வரும் ராஜூவுக்கு போலீசார் மூலம் நேரில் சென்று அழைப்பாணையை கொடுத்தனர். இருந்தபோதிலும் அவர் நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சரவணபாபு உத்தரவிட்டார். தற்போது ராஜூ பதவி உயர்வு பெற்று திருச்சி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    • குமாரபாளையம் நீதிமன்ற வழக்கு விசார ணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி. க்கு குமாரபாளையம் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
    • 2006ம் ஆண்டு பதியப்பட்ட 2 வழக்கில் சாட்சியம் அளிக்க, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம் சார்பில் பல முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நீதிமன்ற வழக்கு விசார ணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி. க்கு குமாரபாளையம் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

    திருநெல்வேலியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமயத்தில், 2006ம் ஆண்டு பதியப்பட்ட 2 வழக்கில் சாட்சியம் அளிக்க, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம் சார்பில் பல முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. விசார ணைக்கு ஆஜராகாததால், நீதிபதி மாலதி , டி.எஸ்.பி. சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModi
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், பிரிட்டன் நாட்டில் குடியேற நிரவ் கோடி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. #warrantagainstNiravModi #NiravModi
    ×